என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    பீட்டர் சப்ரான், ஜேம்ஸ் வான் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அன்னபெல் கிரியே‌ஷன்’ படத்தின் முன்னோட்டம்.
    ஹாலிவுட் படமான ‘அன்னபெல்’ 2014-ல் மிகப்பெரிய வசூலைக் குவித்தது. இதை இயக்கிய டேவிட் எப். சான்ட்பெர்க்கின் அடுத்த படம் ‘அன்னபெல் கிரியே‌ஷன்’. ‘தி கான்ஜுரிங்’ தொடர் வரிசையில் இது 4வது படம். இப்போது வெளிவரவிருக்கும் ‘அன்னபெல் கிரியே‌ஷன்’ திரைப்படத்தை பீட்டர் சப்ரான், ஜேம்ஸ் வான் தயாரிக்கிறார்கள்.

    இதில் ஸ்டெப்கி சிக்மேன், தலித்தா பேட்மேன், லுலு வில்சன், பிலிப்பா கவுல்தர்டு உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.

    பொம்மை செய்பவரும் அவரது மனைவியும் ஒரு சின்னக்குழந்தை இறந்து பல வருடங்களுக்குப்பிறகு, மூடப்பட்ட ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு கன்னியாஸ்திரியையும் சில பெண் குழந்தைகளையும் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள்.



    பொம்மை செய்பவரின் கைவண்ணத்தில் உருவான ‘அன்னபெல்’லின் பொம்மைக்குள் ஆவி புகுந்து கொள்கிறது. அதன் பிறகு நடக்கும் பரபரப்பான சம்பவங்களே படம்.

    ‘அன்னபெல்: கிரியே‌ஷன்’ படம் பற்றி இயக்குனர் டேவிட் எப். சான்ட்பெர்க் கூறும்போது, ‘‘இந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்கள் மூன்றுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்” என்றார்.

    இந்த படத்தை வார்னர் பிராஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகிறது. வருகிற 18-ந்தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

    த.முருகானந்த இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா - சூரி கலகலப்பூட்டும் ‘கதாநாயகன்’ படத்தின் முன்னோட்டம்.
    விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம் ‘கதாநாயகன்’.

    இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா, ஆனந்தராஜ்,அருள்தாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, மீராகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜே.லக்ஷ்மன், இசை - ஷான்ரோல்டன், படத்தொகுப்பு - ஸ்ரீதரன், கலை - ஏ.கோபி ஆனந்த், சண்டை பயிற்சி - தளபதி தினேஷ், திலிப்சுப்பராயன், நடனம் - ஷோபி பவுல்ராஜ், எம்.ஷெரிப், தயாரிப்பு - விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ், இயக்கம் - த.முருகானந்தம்.

    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “நகைச் சுவை கலந்த படம் ‘கதாநாயகன்’. இது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழுவினர் அனைவரும் சிரித்தபடி மகிழ்ச்சயுடன் பணியாற்றினோம். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும். விஷ்ணு விஷால் நல்ல நடிகர் மட்டுமல்ல. சிறந்த தயாரிப்பாளர்” என்றார்.

    விஷ்ணு விஷால், “‘வெண்ணிலா கபடி குழு’ படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. கடைசியாக எனது தயாரிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதேபோன்று ஒரு தரமான படமாக ‘கதாநாயகன்’ படம் வந்துள்ளது” என்று கூறினார்.

    ‘கதாநாயகன்’ படத்தின் இசை, டிரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சரண்யா, ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் இளம் தம்பதியின் கதையாக உருவாகவிருக்கும் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’.

    அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அவருடைய ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ஜோனான் டி ஜான் ஒளிப்பதிவு செய்கிறார்.

    படம் பற்றி கூறிய இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்...

    சமீபத்தில் நான் மும்பைக்கு சென்று இருந்த போது ஒரு இந்தி திரைப்படம் பார்க்க நேரிட்டது. அந்த படம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்து அதன் தயாரிப்பாளரை சந்தித்து கேட்டேன். அது நடக்கவில்லை.

    ஆனால், அந்த படம் பார்த்த பிறகு எனக்கு இருந்த ஒரு உந்துதலால் ஒரு புதிய கதையை எழுத ஆரம்பித்தேன். ஒரு அழகான, அன்பான இளம் தம்பதியினர் தங்களது கனவு இல்லத்தை வாங்க முயற்சிப்பது தான் படத்தின் மைய கருத்து. இதை நகைச்சுவை இழையோட மென்மையாக சொல்லப்போகிறேன். இது குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
    ஹாலிவுட் பாணியில் ஆதிவாசிகள் கதையாக உருவாகும் ‘ஆறாம் வேற்றுமை’ படத்தின் முன்னோட்டம்.
    செவன்த் சென்ஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சக்திவேல் தயாரிக்கும் படம் ‘ஆறாம் வேற்றுமை’.

    புதுமுகங்கள் அஜய் கதாநாயகனாகவும், கோபிகா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, உமாஸ்ரீ, அழகு, சூரியகாந்த், சேரன்ராஜ், பரதேசி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள். இசை - கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு - அறிவழகன், நடனம் - பாபி ஆண்டனி, பாடல்கள் - யுகபாரதி, மோகன் ராஜ், தயாரிப்பு - சக்திவேல், எழுத்து, இயக்கம் - ஹரி கிருஷ்ணா.

    படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....

    “இது இன்றைய கால கட்டத்தைப் பற்றிய படம் இல்லை. சுமார் 900 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதி வாசிகள் பற்றிய படம். ஆறாவது அறிவில் வேறுபட்டு வாழும் மனிதர்களைப் பற்றி கதை நகர்வதால் ‘ஆறாம் வேற்றுமை’ என பெயர் வைத்தோம். மூன்று மலைகளில் வாழும் மூன்று விதமான மக்களைப் பற்றிய படம் இது.



    ஆறு அறிவு கொண்ட மனிதன் சிந்திக்கிறான். நாகரிக வாழ்க்கை வாழ்கிறான். அதே ஆறு அறிவு கொண்ட மனிதன் தான் காட்டுவாசிகளாகவும் வாழ்கிறான். இன்றைய அறிவியல் வளர்ச்சி எதுவும் இல்லாத காட்டுப்பகுதியை தேடிப்பிடித்தோம். பல கிலோ மீட்டர்கள் நடந்தே சென்றோம்.

    கதை பற்றிய நம்பிக்கையை மனதில் கொண்டு எல்லா சிரமங்களையும் பொருத்துக் கொண்டோம். இது ஹாலிவுட்டில் தயாராகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அபகலிப்டா’ போன்ற படம். ஸ்ரீ முத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் பட அதிபர் ஆர்.பாலசந்தர் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார்” என்றார்.
    ஜல்லிக்கட்டு வீரராக விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அசத்தும் ‘மதுர வீரன்’ படத்தின் முன்னோட்டம்.
    விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன், ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அடுத்து இவர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்துக்கு ‘மதுர வீரன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    வி.ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக புதுமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரகனி, ‘வேல’ராம மூர்த்தி, மைம்கோபி, பி.எல்.தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதுடன் டைரக்‌ஷன் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் பி.ஜி.முத்தையா. இசை - சந்தோஷ் தயாநிதி, பாடல்கள் - யுகபாரதி, எடிட்டிங் - கே.எல். பிரவீன், கலை - விதேஷ், சண்டை பயிற்சி - ‘ஸ்டன்னர்’ சாம், நிர்வாக தயாரிப்பு - கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு - ஜி.சுப்பிரமணியன். ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாக கொண்டபடம். இது வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு முதல் வாரம் மீண்டும் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடையும்.
    ஜாய்சன் இயக்கத்தில் நிகில் மோகன் - இனியா நடிப்பில் உருவாகியிருக்கும் `சதுரஅடி 3500' படத்தின் முன்னோட்டம்.
    ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் `சதுரஅடி 3500'.

    நிகில் மோகன் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாகிறார். இனியா நாயகியாக நடித்திருக்கிறார். ரகுமான், ஆகாஷ், கோவை சரளா,
    எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், பரவை முனியம்மா, ‘பெசன்ட் நகர் ’ரவி, இயக்குநர் ஷரவண சுப்பையா, சுவாதி தீக்ஷித், மேக்னா முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பிரான்ஸிஸ், இசை - கணேஷ் ராகவேந்திரா, கலை - ஜனார்த்தனன், எடிட்டிங் - ஆர்.ஜி.ஆனந்த், சண்டைப் பயிற்சி - தளபதி தினேஷ், நடனம் - ஸ்ரீதர், டிசைன்ஸ் - சபீர், ஸ்டில்ஸ் - பாக்யா, வெளியீடு - ஆர்பிஎம் சினிமாஸ், தயாரிப்பு - ஜாய்ச்மோன் & நிதி.

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜாய்சன்



    இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு படத்தின் இசை மற்றும் ட்ரைலரை வெளியிட, மூத்த இயக்குநரான கே பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

    இப்படம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் `அருவாசண்ட' படத்தின் முன்னோட்டம்.
    ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம் `அருவாசண்ட'.

    இந்த படத்தில் நாயகனாக ராஜா நடிக்கிறார். மாளவிகா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் மற்றும் ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பயில்வான் ரங்கநாதன், நெல்லை சிவா, காதல் சுகுமார், சரத், அம்பானி சங்கர், ரஞ்சன், சிவசங்கர், தளபதி தினேஷ் உட்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    கவிப்பேரரசு வைரமுத்து இந்த படத்தின் ஐந்து பாடல்களை எழுதி இருக்கிறார். இசை - தரன், ஒளிப்பதிவு - சந்தோஷ் பாண்டி, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை -  சுரேஷ் கல்லேரி ஸ்டன்ட் மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா, ராதிகா, ஸ்டன்ட் - தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை - கே.வீரமணி, டிசைன்ஸ் -  சபீர்.   

    கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆதிராஜன்.



    ஆதி ராஜன் எழுதி இயக்கும் இந்த படதின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் வில்லன், ஆடுகளம் நரேனின் மருமகனாக சொந்தர்ராஜா நடிக்கிறார்.

    படத்தின் நாயகன் ராஜாவும், சொந்தர்ராஜாவும் அருவாவுடன் ஆக்ரோஷமாக மோதும் சண்டைக் காட்சி நேற்று சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு தென்னந் தோப்பில் நடைபெற்றது. பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் தளபதி தினேஷ் இந்த சண்டைக் காட்சியை விறுவிறுப்பாக படமாக்கிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராத விதமாக சௌந்தர்ராஜா வீசிய அரிவாள் ராஜாவின் தாடையில் வெட்டியது. அதில் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது.

    படக்குழுவினர் பதட்டத்துடன் ஓடிச் சென்று ஐஸ்கட்டி வைத்து முதலுதவி செய்தனர். பின்பு ராஜாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். அதன் பின்னரும் இருவரும் மோதும் சண்டைக்காட்சி எடுத்து முடிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    சுரேஷ்காமாட்சி இயக்கத்தில் பெண் போலீசை பெருமைப்படுத்தும் படமாக உருவாகியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முன்னோட்டம்.
    விஹவுஸ் புரொடக் ‌ஷன்ஸ் தயாரித்துள்ள 3-வது படம் ‘மிகமிக அவசரம்’.

    ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர். முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    கதை, வசனம் - இயக்குனர் கே.பி.ஜெகன், ஒளிப்பதிவு - பாலபரணி, கலை - பாலமுருகன், தயாரிப்பு, இயக்கம் - சுரேஷ்காமாட்சி. இவர், இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் ஆகி இருக்கிறார்.



    படம் பற்றி கூறிய சுரேஷ் காமாட்சி...

    காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.

    காவலர்களின் வலியை அறிந்து ‘மிக மிக அவசரம்‘ படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறோம். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது.

    அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள். காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கு இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய இருக்கிறோம்” என்றார்.

    குருராஜா இயக்கத்தில் விக்ரமாதித்யனிடம் வேதாளம் சொல்லும் கதையாக உருவாகியிருக்கும் ‘உப்பு புளி காரம்’ படத்தின் முன்னோட்டம்.
    இன்றைய கால கட்டத்தில் ‘பில்லா’ உள்பட பல வெற்றி படங்களை வெளியிட்ட திரைப்பட விநியோக நிறுவனம் ‘குருராஜா இண்டர்நே‌ஷனல்’. முதன் முதலாக தயாரித்து வெளியிடும் படம் ‘உப்பு புளி காரம்’.

    ‘ஏழாம் அறிவு’, ‘டிஷ்யும்’ போன்ற படங்களில் நடித்த கின்னஸ் பக்ரு இதில் வேதாளமாக நடித்திருக்கிறார். பிரபல மலையாள நடிகர் டினிடாம் இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காள நடிகை பவுலமி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாபுராஜ், முகேஷ், டெல்லி கணேஷ், ஜெயந்த், கவ்ஷிகா, பொன்னம்மா பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.



    இசை - வேதம்புதிது ரபி தேவேந்திரன், ஒளிப்பதிவு - ரமே‌ஷன், எடிட்டிங் - எல். கேசவன், நடனம் - பாலகுமார் ரேவதி, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - குருராஜா. இவர் படம் பற்றி கூறும் போது...

    “தற்காலத்தில் வேதாளமும், விக்கிரமாதித்யனும் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட கதையை சொல்லி வேதாளம் கேள்வி கேட்கும்? அதற்கு விக்கிரமாதித்யனின் பதில்கள் என்னவாக இருக்கும்? என்ற கற்பனையில் உருவானதே ‘உப்பு புளி காரம்’.

    குருராஜா இண்டர்நே‌ஷனல் நிறுவனம் வெளியிடும் இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
    ரஜீஷ்பாலா இயக்கத்தில் விதார்த் - சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பில் மோட்டார் சைக்கிள் முக்கிய பாத்திரமாக வரும் ‘வண்டி’ படத்தின் முன்னோட்டம்.
    ரூபி பிலிம்ஸ் ஹாசீர் தயாரிக்கும் படம் ‘வண்டி’.

    இதில் விதார்த், ஸ்ரீராம் கார்த்திக், கிஷோர் குமார், சாந்தினி, ஜான் விஜய், அருள் தாஸ், சாமிநாதன், மதன்பாப், சூப்பர் குட் சுப்பிரமணியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ராகேஷ் நாராயணன், இசை - சூரஜ் எஸ் குரூப், படத்தொகுப்பு - ரிசால் ஜெய்னி, கலை - மோகன மகேந்திரன், பாடல்கள் - சினேகன், சங்கீத், நடனம் - தினேஷ், ஜாய் மதி, சண்டை பயிற்சி - சிறுத்தை கணேஷ், வசனம் - அரசு வி. ரஜீஷ்பாலா, தயாரிப்பு - ஹஷீர். எழுத்து - இயக்கம்- ரஜீஷ்பாலா, படம் பற்றி இவரிடம் கேட்ட போது...

    காணாமல் போன தன்னோட சைக்கிளைத் தேடும் குடும்பஸ்தன் தொலைந்து போன சைக்கிளால் என்ன ஆனான், என்பதை பை சைக்கிள் தீவ்ஸ்’ என்ற படத்தை பார்த்து உலகமே வியந்தது.



    அதே போல் ஒரு இளைஞன் தன்னோட அப்பாவின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் சேர்த்து ஒரு பல்சர் பைக்கை வாங்குகிறான். அது நாள் வரை வெறுமெனே பார்த்து வந்த பெண் காதலிக்க தொடங்குகிறாள். வாழ்க்கை சந்தோ‌ஷமாக போய்க் கொண்டிருக்கும் போது அந்த பைக் காணாமல் போகிறது. அந்த பைக்கால் அவன் என்ன ஆனான் என்பதை ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் பார்த்தோம்.

    தற்போது, ‘வண்டி’ படத்தில் எமஹா ஆர்எக்ஸ் 135 என்ற பைக் படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறது. அதுவும் மூன்று தளங்களில் நடக்கும் கதையில் இந்த பைக் மூன்று பரிமாணத்தில் தோன்றுகிறது. கதையில் பைக்கே பிரதானமாக வருவதால் படத்தின் தலைப்பு ‘வண்டி’ என்று ஆகி இருக்கிறது” என்றார்.
    ஆர்.அய்யனார் இயக்கத்தில் கிஷோர் - மோகனா நடிப்பில் பள்ளிகாதல் விபரீதத்தை சொல்லும் ‘உறுதிகொள்’ படத்தின் முன்னோட்டம்.
    ஏ.பி.கே. பிலிம்ஸ், சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுதி கொள்’. இந்த படத்தில் கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.

    நாயகியாக மேகனா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - பாண்டி அருணாசலம், இசை - ஜூட் வினிகர், எடிட்டிங் - எம்.ஜேபி, பாடல்கள் - மணிஅமுதன், ஸ்டண்ட் - டேஞ்சர் மணி, தயாரிப்பு - பி.அய்யப்பன் சி.பழனி, எழுத்து, இயக்கம் - ஆர்.அய்யனார்.



    இவர் இயக்குனர் கிருஷ்ணாவிடம் உதவியாளராக இருந்தவர்.

    அவரிடம் படம் பற்றி கேட்ட போது....

    “பள்ளியில் படிக்கிற மாணவர்கள், மாணவிகளிடையே உருவாகும் காதல் தவறானது. சரியான புரிதல் பக்குவம் இல்லாத வயதில் ஏற்படும் காதல் பருவ மாற்றம் ஏற்படுகிற காலகட்டத்தில் உருவாகும் இனக்கவர்ச்சி தானே தவிர அது காதல் இல்லை.

    காதலன் கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் பெண்கள் போகக் கூடாது. அப்படிப்போனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தான் படத்தின் கதை. படம் பார்க்கின்ற ஒவ்வொரு பெற்றோரும் பெண் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்க வேண்டும் என்கிற படிப்பினையை கற்றுக் கொள்வார்கள். இதை காதல், மோதல், சென்டிமென்ட் கலந்து உருவாக்கி இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக உள்ளது” என்றார்.
    விஜய்மோகன் இயக்கத்தில் விதார்த் - விஜய்வசந்த் இணைந்து நடிக்கும் ‘சீமத்தண்ணி’ படத்தின் முன்னோட்டம்.
    கிரேட் எம்பரர் புரொடக்‌ ‌ஷன்ஸ் எனும் புதிய படநிறுவனம் சார்பில் சி.பிரேம்குமார் தயாரிக்கும் படம் ‘சீமத்தண்ணி’.

    பல முன்னணி இயக்குனர்களிடம் 25-க்கும் மேற்பட்ட படங்களில் துணை, இணை இயக்குனராக பணியாற்றிய விஜய்மோகன். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

    விதார்த், விஜய் வசந்த் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக சாந்தினி, சுபிக்‌ஷா நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதில் ‘மலர்விழி’ என்னும் முக்கிய வேடத்தில் சாந்தினி நடிக்கிறார்.

    மசானி ஒளிப்பதிவு செய்கிறார். இசை - சதீஷ் திருமூர்த்தி, எடிட்டிங் - சி.எஸ்.பிரேம்குமார், கலை - விஜயராஜன், நடனம் - தினேஷ், ஜாய்மதி, ஸ்டண்ட் - நாதன்லீ, பாடல்கள் - நந்தலாலா, சீர்காழிசிற்பி, மோகன்ராஜ், தயாரிப்பு - பி.பிரேம்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்மோகன். படம் பற்றி கூறிய அவர்...

    “ரே‌ஷன் கடையே தாய் வீடாக நினைத்து வாழும் 2 அனாதை நண்பர்களுக்கும், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் ‘தங்கமாரி’ எனும் கதாபாத்திரத்திற்கும் நடக்கும் வாழ்க்கை பதிவுகளை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் யதார்த்தமாக உருவாகிறது” என்றார். இதன் படப்பிடிப்பை இயக்குனர் ஏ.சற்குணம் தொடங்கி வைத்தார்.
    ×