என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் - ப்ரியா ஆந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் முன்னோட்டம்.
    டிரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இதில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த், நாசர், சமுத்திரக்கனி, பால சரவணன், ஜான் விஜய், ரமா, சஞ்சை பாரதி, மாரிமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - பி.கே.வர்மா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, பாடல்கள் - கபிலன், எடிட்டிங் - லியோ ஜான்பால், கதை - கே.கதிர், ஸ்டண்ட் - அன்பறிவ், நடனம் - ஷெரீப், சதீஷ், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமானியம் டாக்கீஸ், கதை, திரைக்கதை, இயக்கம்- டி.ஜே.ஞானவேல்.

    படம் பற்றி கூறிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. “இந்த படம் இது வரை யாரும் பேசாத மிடில் பெஞ்ச்சர்ஸ் வர்க்கத்தைப் பற்றி பேசும் படம். அனைவரும் ரசிக்கும் படம்” என்றார்.



    நாயகன் அசோக் செல்வன், “நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான் இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் இது ஒரு பாசிட்டிவான படமாக இருக்கும். எல்லோருடைய மனதிலும் நல்லெண்ணத்தை விதைக்கும் படம் இது” என்று தெரிவித்தார்.

    நாயகி பிரியா ஆனந்த், “படங்களில் இனி நடிக்ககூடாது என்ற எனது மனநிலையை மாற்றி, நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கதை தூண்டியது” என்று கூறினார்.

    இசை அமைப்பாளர் நிவாஸ்கே பிரசன்னா, “இது என் மனதுக்கு நெருக்கமான கதை. இதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய ‘ஏண்டா இப்படி’ பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதை இணையதளத்தில் லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்”
    பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக உருவாகியிருக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் முன்னோட்டம்.
    பெற்றோர்களுக்கு சமூக ஊடகங்கள் பற்றி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக 'ஏன் இந்த மயக்கம்' உருவாகியிருக்கிறது. நாயகி டெல்லா, "மானாட மயிலாட" வின்னர் சொர்ணா, கிருஷ்ணா என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

    இப்படத்தை ஒயிட் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் எம்.அந்தோணி எட்வர்ட் தயாரித்துள்ளார். ஷக்தி வசந்த பிரபு இயக்கியுள்ளார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். முற்றிலும் புதுமுக நடிகர்களின் பங்கேற்பில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, பாண்டிச்சேரி, ஏற்காடு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முழு நீள பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

    ஒளிப்பதிவு - கே.பி.வேல், இசை - சித்தார்த் பாபு, பாடல்கள்  - ஏகாதசி, கருணா, த்ரேதா ரோஹினி, எடிட்டிங் - பீட்டர் பாபியா, ஆர்ட் -  ராகுல், நடனம் - விமல், ஸ்டண்ட் மாஸ்டர் - மகேஷ்.

    படம் பற்றி இயக்குநர் ஷக்தி வசந்தபிரபு பேசும் போது,

    "இன்று உலகம் சுருங்கிவிட்டது. உள்ளங்கையில் உலகத் தொடர்பு சாத்தியமாகியுள்ளது. இதனால் பல நன்மைகள் மட்டுமல்ல தீமைகளும் விளைகின்றன. படிக்கிற வயதில் பிள்ளைகள் சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கி தங்கள் நேரத்தை விரயமாக்குவதுடன் தகாத செயல்களில் இறங்கி, தங்கள் எதிர்காலத்தையே தொலைத்து விடுகிற விபரீதமும் நடக்கிறது. அப்படிப்பட்ட விபரீதங்கள் பற்றி எடுத்துச் சொல்லி பெற்றோர்களை எச்சரிக்கிற ஒரு படமாகத்தான் இந்த 'ஏன் இந்த மயக்கம்' படம்  உருவாகியுள்ளது" என்கிறார் இயக்குநர்.

    "வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன தப்பு செய்தாலும்  வெளியே தெரியாது என்கிற எண்ணம் உள்ளது. இது மிகவும் தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று எச்சரிக்கிற படம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன செயல்பாடுகளில் இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு பெற்றோரும் விழிப்புணர்வோடு எச்சரிக்கை உணர்வும் பெற வேண்டும் என்கிற நோக்கில் படம் உருவாகியுள்ளது" என்கிறார் இயக்குநர்.

    இப்படம் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    பி.வி.பிரசாத் இயக்கத்தில் அவரே தயாரித்து, நடித்திருக்கும் படமான ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் முன்னோட்டம்.
    பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.

    இதில் நாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ராசாமதி, வசனம் - ஆ.வெண்ணிலா, கலை - சகு, நடனம் - பாபி ஆண்டனி , ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், ஆக்‌ஷன் பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், என்.கணேஷ் குமார்.

    கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் - பி.வி.பிரசாத். இவர் காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.

    படம் பற்றி கூறிய அவர்... ‘“காதலில் விழுந்தேன்’ போல சகுந்தலாவின் காதலன் படம் வெற்றி பெறும். இந்தபடத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதைப் போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.

    ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை திரை வடிவமே இந்தபடம்.

    காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும் ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை. இந்த கதையை ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம். சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்றார்.
    பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
    பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’.

    இதில் கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ராசாமதி, குணசேகரன். கே,கலை - சகு, எடிட்டிங் - என். கணேஷ்குமார், ராமர்.ஆர்., நடனம் - பாபி ஆண்டனி, ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு - பிரசாத் பிக்சர்ஸ்

    கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம்-பி.ஆர்.பிரசாத்.

    படம் பற்றி அவர் கூறும் போது...

    “விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டன. எல்லாம் இருக்கிறது. சோறு தான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலைமுறை மக்களின் குரலாக ஒலிக்கப் போகிறது.

    ஐய்யோ தவறு செய்துவிட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது.

    பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன். ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம், அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

    பண்ணையாராகவும் விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச் மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச் மேனாகவும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் விவசாயியின் குரலாக இதில் பதிவு செய்கிறோம்” என்றார்.

    ஏ.எம்.பாஸ்கர் இயக்கத்தில் கீர்த்திதரன் - சுரேகா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக பி.மணிமேகலை தயாரிக்கும் படம் ‘நான் யாரென்று நீ சொல்’.

    இந்த படத்தில் கீர்த்திதரன் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார். நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் இந்த படத்தில் இரண்டாவது நாயகனாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சோனா, ஆனந்த்பாபு, பாண்டு, கராத்தேராஜா, மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    எடிட்டிங் - பிரேம், பாடல்கள் - இளையகம்பன், ஸ்டண்ட் - பம்மல் ரவி, இசை - ஜான் பீட்டர், ஒளிப்பதிவு - பாஸ்கர், நடனம் - ரவிதேவ், தயாரிப்பு - ஆர்.மணிமேகலை, எழுத்து, இயக்கம் - ஏ.எம்.பாஸ்கர். இவர் லட்சுமிராயை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்.



    “சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் பேக்கரி தொழில் செய்யும் கீர்த்திதரன் இருவரும் அவளை காதலிக்க முயற்சிக்கிறார்கள். சோனா கொலை செய்யப்படுகிறார். அவரை கொலை செய்தது யார் என்கிற கதை முடிச்சு தான் ‘நான் யாரென்று நீ சொல்’ படத்தின் திரைக்கதை. கிரைம் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது” என்றார்.

    கற்பனை கலந்த உண்மை கதையாக உருவாகியிருக்கும் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தின் முன்னோட்டம்
    அவ்னி மூவிஸ் சுந்தர்.சி வழங்கும் படம் ‘மீசைய முறுக்கு’.
    இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்து இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குகிறார். இவருடன் விவேக், நாயகிகள் ஆத்மீகா, மனிஷா மற்றும் விக்னேஷ் காந்த், மா.கா.பா.ஆனந்த், மாளவிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - யு.கே.செந்தில் குமார், கீர்த்திவாசன், படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், ஸ்டண்ட்- தளபதி தினேஷ், நடனம்- சிவாராக் சங்கர்.



    ஆதி கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார். ‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோகிராபி திரைப்படம் போல் இருக்கும்.
    கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை. இதுதான்`மீசைய முறுக்கு' திரைப்படம்.

    யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். பாடல்கள், படம் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற 21 -ந்தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டுரசிக்க வேண்டும் என்றார்.

    ஹிப்ஹாப் தமிழா ஆதி, “ தற்போது ஹீரோ மற்றும் இயக்குனராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்சிக்கு நன்றி. ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும்” என்று கூறினார்.
    தெலுங்கில் ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தமிழில் ‘மகேந்திரா’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.
    ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படம் ‘மகேந்திரா’.

    ‘மாநகரம்’ பட ஜோடியான சந்தீப் கி‌ஷன் - ரெஜினா இதில் மீண்டும் இணைகிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சாய் ஸ்ரீராம், இசை - அச்சுராஜாமணி, நடனம் - பிரதீப் அந்தோணி சேகர், சுசித்ரா சந்திரபோஸ், ஸ்டண்ட் - வெங்கட், எடிட்டிங் - கே.வெங்கடேஷ், இயக்கம் - மகேஷ்பாபு, தயாரிப்பு - என்.சாய்ராம்.



    தெலுங்கில் ‘ரா ரா கிருஷ்ணய்யா’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இந்த படம், மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘மகேந்திரா’ என்ற பெயரில் தமிழில் வருகிறது.

    தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் சிறுவனாக இருந்த போதே நல்லவனாக வாழ்கிறான். அவன் அவர்களை தன் வழிக்கு கொண்டு வர முயற்சிக்கிறான். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது கதை. இது காதல், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

    தீய சக்திகள் அழிய வேண்டும் என்று சந்தீப் கி‌ஷன் இதில் போராடுகிறார்” என்றார்.

    ‘மகேந்திரா’ விரைவில் திரைக்கு வருகிறது.
    ராஜ சுப்பிரமணியன் இயக்கத்தில் உதய் கார்த்திக் - சஹானா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இவளுக இம்சை தாங்க முடியல’ படத்தின் முன்னோட்டம்.
    ரூல் பிரேக்கர்ஸ் மற்றும் தியா சினி கிரியே‌ஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘இவளுக இம்சை தாங்க முடியுல’. வி.என். ராஜ சுப்ரமணியன் இதில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

    உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். சஹானா நாயகியாக நடித்துள்ளார். டி.வி. புகழ் சிவகாந்த் முழுநீள காமெடியனாக கலகலப்பூட்டுகிறார்.

    படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. எந்தப் படத்திலும் இடம் பெறாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

    முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.



    இது ஒரு முழுநீள டிராவல் காமெடி படம்.

    படம் பற்றி கூறிய இயக்குனர் ராஜ சுப்பிரமணியன்...

    “சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதை இது. இதன் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

    ஒளிப்பதிவு - ஏ.வி.வசந்த், இசை - மலேசியப்பாப் இசைக் கலைஞர் கேஷ்வில்லன்ஸ், எடிட்டிங் - வெங்கட்ரமணன், நடனம் - காதல் கந்தாஸ்.

    ‘இவளுக இம்சை தாங்க முடியல‘ படம், இம்மாத இறுதியில் வெளியாகிறது.
    மலேசிய தமிழ் தொழிலாளர்கள் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘தோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
    புளு ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘தோட்டம்’. இதில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.

    நாயகியாக தனா, விவியாஷான் என்ற சீன நடிகை நடிக்கிறார்கள். இவர்களுடன் ரூபன் லோகன் தியாகு, ஜீவி, அகில் வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சதீஷ் பி சரண், இசை - சாய், பாடல்கள் - நா.முத்துக்குமார், அண்ணாமலை மாணிக்க சண்முகம், எடிட்டிங் - வினோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - அரங்கண்ணல் ராஜ்.



    படம் பற்றி இயக்குனர் கூறும் போது...

    “ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தை கொண்டுதான். இலங்கை, மலேசியா உள்பட எல்லா நாடுகளும் இதில் அடங்கும்.

    அங்குள்ள விவசாய கூலித் தொழிலாளிகள் பெரும்பாலும் இந்தியர்களே, அதிலும் குறிப்பாக தமிழர்களே... அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகிவிட்டது. தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கைமாறிவிட்டது. அப்படி கைமாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினையை இதில் அலசியிருக்கிறோம்.

    அதே போல கலப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ் பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம், மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக வி‌ஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.

    மலேசிய நடிகர், நடிகைகள் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம்.

    விரைவில் உலக மெங்கும் தோட்டம் வெளியாகிறது” என்றார்.
    மார்டின் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் - சூஷா குமார் ஜோடி சேரும் ‘மாணிக்’ படத்தின் முன்னோட்டம்.
    மோகிதா சினி டாக்கீஸ் நிறு வனம் சார்பில் எம். சுப்பிரமணி யன், தயாரிக்கும் படம் ‘மாணிக்‘.

    மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இதில் நாயகியாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்கிறார். இவர்களுடன் அருள்தாஸ், அணு, புஜ்ஜி பாபு, கோலிசோடா சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - தரன்குமார், ஒளிப்பதிவு - எம்.ஆர்.பழனிகுமார், படத்தொகுப்பு- கே.எம்.ரியாஸ். கலை - வினோத், இயக்கம் - மார்டின்.



    படம் குறித்து இயக்குனர் மார்டின் கூறும்போது, “ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் வீரமணி, இருவரும் ஒரு வி‌ஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க, ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச் சினைகள் என்ன, இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா? என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர் களின் சாதனை பயணம் எந்த வி‌ஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ்.

    காமெடி கலந்த பேண்டசி படமாக ‘மாணிக்’ உருவாகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.

    படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் நடைபெறுகிறது.
    வீட்டை விட்டு வெளியேறும் இளம் ஜோடியின் கதையான ‘காதல் பிரதேசம்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீமுத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் ‘காதல் பிரதேசம்’.

    இதில் புதுமுக நாயகன், நாயகியாக பிரசாத் - சயானா நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சிவா, சத்யா ஆனந்த், விஜய் ஆர்.ஆனந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - கலை, இசை - எஸ்.ஆர்.இந்திரன், பின்னணி இசை - சாஸ்தா, இணை இயக்கம் - பி.கலை மணி, தயாரிப்பு - ஆர்.பாலச்சந்தர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.வடிவேல்.

    “கதாநாயகனின் தந்தை தன் ஒரே மகன் அருணை ராணுவத்தில் சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அருண் அதே ஊரில் நர்சுக்கு படிக்கும் ஆதித்யாவை காதலிக்கிறான். பெற்றோர்கள் எதிர்ப்பு காரணமாக இருவரும் ஒரு மலைப்பிரதேசத்திற்கு சென்று விடுகின்றனர்.

    மூன்று நாட்கள் தங்கிவிட்டு பிறகு பெற்றோர்களை சந்தித்தால் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன் போகிறார்கள். அங்கு அவர்கள் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்தார்களா? பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டும் பெற்றோர்களை சந்தித்தார்களா? என்பது கதை” என்றார்.
    ரிஷி இயக்கத்தில் அவரே நாயகனாகவும், பிரியங்கா, ‌ஷர்மா நட்சத்திரா நாயகிகளாகவும் களமிறங்கும் ‘143’ படத்தின் முன்னோட்டம்.
    ஐ டாக்கீஸ் பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படம் ‘143’.

    காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்படும் எண் 143. ‘ஐ லவ் யூ’ என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமே இது.

    இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப்படாத இந்த தலைப்பை கொண்ட படத்தை இயக்குனர் ரிஷி, அவரே கதை எழுதி, இயக்கி நடிக்கிறார்.

    நாயகிகளாக பிரியங்கா, ‌ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். இவர்களுடன் சுதா ராஜசிம்மன், பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா உள்பட பலர் நடிக்கிறார்கள். சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.



    ஒளிப்பதிவு - ராஜேஷ் ஜே.கே, இசை - விஜய் பாஸ்கர், கலை - மணிமொழியன், ஸ்டண்ட் - தீப்பொறி நித்யா, எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ், தயாரிப்பு - சதீஷ் சந்திரா பாலேட், கதை, திரைக்கதை, வசனம்,இயக்கம் - ரிஷி.

    “அமாவாசை அன்று பிறந்த நாயகன், பவுர்ணமி அன்று பிறந்த நாயகி. இவர்கள் காதலுக்கு ஒரு வில்லன். இப்படி மூன்று கதா பாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதை ஆக்கம். இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும் படம். படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது” என்றார்.
    ×