என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஜெய பிரகாஷ் இயக்கத்தில் அத்விக் ஜலந்தர் அறிமுகமாகும் ‘விண்வெளி பயணக் குறிப்புகள்’ படத்தின் முன்னோட்டம்.
    லெமூரியன் திரைக்களம் சார்பில் தயாராகிவரும் திரைப்படம் ‘விண்வெளிப் பயணக் குறிப்புகள்’.

    இந்த படத்தில் கதை நாயகனாக அத்விக் ஜலந்தர் அறிமுகமாகிறார். இவர் லண்டன் பெட்போர்ட் யுனிவர் சிட்டியில் மாஸ் கம்யுனிகே‌ஷன் படித்தவர். பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் நடிப்புக்கலை பயின்றவர். இவருடன் புஜா ராமகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், தற்காப்புக்கலை வீரர் ஜோகிகுமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    நேரியல் முரண் வடிவில் திரைக்கதை அமைத்து இதை அறிமுக இயக்குனர் ஜெய பிரகாஷ் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் அவரே கவனிக்கிறார். தயாரிப்பு - யாழ்மொழிரா பாபுசங்கர், ஜெய பிரகாஷ்.



    ஒரு சிறு நகரத்தில் அரசியல் பின்புலத்தோடு அதிகாரம் செலுத்திவரும் படிப்பறிவற்ற கதைநாயகன். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அவன் செய்யும் முயற்சிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிவரும் நகர மக்கள் அவனுடைய கோமாளித்தனங்களுக்கு முடிவு கட்ட திட்டமிடும் போது, தனது விண்வெளி சுற்றுலா பயணத்திட்டத்தை அறிவிக்கிறான்.

    கதை நாயகனுக்கு எப்படி விண்வெளிப்பயணம் செல்லும் ஆசை வந்தது? தனது குறிக்கோளில் அவன் எப்படி வெற்றியடைந்தான்? அவனைத் தடுக்க நகர மக்கள் செய்த முயற்சிகள் என்ன? இவற்றையெல்லாம் சுவாரசியமான, அவல நகைச்சுவையாக (பிளாக் காமெடி) சொல்லியிருக்கும் படமே “விண்வெளிப் பயணக் குறிப்புகள்” .

    இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வாளர் பறையிசைக் கலைஞர் சே.தமிழ் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

    இசை, பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
    ஜெஸ்டின் திவாகர் இயக்கத்தில் தட்டிக் கேட்கும் கதையான ‘இவன் ஏடாகூடமானவன்’ படத்தின் முன்னோட்டம்.
    ஆட்டோ குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் எஸ். சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூட மானவன்’.

    இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.



    ஒளிப்பதிவு - ஆதி.கருப்பையா, இசை - வித்யா‌ஷரன், பாடல்கள் - முத்து விஜயன், எடிட்டிங் - யோக பாஸ்கர், நடனம் - ஜாய்மதி, சுரேஷ், ஸ்டண்ட் - ரமேஷ்பாபு, தயாரிப்பு - எஸ்.சைலேஷ் சிவராஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஜெஸ்டின் திவாகர் படம் பற்றி கூறிய அவர்....

    “அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக் களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன் வசப்படுத்தி கொள்கிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன் வெகுண்டெழுந்து எவ்வாறு அதை மீட்கிறான் என்பதே கதைகளம். காதல், நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறோம்.

    யோகி சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா நடிப்பு ரகுவரனைப் போன்றும், வசன உச்சரிப்பு சத்யராஜ் போன்றும் இயல்பாக உள்ளது” என்றார்.
    இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படும் ‘குயின்’ படத்தின் முன்னோட்டம்.
    வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தியில் தயாரித்த படம் ‘குயின்’.

    கங்கனா ரணாவத் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விகாஸ் பாஹல் டைரக்டு செய்தார். லண்டனை சேர்ந்த கோல்டன் கிரேம் நிறுவனம் இந்த படத்தை தென் இந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை வியாம்காம் 18 மோ‌ஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது. இணை தயாரிப்பாக ஸ்டார் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த நடிகர் தியாகராஜனிடமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



    இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த படத்தை தமிழில் ‘வானில் தேடி நின்றேன்’ என்ற பெயரில் தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. நாயகியின் தந்தையாக நாசர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதுபற்றி கூறியுள்ள கோல்டன் கிரேப் நிறுவனம்...

    ‘நாங்கள் ஏற்கனவே பாலிவுட் நிறுவனத்திடமிருந்து ‘குயின்’ படத்தின் உரிமைகளை வாங்கி நட்சத்திர தேர்வில் ஈடுபட்டு வருகிறோம். பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டோடு (பி.எப்.ஐ) எல்லா மொழிகளும் பதிவு செய்யப்பட்டு விட்டன. வேறு யாரும் பதிவு செய்யவோ, ஐரோப்பா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவோ முடியாது. எனவே மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் ரீமேக் செய்வதற்கு உரிமை கொண்டாட முடியாது. விரைவில் எங்கள் தரப்பிலிருந்து இந்த படம் பற்றிய அறிவிப்பு வரும்’ என்று தெரிவித்துள்ளது.
    ஏ.எஸ். தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ‘கிடா விருந்து’ படத்தின் முன்னோட்டம்.
    கே.பி.என்.சினி சர்க்யூட் தயாரிக்கும் படம் ‘கிடா விருந்து’. இதில் எஸ்.பி. பிரசாத், ஷாலினி, கஞ்சா கருப்பு, ரஞ்சன், கே.பி.என். மகேஷ்வர், சேரன்ராஜ் , தங்கம், தமிழ், மணிமாறன், ‘வீரம்’ சையது, சுகி, ராணி,சுமிதா, அர்ச்சனா, திலக், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - எஸ்.ஆர்.வெற்றி, இசை - ‘பிரின்ஸ்’ நல்ல தம்பி, எடிட்டிங் - கோபால், தயாரிப்பு - கே.பி.என்.மகேஸ்வர், இணை தயாரிப்பு - எஸ்.பி. பிரசாத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ.எஸ். தமிழ்ச்செல்வன்.



    “ஒரு செல்வந்தரின் பிள்ளைகளான 4 பேர் பொறுப்பின்றி சுற்றித் திரிகிறார்கள், இவர்கள் ஒரு சமயத்தில் நிலை தடுமாறுகிறார்கள். அப்போது தங்களைப் பற்றி உணர்கிறார்கள். அதிலிருந்து மீண்டார்களா? பழைய நிலைக்கு திரும்பினார்களா? என்பதே கதை” என்றார்.

    படப்பிடிப்பு மேட்டூர் சேலம், கொளத்தூர், குருமனூர், மலைக் கிராமங்களில் 45 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
    விஜய் கே.மோகன் இயக்கத்தில் சரிஷ் - அட்சய பிரியா நடிப்பில் உருவாகியுள்ள முரட்டு காதல் கதையான ‘இமை’ படத்தின் முன்னோட்டம்.
    ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி.டோரி தயாரித்துள்ள படம் ‘இமை’.

    முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண் திருமொழிவர்மன் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - வி.கே.பிரதீப், இசை - மிக்குகாவில், ஆதிப், பாடல்கள் - யுகபாரதி, நடனம் - தீனா,ஸ்டண்ட் - டேஞ்சர் மணி, ஒப்பனை - மிட்டா ஆண்டனி.

    இயக்கம் - விஜய் கே. மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’ ‘வேனல் மரம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.



    இயக்குநர் விஜய் கே.மோகன், தான் இயக்கும் முதல் படம் பற்றி கூறும் போது.....

    ‘இமை’ ஒரு முரட்டுத் தனமான காதல் கதை. மிகவும் கரடுமுரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை.

    “திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

    அந்த தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன்”.

    ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக் கதையையே ‘இமை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்.” என்றார்.

    50-நாட்களில் படத்தை முடித்துள்ளனர். அடுத்த மாதம் ‘இமை’ திரைக்கு வருகிறது.
    திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர் ராஜா நடிக்கும் கரடு முரடான காதல் கதையான ‘அருவா  சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
    ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா தயாரிக்கும் படம் ‘அருவா சண்ட’.

    இந்த படத்தின் கதை நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது. புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், வில்லனாக ஆடுகளம் நரேன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.

    இது தரண் இசையமைக்கும் 25-வது படம். பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை - ஏ.டி.ஜெ, ஸ்டண்ட் - மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா, தயாரிப்பு - வி.ராஜா.

    தமிழ் திரையுலகின் முதல் டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கிய வரும் ‘ரணதந்த்ரா’, ‘சிலந்தி 2’ படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படம் பற்றி கூறிய அவர்...

    “இது தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக்கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகிறது. தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வருகிறது” என்றார்.

    ‘அருவா சண்ட’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் ‘96’ படத்தின் முன்னோட்டம்.
    ‘ரோமியோ ஜூலியட்’, ‘கத்திசண்டை’ படங் களை தயாரித்த மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

    இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் காளிவெங்கட், வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெறுகிறது.

    ஒளிப்பதிவு - சண்முகசுந்தரம், இசை - கோவிந்த் மேனன், எடிட்டிங் - கோவிந்தராஜ், கலை - வினோத் ராஜ்குமார், பாடல்கள் - உமாதேவி, கார்த்திக் நேத்தா, தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சி.பிரேம்குமார். இவர் ‘பசங்க’, ‘சுந்தர பாண்டியன்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.



    இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமா தேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர். அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்படுகிறது.

    அத்துடன் கல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. ஜனரஞ்சகமான படமாக ‘96’ உருவாகிறது.
    அன்பழகன் இயக்கத்தில் `கயல்' சந்திரன் - ஆனந்தி மீண்டும் ஜோடி சேரும் ‘ரூபாய்’ படத்தின் முன்னோட்டம்.
    காட் பிக்சர்ஸ் பிரபு சாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே. எண்டர்டைன்மன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’.

    இதில் சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமான இவர்கள் மீண்டும் இதில் ஜோடி சேர்கிறார்கள். இவர்களுடன் கிஷோர் ரவிசந்திரன், சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல் ராஜா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - வி.இளையராஜா, இசை - டி.இமான், பாடல்கள் - யுக பாரதி, எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - ஏ.பழனிவேல், நடனம் - நோபல், ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல், இணை தயாரிப்பு - ஆர்.ரவிச்சந்திரன், தயாரிப்பு - பிரபுசாலமன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எம்.அன்பழகன். படம் பற்றி இயக்குனர் அன்பழகனிடம் கேட்ட போது...



    “கயல் சந்திரன், கிஷோர் ரவிசந்திரன் இருவரும் நண்பர்கள், இவர்கள் சொத்து ஒரு லாரி தான். தவணை பணம் கட்டாவிட்டால் லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை வருகின்றனர்.

    அங்கு சின்னிஜெயந்த், ஆனந்தி ஆகியோரை சந்திக்கிறார்கள். அப்போது எதிர்பாராத பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள். இறுதியில் அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பது மீதிகதை. தெளிவான திரைக்கதை மூலம் சொல்லி இருக்கும் ஜனரஞ்சகமான படமாக ‘ரூபாய்’ இருக்கும்” என்றார்.
    ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குபின் நமீதா நடிக்கும் ‘மியா’ படத்தின் முன்னோட்டம்.
    இ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரிக்கும் படம் ‘மியா’. இதை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர்.

    தென்இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் இதில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - ரெஜி மோன்,ஒளிப்பதிவு - ரவி சுவாமி, கலை - பிரபா மன்னார்காடு, பாடல்கள் - முருகமந்திரம், படத்தொகுப்பு- வினீத், தயாரிப்பு - மின்ஹாஜ், எழுத்து - இயக்கம் ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா.



    இந்த படத்தை பற்றி இயக்குனர்களிடம் கேட்டபோது, “‘மியா’ மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது தான் ‘மியா’ படத்தின் கதை. கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம்” என்றார்.

    படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளா, திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. மியா படம் இந்த மாதம் வெளியாகிறது.
    முரளிபாரதி இயக்கத்தில் அகில் - அனுகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘அலை பேசி’ படத்தின் முன்னோட்டம்.
    விஜய்லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினர் தயாரிக்கும் முதல் படம் ‘அலைபேசி’.

    இதில் ‘கல்லூரி’ அகில், அனுகிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் சிங்கம் புலி, அனுமோகன், கானா பாலா, முல்லை கோதண்டம், நெல்லை சிவா, ஜோதி, சாந்தி, கோவை செந்தில், ஜெயலட்சுமி, தேனி முருகன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - எஸ்.பி. எல்.செல்வதாஸ், பாடல்கள் - கானா பாலா,பொன்சீமான், எஸ்.பி.எல்.செல்வதாஸ், ஒளிப்பதிவு- மோகன், படத்தொகுப்பு - ஆர்.கேசவன், ஸ்டண்ட் - ஸ்பீடுமோகன், கலை - சுந்தர்ராஜன், தயாரிப்பு - எஸ்.ராமசந்திரன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - முரளிபாரதி. படம் பற்றி கூறிய இயக்குனர்...



    “இது அலைபேசி காலம். அந்த அலைபேசியால் காதல் எப்படி எல்லாம் பந்தாடப் படுகிறது. அலைபேசியால் உருவான காதல் ஒன்று சேர்ந்ததா? ஒரு தலைக்காதல் ஆனதா? இளம் சமுதாயத் தினரின் நெஞ்சங்களில் அலைபேசிகள் படுத்தும்பாடு... அதனால் ஏற்படும் சுமைகள் மற்றும் சுகங்களை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது தான் இந்த படத்தின் கதை” என்றார்.

    சென்னை, கொடைக் கானலில் ‘அலைபேசி’ வளர்கிறது.
    அருந்தவராஜா இயக்கத்தில் வாராகி - ஷிவானி நடிப்பில் உருவாகி வரும் ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’.

    இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதை.

    இந்த படத்தில் நாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.

    ஒளிப்பதிவு - நாககிருஷ்ணன், திரைக்கதை, இயக்கம் - அருந்தவராஜா. இவர் பாலு மகேந்திரா, சேது மாதவன், பாலகுமாரன் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.



    படம் குறித்து கூறிய வாராகி, “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக் கொருவர் இருஎதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இதில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும் போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.

    இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர் டி சிவா, ஜே.கே ரித்தீஷ், தயாரிப்பாளர், இயக்குனர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினார்கள்.
    இரா.சுப்பிரமணியன் இயக்கத்தில் சுரேஷ் சந்திரா - சுனுலட்சுமி நடிப்பில் தப்பு செய்யக்கூடாது என்பதை சொல்லும் ‘சாவி’ படத்தின் முன்னோட்டம்.
    தி ஸ்பார்க் லேண்ட் நிறுவனம் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்கும் படம் ‘சாவி’.

    இயக்குனர் பிரபுசாலமனிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் சந்திரா இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சுனுலட்சுமி நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளா வரவு. இவர்களுடன் ராஜலிங்கம் உதயாபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா, பிரகதீஷ்வரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    இசை - சதீஷ் தாயன்பன், ஒளிப்பதிவு - சேகர்ராம், எடிட்டிங் - சுரேஷ்அர்ஸ், கலை - வீராசமர், ஸ்டண்ட் - சுப்ரீம்சுந்தர், நடனம் - விஜிசதீஷ், அபிநயஸ்ரீ, இயக்கம் - இரா.சுப்பிரமணியன். இவர் அபியும் நானும் படத்துக்கு வசனம் எழுதியவர்.



    ‘சாவி’ படம் பற்றி அதன் தயாரிப்பாளரும் நாயகனுமான சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது....

    “சாதாரண மக்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிம்மதியாக வாழ்கிறார்கள். ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு தப்பு செய்தால் நிம்மதி பறிபோய்விடும் என்ற யதார்த்தமான கதை. இதை அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். இதற்கு நிச்சயம் வரவேற்பு கிடைக்கும்“ என்றார்.

    இயக்குனர் இரா.சுப்பிரமணியன் கூறும்போது, “நாயகன் சாவி தயாரிக்கும் தொழில் செய்பவர். நாயகி ஒரு கடையில் வேலை பார்க்கிறார். நேர்மையாக வாழும் ஹீரோ வாழ்வில் ஒரு பிரச்சினை வருகிறது. அதில் இருந்து அவர் மீண்டாரா என்பது கதை” என்று கூறினார்.
    ×