என் மலர்

  வழிபாடு

  கவுரிதேவி
  X
  கவுரிதேவி

  ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் கொப்பி உற்சவம் கவுரிதேவி வீதிஉலா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி உற்சவர் கவுரிதேவி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தினமும் கவுரிதேவி உற்சவம் நடந்து வருகிறது. இரவில் உற்சவர் கவுரிதேவி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வருவது வழக்கம். அதன்படி நேற்று காலை கோவிலில் கொப்பி உற்சவம் நடந்தது. உற்சவர் கவுரிதேவி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்.

  வீதி உலாவில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் ேகாவிலில் கவுரிதேவி உற்சவம் வருகிற 15 - ந்தேதி வரை நடக்கிறது.

  Next Story
  ×