என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.
இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார். ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார். பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதாதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள். ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள். அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள். சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது. பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும். மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.
ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கப்பெறும். மேலும் கடன்தொல்லையும் நீங்கும்.
இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் அணிவிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள். வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் காத்து நன்றாக வெற்றிலையை அறுவடை செய்தால் வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி உற்சவர் கவுரிதேவி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் கவுரிதேவி உற்சவம் நடந்து வருகிறது. இரவில் உற்சவர் கவுரிதேவி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை கோவிலில் கொப்பி உற்சவம் நடந்தது. உற்சவர் கவுரிதேவி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.
வீதி உலாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ேகாவிலில் கவுரிதேவி உற்சவம் வருகிற 15 - ந்தேதி வரை நடக்கிறது.

நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
1. வடைமாலை பலன்:
சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.
இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.
2. நல்லெண்ணை அபிஷேக பலன்:
இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணெயால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.
3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:
மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
4. சீயக்காய் அபிஷேக பலன்:
சீயக்காய் அபிஷேகத் தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
5. பால் அபிஷேக பலன்:
வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.
6. தயிர் அபிஷேக பலன்:
வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.
7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:
பெண்டிர்கள், சுமங் கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
8. சந்தனம் அபிஷேக பலன்:
மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.
9. ஸ்வர்ண அபிஷேக பலன்:
பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.

நாகூர் தர்காவில் இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவின் 465-ம் ஆண்டு கந்தூரி விழா வருகிற 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி இன்று 1-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஓதப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.
அப்போது, கூடியிருந்த இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் சீனி மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 4-ந் தேதி கொடியேற்று வைபவமும், தொடர்ந்து வரும் 13-ந்தேதி நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலமும், 14-ந் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளது.

நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார். இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது... அதற்கு என்ன காரணம் தெரியுமா?
நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார். இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது...
சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.
இவருக்கு கோபுரம் கிடையாது. வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார்.
நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.
நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும். மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவில் உள்ளது.
நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது. நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.
பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது. பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.
நாமக்கல் அனுமன் தலத்தில் மகாலட்சுமி தாயாரின் வேண்டுதலுக்கு இணங்கி நரசிம்மர் அமைதி அடைந்து தாயாருக்கு வரங்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. அது முதலாகத் தாயார் நாமகிரி லட்சுமி என்றும் பகவான் லட்சுமி நரசிம்மர் என்றும் நாமம் கொண்டு அருள் பொழிகின்றனர். நரசிம்ம சுவாமி குகைக்கோவிலில் பல அழகிய கலைப்படைப்புகளிடையே வீற்றிருக்கிறார்.
திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகையுள்ளே இருக்கின்றன. நரசிம்ம சுவாமி பிரதம தானத்திலும், உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் சாமரம் வீச, சிவபெருமானும் பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்திலும் நிலை பெற்று உள்ளனர்.
இதனால், நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மேலும் இந்தக்கோவிலில் சங்கரநாராயணரையும் தரிசிக்க முடிகிறது. நரசிம்மர் கோவிலில் உள்ளது போன்ற வாமன அவதாரத்தையும் காண முடிகிறது. இக்கோவிலும் இதன் கலை வல்லமைகளைக்கூறும் சிற்பங்களும் மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப் பட்டுவருகின்றன. ஆகம விதிப்படி நித்திய கால (பூஜை) வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.
நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது. நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர். நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர். கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர். தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை. நாமகிரி தாயார், தாமரைக் கண்கள் கொண்டவள். தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள். அவள் பாதங்களும் பத்மம். அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே
நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க இதுவரை 3 ஆயிரம் பேர் இணைய வழியில் சாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். நாளை ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) அனுமன் ஜெயந்திகொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட உள்ளது.
இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28-ந்தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. ரமேஷ் தலைமையிலான குழுவினர் சாமிக்கு சாத்துவதற்காக வடைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவில் வடைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது. இன்று வடைகளை மாலையாக கோர்க்கும் பணி தொடங்கியது.
இந்த வடைகளை தயாரிக்க 2 ஆயிரத்து 50 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 120கிலோ உப்பு, 900 லிட்டர் நல்லெண்ணை ஆகியவை பயன்படுத்தப்பட்டன. 32 மடப்பள்ளி அர்ச்சகர்கள் 12 அடுப்புகளில் 3 நாட்கள் வடை தயாரிப்பு பணியை மேற்கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்த பூ அலங்கார குழுவினர் கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு நிறங்களால் ஆன 2 டன் எடை கொண்ட சாமந்தி பூக்களால் அலங்கரித்தனர்.
நாளை அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு வடைமாலை சாத்துப்படியும், அதன்பின் நல்லெண்ணை, சிகைக்காய்த்தூள், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியம் உள்ளிட்ட வைகளான அபிஷேகமும், சொர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளது. மதியம் 1 மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

ஆஞ்சநேயரை தரிசிக்க இதுவரை 3 ஆயிரம் பேர் இணைய வழியில் சாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இணைய வழியில் பதிவு செய்த 3000 பேர் ஒரு மணி நேரத்துக்கு 500 பேர் என அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்படுகிறது.
இதையும் படிக்கலாம்...நாளை அனுமன் ஜெயந்தி... விரதம் இருந்தால் தீரும் துயரங்கள்...
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் புத்தாண்டு தினமான இன்று சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோன்று மேட்டூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பெருமாள் கோவில், மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான்
- இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல்.
இப்பாடலில் இடம்பெறும் ``அஞ்சிலே” எனும் சொல் ஒரே மாதிரியாக, ஒரே உச்சரிப்பை கொடுத்த போதிலும், ஒவ்வொரு அடியிலும் அவை உணர்த்தும் பொருள் வெவ்வேறானவை.
முதல் வரியில் இடம்பெற்றுள்ள அஞ்சிலே என்னும் சொல் பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவிற்குப் பிறந்தவர் ஆஞ்சநேயர் என்பதனைக் குறிக்கும்.
அஞ்சிலே ஒன்றைத் தாவி என்பது, பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீரைத் (கடல்) தாண்டி ஆஞ்சநேயர் இலங்கை சென்றார் என்று பொருள்படும்.
அஞ்சிலே ஒன்று ஆக ஆரியர்க்காக ஏகி- ஆகாய மார்க்கத்தில் இலங்கைக்குப் பறந்து, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு -ஐந்தில் ஒன்றான பூமி தேவியின் மகளான சீதையை இலங்கையில் கண்டு என அர்த்தப்படுகிறது. (ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்காக பூமியைத் தோண்டும் போது தோன்றியவள் சீதை) கடைசி வரியில் வரும் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான் - இலங்கைக்கு ஐந்து பூதங்களில் ஒன்றான நெருப்பையும் வைத்து எரித்தான் எனப்படுகிறது.
ராமபக்தனான ஆஞ்சநேயர் நமக்கு வேண்டியன எல்லாம் தந்து - அளித்து காப்பார் என்பதே இந்த 4 வரி துதிப்பாடலின் பொருள்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்டதற்கு சமம். ஆஞ்சநேயரை வழிபடுவோர் அன்றாடம் பஞ்சபூதங்களையும் வழிபட்டவர்களாவர். அனுமனை வழிபடச் செல்லும் முன் அவர் மீதான துதி பாடலை அதன் பொருள் உணர்ந்து சொல்லி அனுமன் அருள் பெறுவோமாக!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு உச்சிகால அபிஷேக தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் பல்வேறு கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள் கூறும்போது, புத்தாண்டு முதல் தினத்தில் சாமி தரிசனம் செய்வதால் ஆண்டு முழுவதும் வேண்டுதல்கள் நிறைவேறி நினைத்தது நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதன் காரணமாக கடற்கரை பகுதிக்குள் பக்தர்கள் யாரும் செல்லாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிக்கலாம்...2021-ம் ஆண்டின் கடைசி பிரதோஷம்: நந்திஎம்பெருமானுக்கு 12 வகையான அபிஷேகம்
2021-ம் ஆண்டின் கடைசி பிரதோஷமான நேற்று நந்திஎம்பெருமானுக்கு 12 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
கொரோனா தொற்று பரவிய பின்னர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வருவதில்லை. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். அதுவும் சனிப்பிரதோஷத்தன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்த ஆண்டின் (2021) கடைசி நாளான நேற்றுமாலை பிரதோஷம் நடைபெற்றது. அப்போது நந்திஎம்பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், இளநீர், வில்வம்இலை உள்ளிட்ட 12 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரியகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று வந்திருந்தனர். குறிப்பாக ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்லக்கூடிய செவ்வாடை பக்தர்கள் அதிகஅளவில் வந்திருந்தனர். திருப்பூர், உளூந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பெண் பக்தர்கள் நந்திஎம்பெருமான் சிலை முன்பு கும்மியடித்து வழிபாடு செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராட 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் இன்றி கடற்கரை வெறிச்சோடியது. கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் கூட்டமாக செல்வதை தடுக்கும் விதமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. எனினும் நள்ளிரவில் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்றும், இன்றும் (சனிக்கிழமை) பக்தர்கள் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.
இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாழிக்கிணற்றிலும் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கடற்கரைக்கு செல்லும் வழியில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பக்தர்களின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. புத்தாண்டு தினமான இன்றும் (சனிக்கிழமை) கோவில் கடற்கரைக்கு செல்லவும், கடலில் புனித நீராடவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனினும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை 1 மணி முதலே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழக்கப்பட்டு உள்ளது.
புத்தாண்டு தினமான இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 3.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி தீபாராதனை, காலை 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.