என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
    சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. இங்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக 30-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த 14-ந் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகர ஜோதியை தரிசித்தனர்.

    இந்த நிலையில் தற்போதும் சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு தடை உத்தரவுகளை பின்பற்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்கிறார்கள். நடப்பு சீசனை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) வரை மட்டுமே தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, 20-ந் தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்வார். அப்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதைத்தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் பந்தளம் ராஜ குடும்ப வாரிசு சங்கர் வர்மா தலைமையில் மீண்டும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
    கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கோவில் வளாகத்தில் 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதற்காக ரூ. 2.56 கோடி செலவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கில் கோவில் மூடப்பட்டதால் கோவில் புணரமைப்பு பணிகள் தாமதமானது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் திறக்கப்பட்டு முழுவீச்சில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

    தற்போது இந்த திருப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்து கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 13-ந்தேதி யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    கோவில் முழுவதும் வர்ணம் பூசி, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது.

    கும்பாபிஷேக விழாவின் போது பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணற்றில் இருந்தும் மற்றும் முருகனின் அறுபடை திருத்தலங்களில் இருந்தும் மொத்தம் 15 இடங்களில் இருந்து புனித நீர் வடபழனி முருகன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    இவை அனைத்தும் புதிய பித்தளை குடங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று யாகசாலையில் வைக்கப்பட உள்ள 1300 கலசங்களில் புனித நீர் பகிரப்படும்.

    அதன் பிறகு யாக வேள்வி பூஜைக்கு பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலிலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.

    கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கோவில் வளாகத்தில் 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஜனவரி மாதம் 18-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    18-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * தைப்பூசம்
    * வனசங்கரி பூஜை
    * வடலூர் வள்ளலார் அருட் பெருஞ்ஜோதி தரிசனம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - மூலம்

    19-ம் தேதி புதன் கிழமை :
     
    * பழணி ஆண்டவர் தங்க குதிரையில் பவனி
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
    * சந்திராஷ்டமம் - பூராடம்
     
    20-ம் தேதி வியாழக்கிழமை :

    * அமிர்தயோகம்
    * கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்
    * பழனி ஆண்டவர் பவனி
    * சந்திராஷ்டமம்- உத்திராடம்

    21-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * சங்கடஹர சதுர்த்தி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - திருவோணம்

    22-ம் தேதி சனிக்கிழமை :

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி பிரதிஷ்டாதினம்
    * திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை
    * சந்திராஷ்டமம் - அவிட்டம்

    23-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சுபமுகூர்த்தம்
    * சூரிய வழிபாடு நன்று
    * தேய்பிறை பஞ்சமி
    * சந்திராஷ்டமம் - சதயம்

    24-ம் தேதி திங்கள் கிழமை  :

    * கரிநாள்
    * சித்தயோகம்
    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்
    * சந்திராஷ்டமம் -  பூரட்டாதி

    வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தெப்பத் திருவிழா அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி உப கோவிலான லட்சுமனேசுவரர் கோவிலுக்கு வந்த பின்பு அங்கு மாலை 6 மணிக்கு சிறப்பு மகா தீபாராதனை பூஜை நடைபெறும்.

    அதன் பின்னர் சாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங் கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு 11 முறை தெப்பம் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக லட்சுமனேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடைபெறும் தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    அதற்கு பதிலாக நேற்று கோவிலின் உள்ளேயே தெப்பத்திருவிழா நடைபெற்றது. சாமி-அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் சிவதீர்த்தம் எதிரே எழுந்தருளினர். தொடர்ந்து சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்று அதன் பின்னர் சாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி 3-ம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவிலின் பேஷ்கார்கள் கமலநாதன், முனியசாமி மற்றும் கோவில் குருக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ராமேசுவரம் கோவில் சாமி மற்றும் அம்பாள் சன்னதி பிரகாரங்களும் தீர்த்த கிணறு பகுதியும் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதுபோல் வெளி மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலின் வாசல் பகுதியில் நின்று சாமியை தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
    பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.

    அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தனித் தனியாக வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.

    மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு பவுர்ணமிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பல்வேறு தரை கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

    இதனால் திருவண்ணாமலையில் சிறிய முதல் பெரிய கடைகள் வரையில் வியாபாரம் பரவலாக நடைபெறும். பவுர்ணமி கிரிவலத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் அனைத்துத் தரப்பு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பலர் வேதனை தெரிவித்தனர்.
    தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும்.
    இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். தைப்பூசம் என்பது சிவன்-பார்வதி இருவரும் ஒன்றிணைந்து ஆற்றலை வெளிப்படுத்தும் அம்சத்தை குறிக்கிறது. அதாவது சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

    தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை ‘வேல்’ வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.

    தைப்பூசத்தன்று முருகனை நினைத்து விரதம் இருந்தால், குடும்பத்தில் செல்வம் பெருகும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். நோய்கள் ஏதேனும் இருந்தால் விலகி விடும்.

    இதனால் தான் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது முக்கிய இடம் பிடித்துள்ளது. முருகன் தமிழ்க் கடவுள். முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அகத்தியருக்கு அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான்.

    ஞானமே உடலாகவும், இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்னும் முச்சக்திகளே மூன்று கண்களாகவும், இப்பெரிய உலகமே கோயிலாகவும் கொண்டு நிற்கும் ஒப்பற்ற தனிச்சுடராகத் திகழ்பவன் முருகன். முருகனை வணங்கினால் எல்லாக்கடவுள்களையும் வணங்கி அடையும் பயன்களை எல்லாம் நாம் ஒருங்கே பெறலாம்.

    தைப்பூசம் முருகனுக்குச் செய்யும் சிறப்பு விழாவாகும். இன்று (செவ்வாய்கிழமை) தைப்பூச தினமாகும். அன்றுதான் முருகன் வள்ளியை மணம்புரிந்து கொண்டான்.

    சூரனை அழிக்கப் பார்வதி தன் சக்தி, ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஒன்று சேர்த்து வேலாக மாற்றி அந்தச் சக்தி வேலை முருகனுக்கு அளித்த நாள் தைப்பூசம். இவ்வேல் பிரம்ம வித்யா சொரூபமானது.

    தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.

    தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.

    பூசம் நட்சத்திரக்காரர்கள் கவனிக்க வேண்டியது....

    பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினம் மற்றும் திரிதியை திதி நாட்களில் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் எல்லாம் தீரும்.

    தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

    பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம்.

    பூச நட்சத்திரக்காரர்கள் அய்யப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.

    தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வருகின்ற இந்த தினம் ஒரு சிறப்பான தினமாகும். 27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். தந்தை ஆகிய சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் பிரணவ மந்திர பொருளை உபதேசித்து சிவகுருநாதன் என்கிற பெயரை பெற்று குரு ஸ்தானம் பெற்றார்.

    எனவே இந்த தினத்தில் முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு முருகன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்து நீங்கள் தொட்டே காரியங்கள் அனைத்து பொன்னாகும் அற்புதம் ஏற்படும். நீங்கள் திருமண சம்பந்த பேச்சு, புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை இந்த தை பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி பெற்று உங்களுக்கு பல நன்மைகளை தரும்.
    பொது மக்கள் ஜோதி தரிசனத்தைக் காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    வடலூர்:
       
    கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை.
    உள்ளூர் நபர்கள் அன்னதானம் பார்சல் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணிக்கு காட்டப்பட்டது.  பக்தர்கள் இன்றி 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
    பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெறுகிறது.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் புகழ்பெற்ற தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானையுடன் பெரியநாயகி அம்மன் கோவில் உள் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் சிகர நிகழ்ச்சியாக நாளை மாலை 4.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இந்த தேரோட்டம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. அப்போது வழக்கமாக நடைபெறும் தேரோட்டத்திற்கு பதிலாக பெரியநாயகி அம்மன் கோவிலின் உள்பிரகாரத்தில் சிறிய தேரில் முத்துக்குமாரசாமி வள்ளி-தெய்வானையுடன் உலா வருவார்.

    இதற்கிடையே தைப்பூச திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.
    பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கடுகு எண்ணெய் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். எந்த பிரச்சனைக்கு கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்...
    கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

    வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நிலம் மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணெயில் மாதம் ஒரு முறை உடல் முழுவதும் தடவி குளிக்க நன்மை பெருகும்.

    மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் ஆண்கள், பெண்களும் இப்படி செய்யலாம்.

    ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணெயை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும்.

    வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
    உற்சவ மூர்த்திகளான ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, 2 தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலையில் கிரிவலம் சென்றனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி பண்டிகைக்கு (பொங்கல்) மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று கைலாசகிரி மலையில் சிவன்-அம்பாள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நடக்கும் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின்போதும் சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவத்தன்று கைலாசகிரி மலையில் சிவன்-அம்பாள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கும்.

    அதில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் இசைக்க கைலாசகிரி மலையை அடைந்து கிரிவலம் சென்று, அங்கிருந்து திரும்ப புறப்பட்டு கோவிலுக்கு வருவார்கள். உற்சவர்கள் கிரிவலம் செல்லும்போது ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் செல்வார்கள்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் ஆந்திர மாநில அறநிலையத்துறை ஸ்ரீகாளஹஸ்தியில் கைலாசகிரி மலை கிரிவல நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்றும், நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதுகுறித்து ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன் ரெட்டி மாநில அறநிலையத்துறை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசி, கைலாசகிரி மலையில் உற்சவர்கள் கிரிவல நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.

    அதன்பேரில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நேற்று காலை கைலாசகிரி மலையில் கிரிவல நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஞானப்பிரசுனாம்பிகை தாயார், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்புப்பூஜைகள் செய்து, பிரத்யேக மலர் அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர்கள் 2 தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலையில் கிரிவலம் சென்றனர்.

    அதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் சென்றனர்

    வழியில் ராமாபுரம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள அஞ்சூர் மண்டலத்தில் சிவனுக்கும், அம்பாளுக்கும் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கிரிவலம் சென்று திரும்பிய உற்சவர்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள எதிர்சேவா மண்டபம் அருகில் சிறப்புப்பூஜைகள் செய்து, கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
    புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி தெரியாத பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோவில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அமைந்துள்ளது.
    திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் பெருமை என்னவென்று பார்த்தால் தசரத மன்னனுக்கு சன்னதி அமைந்த திருத்தலம் ஆகும்.

    ஒரு முறை ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்திலிருந்து சிதறிய நீர் நதியாக பெருக்கெடுத்து ஓடியது. அதுவே கமண்டல நதியானது. இந்த நதியின் கரையில் தான் புத்திர காமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே  இந்த நதி வடக்கிலிருந்து கிழக்காக திரும்பி பின்னர் மீண்டும் திசை திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. தற்போது மழைக்காலங்களில் மட்டுமே ஓடும் நதியாகிவிட்டது.  

    மூலஸ்தானத்தில் சிவன் ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். சிவனுக்கு பௌர்ணமி தோறும் விசேஷ பூஜை நடக்கும் அதன் பின்பு சுவாமி புறப்பாடும் நிகழும். அம்பாள் பெரியநாயகிக்கு என்று தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. கோயிலுக்கு நேர் எதிரே வெளிப்புறத்தில் தசரத மன்னனுக்கும் சன்னதி உள்ளது. இவர் இங்கு சக்கரவர்த்தியாக இல்லாமல் யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிக்கிறார். கைகளில் ருத்ராட்ச மாலை மற்றும் கமண்டலம் வைத்திருக்கிறார். விசேஷ நாட்களில் இவருக்கும் பூஜை நடத்தப்படுகின்றது.

    இத்தலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டுத் தலமாக உள்ளது. திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாறு
    குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள் 6 திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும். முதல் திங்கள் அன்று விரதம் துவங்கி மதியம் மட்டும் ஒரு குழந்தைக்கு அன்னம் கொடுத்து பின் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில் ஆறாவது திங்களன்று 6 குழந்தைகளுக்கு அன்னதானம் பரிமாறி விரதம் இருக்க வேண்டும். ஏழாவது திங்கள்கிழமை அன்று இங்கு புத்திர காமேட்டீஸ்வரர்க்கு  செவ்வரளி பூ மற்றும் பவளமல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்த்த வெண் பொங்கல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

    ஆனி மாதம் பௌர்ணமியன்று சிவனுக்கு 11 சிவாச்சாரியார்கள் புத்திர காமேஷ்டி யாகம் நடத்துவார்கள் அதில் நாம் கலந்து கொண்டால் நமக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஜாதக ரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும். நாகதோஷம் நீங்க கோவிலில் உள்ள வேம்பு மற்றும் ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக் கொள்வதன் மூலமாக சிறப்பான பலன்களை பெறலாம்.

    இக்கோவிலின் தல வரலாறு என்னவென்று  பார்த்தால் அயோத்தியை ஆண்ட தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. தனக்குப் பின் நாட்டை ஆள இளவரசர் இல்லாததால் தசரதர் மிகவும் வருந்தினார். புத்திர பாக்கியம் உண்டாவதற்கு வழி சொல்லும்படி தன் குலகுரு  வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர் இத்தலத்தை சுட்டிக்காட்டி சிவனை  வேண்டி புத்திர காமேஷ்டி யாகம்  செய்து வழிபடுவதன் மூலம் புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்றார். அதன்படி  தசரத மன்னரும் இவ்விடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார்.

    இந்த யாகத்தின் வலிமையால் அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பிய தசரதர் அவருக்கு  தான் நடத்திய யாகத்தின் பெயரையே  சூட்டினார். அன்றிலிருந்து அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை புத்திர காமேட்டீஸ்வரர் என்ற நாமத்துடன் அழைக்கப்படுகின்றார்

    . இந்த திருக்கோவிலின் சிறப்பு அம்சமாக அதிசயத்தின் அடிப்படையில் எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் துவங்கி ஆஞ்சநேயரிடம் முடிக்க வேண்டும் என்பர். இங்கு நதிக்கரையில் வடக்கே பார்த்து  விநாயகரும்  அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் தாம் எந்த ஒரு செயலையும்  துவங்கும்போது இந்த விநாயகரை வணங்கிச் செல்கின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு செல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு,சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு எதிரெதிரே விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை காண்பது அரிது.

    குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாறு
    பிரகாரத்தில் அறுபத்துமூவர், சொர்ண விநாயகர், அம்பிகையுடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்திர லிங்கம், காளியுடன் வீரபத்திரர், வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதன், பாமா ருக்மணியுடன் கோபாலகிருஷ்ணன், காலபைரவர், சனீஸ்வரர், மற்றும் சூரியன் ஆகியோர் உள்ளனர்.

    இக்கோயிலில் நேர்த்திக்கடன் என்று பார்த்தால் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.

    கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சாமியுடன் செயற்கை வாகனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்றும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த அடுத்த நாளும் ஏழுமலையான் கோவிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்திற்கு செல்வார்.

    அதன்படி நேற்று பார்வேட்டை உற்சவம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக பார்வேட்டை மண்டபத்திற்கு ஏழுமலையான் செல்லவில்லை.

    கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் சிறிய செயற்கை வாகனம் அமைக்கப்பட்டது. அங்கு ஏழுமலையான் சங்கு, சக்கரம், கத்தி, கதம், வில் உள்ளிட்ட பஞ்ச ஆயுதங்களுடனும், ஸ்ரீகிருஷ்ணர் மற்றொரு பல்லக்கிலும் எழுந்தருளினர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னமாச்சார்யாவின் சங்கீத கீர்த்தனை நடைபெற்றது. இதையடுத்து வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால் தீட்சிதர் ஈட்டியை ஏந்தியபடி சாமியுடன் செயற்கை வாகனத்தை நோக்கி 3 முறை ஓடிச்சென்று ஈட்டியை எறிந்தார். நிகழ்ச்சியில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று திருப்பதியில் 35,642 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,178 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.77 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    ×