என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.
நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு உலகிற்கு மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. வெறுப்பும், வன்செயலும் கோலோச்சும் உலகில் அது ஓர் இறைவாக்கினரின் பிறப்பு. உண்மை விளம்பியவரின் பிறப்பு. இறைவனை தவிர வேறு எவருக்கும் மண்டியிடாத மாவீரத்தின் பிறப்பு. இயேசுவின் பிறப்பு உலகையே கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரிக்கச் செய்தது. அத்தகைய பேராளுமைக்கும், பேரன்பிற்கும் முன்னெடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமானார்.
எது நடந்தாலும் அவர் இறை நம்பிக்கையில் தளர்வுறாதிருந்தார். வன்முறைக்கு அன்பினால் பதிலுரைத்தார். தீமை புரியும் பகைவரையும் நேசிப்பது எப்படி என்று நமக்கு கற்றுத் தந்தார். கெத்சமனி தோட்டத்தில் நாம் வன்முறையை அகற்றி வாழ்தலின் தேவையை வலியுறுத்தினார். நம் கடவுள் அன்பின் கடவுள். சுதந்திரத்தின் கடவுள். வாழ்வின் கடவுள். மன்னிப்பின் கடவுள் என்பதை தெளிவுபடுத்தினார். தன்னலம் துறத்தலே சிறந்த ஜெபம், வாழ்வின் வரம் என்றார்.
இயேசு உண்மையின் வடிவமானவர். இயேசுவை மீட்பராக ஏற்கும் நாம் எத்தனை பேரை மீட்டுள்ளோம்? எத்தனை பேருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளோம்? ஒரு கிறிஸ்தவன் என்று யாரும் இருக்க முடியாது, இருந்தால் அவர் கிறிஸ்தவன் கிடையாது என்றார் மார்ட்டின் லூதர். இயேசு ஒரே மனமும் ஒரே வாழ்வும் கொண்டுள்ள ஒரு சமுதாயத்திற்கு உரியவர். தனித்தனியே வந்து, தனித்தனியே சாமி கும்பிட்டுவிட்டு, தனித்தனியே சென்று விடுவதற்கு பெயர் கிறிஸ்துமஸ் அல்ல.
தேவைக்கு மேல் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் உணவு பசித்திருப்போருக்குரியது. பயன்படுத்தாமல் நீங்கள் அடுக்கி வைத்துள்ள ஆடைகள் ஆடையின்றி இருப்போருக்கு உரியது. வீணே இடத்தை அடைத்துக் கிடக்கும் உங்கள் காலணிகள் வெறும் காலோடு நடப்போருக்குரியன. யாருக்கும் பயன்படாமல் நீங்கள் பதுக்கி வைத்துள்ள பணமும், மறைத்து வைத்துள்ள செல்வமும் ஏதும் இன்றி வாடும் ஆதரவற்றோருக்குரியது. சுருங்கச் சொல்வதென்றால் தேவையில்லாமல் நீங்கள் வாங்கிக் குவிக்கும் உங்களின் தேவைகள் யாவும் எங்கோ யாருக்கோ அடிப்படைத் தேவையாக பயன்படக் கூடியவை. அந்த யாரோ தான் நமக்கு அருகில் நமக்காக காத்துக் கிடக்கும் கடவுள். மனுவுரு எடுத்தார் கடவுள் என்றால் மனிதர் ஒவ்வொருவரும் கடவுள் உருவில் இருப்பவர் தான். எனவேதான் நாம் அனைவரிடமும் நீதியோடும் இரக்கத்தோடும் இருந்தாக வேண்டும். இதுவே நம்மோடு இருக்கும் கடவுளோடு நாம் இருப்பதற்கான அடிப்படைத் தகுதி.
கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் வைத்துள்ள கனவை நாம் நிறைவேற்றுவோமா?விண்ணரசை கொண்டு வருவோமா? மண்ணுலக மாந்தருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொண்டு வருவோமா? தேவைப்படுபவர்களுக்கு எல்லாம் உப்பாகவும், ஒளியாகவும், உரமாகவும், வரமாகவும் இருப்போமா? ஏழைகளின் தோழமையிலும் ஆதரவற்றவர்களின் புன்முறுவல்களிலும் நமது சாயல் வெளிப்படுமா? கடவுளிடம் இருந்து தப்பித்து ஓடுவதற்கு பெயர் ஜெபம் அல்ல. அவரை சந்திப்பதே ஜெபம். அவரோடு இணைந்து அனைவரையும், அனைத்தையும் மீட்க போராடுவதும் மாற்றங்களை கொண்டு வருவதும் தான் ஜெபம் என்பதை உணர்வோமா?
யூதர்கள் யூத மெசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைவரின் இதயங்களையும் அன்பால் நிரப்பிட உலக மெசியாவாக அவர் உருவெடுத்ததை நாம் உணர்கிறோமா? மனுவுரு என்பதையும், மனுமகன் என்பதையும் நாம் மானுடத்தின் மகுடங்களாக பார்க்கின்றோமா? மனிதனாக பிறந்தும் மனிதராக வாழ முடியாத ஏழைகள் வாழ்வதற்காக பிறப்பெடுத்தவரே இயேசு என்ற எளிய உண்மையை நம் நெஞ்சில் தாங்கி நிற்போமா? இன்று புதிதாக பிறக்கும் ஒவ்வொருவரிலும் இயேசு பிறக்கிறார்.
மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி
திண்டுக்கல் மறைமாவட்டம்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் இன்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும் நடைபெறும். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் 14-ந் தேதி நடைபெறுகிறது.
ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சபரிமலை தரிசனத்திற்கு தினசரி
60 ஆயிரம் பக்தர்களுக்கும், நேரடி உடனடி ஆன்லைன் முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கப்படும். மேலும் இன்று முதல் எருமேலி பெருவழிப்பாதை வழியாகவும் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். 35 கி.மீ தூரமுள்ள இந்த பாதையில் 25 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதி என்பதால் பலத்த கட்டுப்பாடுகளுடன் மட்டுமே ஐயப்ப பக்தர்கள் எருமேலி பெருவழி பாதை வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர்.
எருமேலியில் பக்தர்கள் உடனடி தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதே போல் எருமேலி கோழிக்கடவில் இருந்து அதிகாலை 5.30 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், அழுதக்கடவு, முக்குழியில் இருந்து காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல இன்பமான நிகழ்வுகள் உண்டாகும்.
மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள்ம மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதுவும் பிரதோஷம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையன்று பிறப்பது இன்னும் விசேஷமானதாகும்.
அப்படியான பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்கி இல்லம் திரும்ப வேண்டும்.
“பொன்” எனப்படும் தங்கத்திற்கு அதிபதி குரு பகவான் ஆவார். எனவே மார்கழி மாதத்தில் வியாழக்கிழமையில் வரும் சிறப்பான இன்றைய பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசிக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலகம், ராமச்சந்திரா பஷ்கரணி, பைராகிபட்டிடையில் உள்ள ராமாநாயுடு பள்ளிக்கூடம், மார்க்கெட் யார்டு ஆகிய 5 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் 50 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒமைக்ரான் பரவல் பாதிப்பை அடுத்து உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இந்த இலவச டோக்கன்கள் வழங்கப்படும்.
சாதாரண பக்தர்களின் வசதிக்காக ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம், 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் ஆகியவற்றில் முக்கிய பக்தர்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் வழங்கப்படும். முக்கிய பிரமுகர்கள் வழங்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி மாதம் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.
13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். வைகுண்ட துவாதசி அன்று அதிகாலை 5 மணியில் இருந்து காலை 6 மணி வரை ஏகாந்தமாக சக்கர ஸ்தானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நடக்கிறது.
கொரோனா பரவலை தடுக்க கவுண்ட்டர்களிலும், கோவில் உள்ேளயும் குழாய்கள் மூலம் (ட்ரை ஓசோன்) கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். அலிபிரி சோதனைச் சாவடி, திருமலையில் உள்ள அறை ஒதுக்கீடு மையங்கள், வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ், லட்டு கவுண்ட்டர்களில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துப் பக்தர்களும் 48 மணி நேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ், தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்ைற கட்டாயம் கொண்டு வர வேண்டும். பக்தர்கள் சரியாக முகக் கவசம் அணிய வேண்டும். இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.
ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை ெசய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் உள்ளூர் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனத்துக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட்டுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கு 1000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவாணி டிரஸ்ட் பக்தர்களுக்கு 1000 மகா லகு தரிசன (தூரத்தில் இருந்து வழிபடுதல்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
ஜனவரி மாதம் 14-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 9 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஆயிரம் வீதம் லகு (மூலவருக்கு சற்று அருகில் இருந்து வழிபடுதல்) தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ஆர்ஜித சேவையில் ஜனவரி மாதத்துக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரத்து 500 டிக்கெட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்களை சிறிய அளவில் குழுக்களாக பிரித்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந் தேதி திருப்படித் திருவிழாவும், அன்று நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி நாளை திருத்தணி முருகன் கோவிலில் படித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கோவில் மலைப்பாதையில் உள்ள 365 படிகளிலும் கோவில் நிர்வாகம் சார்பில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை நடத்தப்படுகிறது.
முருக பக்தர்கள் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு படிகள் வழியாக சென்று மூலவர் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்வார்கள்.
இதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு தங்கத்தேர் வீதியுலா நடைபெறுகிறது. இரவு 10 மணி வரை கோவில் நடைதிறந்து இருக்கும். மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.
1-ந் தேதி காலை 6:00 மணிக்கு, கோவில் நடை திறந்து, இரவு 9:00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தணி கோவிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவலை அடுத்து பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்குள் பக்தர்களை சிறிய அளவில் குழுக்களாக பிரித்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழாவையொட்டி மலைக்கோவில் மற்றும் மலைப்பாதை ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது.
தல வரலாறு:
ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.
பஞ்சமுகத்திற்கான காரணம்:
ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான்.
இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.
தல சிறப்பு:
ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.
கோவில் அமைப்பு:
12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, லட்சுமணன், சத்ருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிப்ட் இருக்கிறது.
இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்கும்.பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் கல்:
சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,''என வரம் கொடுத்தார்.
இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படுகிறது.
அறுபடைவீடுகளில் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்க கவசமும், ஆங்கில புத்தாண்டு அன்று வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதேபோல நாளை மறுநாள் 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த நாளில் வழக்கம்போல கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இதேபோல கருவறையில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், துர்க்கை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கும் வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.
மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

ஐயப்பனுக்கு உகந்த இந்த 108 சரணத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் உங்கள் துயரங்கள் பறந்தோடும். வேண்டுதல்கள் நிறைவேறும்.
1. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
5. ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
6. ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா
11. ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
12. ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
15. ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
16. ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
17. ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
18. ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
20. ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
21. ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. ஓம் ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
25. ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. ஓம் இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. ஓம் ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
30. ஓம் இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
31. ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
39. ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. ஓம் எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
41. ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஓம் ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
53. ஓம் கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
54. ஓம் கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
55. ஓம் சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
56. ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
57. ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஓம் ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
61. ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
62. ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
65. ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. ஓம் பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
73. ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. ஓம் மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
78. ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
80. ஓம் குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
81. ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. ஓம் கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. ஓம் சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
87. ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
89. ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
100. ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. ஓம் சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
105. ஓம் சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
106. ஓம் சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
107. ஓம் சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா

குறுக்குத்துறை முருகன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதுடன் மார்கழி மாத ஏகாதசியையொட்டி மூலவர், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
நெல்லை குறுக்குத்துறையில் தாமிரபரணி ஆற்றுக்குள் முருகன் கோவில் அமைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, கோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும், கரையில் உள்ள மேல் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.
இந்த நிலையில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து இயல்பான நீர்வரத்து உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோவிலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) மார்கழி மாத ஏகாதசியையொட்டி மூலவர், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதற்காக நேற்று மாலையில் உற்சவர் மேளதாளம் முழங்க மேலக்கோவிலில் இருந்து குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படும் என்றும், அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு :
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல பக்தர்கள் நீர் ஓடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இரவு நேரங்களில் மலைப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றவும், முக கவசம் அணிந்து கோவிலுக்கு வரவும், 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்கலாம்...ராகு கேது தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சவடி கோவிலில் வருகிற 2-ந் தேதி ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.
திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடி ஸ்ரீவாரி வேங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், பட்டாபிஷேக ராமசந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி, 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று ஒழிய 108 திவ்ய தேசங்களுக்கு சென்று அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடி பூஜிக்கப்பட்டு வந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சொர்ண ராம பாதங்களுக்கு காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் செய்து வருகிறது.
மறுநாள் 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கள திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு மற்றும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 10 மணிக்கு வாசுகி மனோகரன் குழுவினரின் ஸ்ரீராமனும், அனுமனும் என்ற தலைப்பில் இசைசொற்பொழிவு நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபசாரம், சாற்றுமுறை மற்றும் திருவாராமனம் ஆகியவை நடக்கிறது.
மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இந்த தகவல்களை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், கூடுதல் தலைவர் யுவராஜ், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் பழனியப்பன், கச்சபேஸ்வரன், செல்வம், வெங்கட்டராமன் மற்றும் கோவில் நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் வழங்கப்படும், என அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-
திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 7 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன. தற்போது 1,300 அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வரவேற்பு மையம் 1-க்கு உட்பட்ட மங்கலம்பாய் காட்டேஜில் (எம்.பி.சி) உள்ள அறைகளின் எண்ணிக்கை-683. அதில் தற்போது 516 அறைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 167 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது.
வரவேற்பு மையம் 2 மற்றும் 3-க்கு உட்பட்ட பத்மாவதி விருந்தினர் மாளிகையில் 670 அறைகள் உள்ளன. அதில் பக்தர்களுக்காக 487 அறைகள் வழங்கப்படுகிறது. மீதி உள்ள 183 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது. இதுதவிர 6 ஆயிரத்து 285 அறைகள் உள்ளன. அதில் தற்போது 4 ஆயிரத்து 814 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 1,260 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை திருமலையில் தங்கும் அறைகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மங்களம் பாய் காட்டேஜில் (எம்.பி.சி)-34, கவுஸ்தூபம் விடுதி, டிராவலர்ஸ் பங்களா காட்டேஜ் (டி.பி.சி) கவுண்ட்டர், அட்வான்ஸ் ரிசர்வ்வேஷன் (ஏ.ஆர்.பி) கவுண்ட்டர்களில் 11-ந்தேதி இரவு 12 மணியில் இருந்து 14-ந்தேதி இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது.
ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை காணிக்கையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு சலுகை இருக்காது. வி.ஐ.பி. பக்தர்களுக்கு வெங்கடகலா நிலையம், ராமராஜ நிலையம், சீதா நிலையம், சன்னிதானம் மற்றும் கோவிந்தசாய் ஆகிய ஓய்வு இல்லங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தரிசனம் செய்ய வரும் முக்கிய வி.ஐ.பி. பக்தர்களுக்கு சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் வழங்கப்படும்.
திருமலையில் 6 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவுண்ட்டர்கள் மூலம் சாதாரணப் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்படும்.