search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adivasi"

    • முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.
    • நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே படச்சேரி, முருக்கம்பாடி உள்ளிட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன.

    இந்த கிராமங்களில் நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்த குறை தீர்ப்பு முகாம் நடைெபற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

    பந்தலூர் தாசில்தார் நடேசன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, திருஞானசம்பந்தம், வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திர குமார், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். சாலை, நடைபாதை, தெருவிளக்கு, முதியோர் உதவிதொகை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் இதனை கைப்பற்றிவிட்டனர் என்று கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு கூறி உள்ளார். #Sabarimala #AyyappanTemple
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்துள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வரவேற்கத்தக்கது. இதனை எதிர்த்து போராடுவது சரியானதல்ல.

    ஐயப்பன் கோவில் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. சபரிமலையை ஆதிவாசி பகுதியாக அறிவிக்க வேண்டும். அனைத்து வயது பெண்கள் சபரிமலைக்கு அனுமதிப்பது முக்கியமல்ல. அதைவிட ஐயப்பன் கோவிலில் பெண்கள் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்.



    சபரிமலை ஐயப்பன் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் இதனை கைப்பற்றிவிட்டனர். சபரிமலையை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.  #Sabarimala #AyyappanTemple


    மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி, ஒரு சில பணக்காரர்களுக்காக மட்டுமே பாஜக உழைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 28-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பான பிரச்சாரங்களையும், தேர்தல் வேலைகளையும் காங்கிரஸ் மற்றும் பாஜக துவங்கிவிட்டன.

    இன்று ஆதிவாசி எக்தா பரிஷத் என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  ஆதிவாசிகளுக்கான சட்டத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். மேலும், தான் 2004-ம் ஆண்டு முதல் அரசியலில் இருப்பதாகவும், எப்போதாவது ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என பொய் வாக்குறுதி அளித்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.



    2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பீடு நடவடிக்கை மூலம் கருப்பு பணங்கள் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டதாகவும், யாரும் கைதும் செய்யப்படவில்லை யாரும் 15 லட்சம் பணமும் பெறவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், நீரவ் மோடி நமது பணமான 35 ஆயிரம் கோடி ரூபாயை திருடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும், விஜய் மல்லையாவோ 10 ஆயிரம் கோடியை திருடிவிட்டு நிதிமந்திரியிடம் சொல்லிவிட்டே வெளிநாடு சென்று ஒளிந்துகொண்டதாகவும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மேலும், மத்திய பாஜக அரசு, பணக்காரர்களுக்காக மட்டுமே பணியாற்றுவதாகவும், அப்படியே இருந்தாலும் கூட, ஏழைகளுக்கும், பழங்குடியின மக்களுக்காகவும் சற்று உழைக்குமாறும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #MadhyaPradesh #RahulGandhi #BJP
    ×