என் மலர்
சினிமா செய்திகள்
- ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
- இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
- பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.
இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
- 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது.
- இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
'ராமம் ராகவம்' படத்தின் முதல் காட்சியை (கிளிம்ப்ஸ்) தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தந்தை- மகனுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் தன்ராஜ் கொரானானி இயக்குனராக அறிமுகமாவது மட்டுமின்றி நடித்துள்ளார். மேலும், தன்ராஜின் அப்பாவாக சமுத்திரக்கனியும் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஹனுமான் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

இந்த படத்தின் முதல் காட்சி நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது. மேலும், இந்த வீடியோவின் இறுதியில் 'என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்' என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.
இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
2021-ம் ஆண்டில் வெளியான 'சாஷி' படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். துர்காபிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பிருத்விபோலவரபு தயாரிக்கிறார்.
- நான் வெளிப்படையாக கூறினாலும் நம்ப மறுக்கின்றனர் என்றார் ஷாருக்
- எனக்கு மேற்கத்திய திரைத்துறையில் நண்பர்கள் உள்ளனர் என்றார் ஷாருக்
1992ல் "தீவானா" எனும் தனது முதல் திரைப்படம் மூலம் இந்தி திரையுலகில் கால்பதித்தவர் ஷாருக் கான் (58).
30 வருடங்களுக்கும் மேலாக இந்தி திரையுலகில் பல வெற்றிப்படங்களை வழங்கி, சக முன்னணி கதாநாயகர்களான சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோரில், "கிங் கான்" (King Khan) என அழைக்கப்படும் ஷாருக், சில தொடர் தோல்விகளுக்கு பிறகு கடந்த 2023ல், ஜவான், பதான், மற்றும் டன்கி என 3 தொடர் வெற்றிப்படங்களை அளித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 14 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய் நகரில், உலக அரசுகளின் உச்சி மாநாடு (World Governments Summit 2024) நடந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாடிய ஷாருக் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்காதது ஏன் என கேட்கப்பட்டது.

அதற்கு ஷாருக் பதிலளித்ததாவது:
நான் வெளிப்படையாக பலமுறை இதற்கு பதிலளித்து விட்டேன். ஆனால், என்னை எவரும் நம்ப மறுக்கின்றனர். இருந்தும் மீண்டும் சொல்கிறேன்.
எனக்கு இந்தியாவிலிருந்து வெளியே ஹாலிவுட் உட்பட எந்த அன்னிய மொழி படங்களிலும் நடிக்க அழைப்பு வரவில்லை.
மேற்கத்திய திரைப்பட துறையை சார்ந்த பலருடன் நான் பழகியுள்ளேன். எனக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பல திறமையானவர்களுடன் நல்ல நட்பும் உண்டு.
ஆனால், என்னை எவரும் ஒரு நல்ல வேடத்திற்காக இதுவரை அங்கிருந்து அழைத்ததில்லை.
என்னை ஏற்று கொள்ள கூடிய பார்வையாளர்களுக்கு பிடித்தமான படங்கள் அளிக்க நான் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீலம் புரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய படம் J.பேபி.
- இந்த படத்தை சுரேஷ் மாரி இயக்கியுள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தின் 2-வது சிங்கிள் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.
இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். இது சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படமாகும். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் 2-வது சிங்கில் நாளை (16-ம் தேதி) வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.
ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்தது. இப்படத்துக்கு சென்சார் வாரியம் 'யு' சான்றிதழ் வழங்கி உள்ளது. வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
- 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- முன்னதாக இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் 'கயல்' ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் மங்கை படத்தின் முதல் பாடலை கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ளார். 'கிடா' படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக இந்த படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இதர தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
- மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார்.
- வருகிற 23-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.
ஷெரிஃப் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள புதிய படம் ரணம். வைபவின் 25-வது படமாக ரணம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் வைபவுடன் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 23-ம் தேதி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அதையொட்டி இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்த வரிசையில், தற்போது ரணம் படத்தின் "பொல்லாத குருவி" மூன்றாவது பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட்டுள்ளார். ஷெரிஃப் எழுதியிருக்கும் இந்த பாடலை ரங்கோதம் மற்றும் ஷெரிஃப் இணைந்து பாடியுள்ளனர்.
அரோள் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பாலாஜி கே ராஜா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை முனீஸ் மேற்கொண்டுள்ளார்.
- கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
- படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். விஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிளான "மறுபடி நீ" பாடலை படக்குழு வெளியிட்டது.
- 1983ல் உதயம், சந்திரன், சூரியன் என 3 அரங்குகளுடன்"உதயம் காம்ப்ளெக்ஸ்" திறக்கப்பட்டது
- சுமார் 62 ஆயிரம் சதுர அடி கொண்ட வளாகத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என தெரிகிறது
90களின் இறுதி வரை பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தவை திரையரங்குகளும், தொலைக்காட்சியும் மட்டுமே.
ஒரே வளாகத்தில், 1 திரையரங்கமும், ஒன்றுக்கும் மேற்பட்ட 2, 3, 4 திரையரங்குகளும் 4 காட்சிகளுடன் மக்களை மகிழ்வித்தன.
சென்னை மக்களுக்கு, அலங்கார் எனும் 1 திரையரங்கம்; ஆனந்த், லிட்டில் ஆனந்த் மற்றும் ஈகா, அனுஈகா எனும் 2 திரையரங்கங்கள்; சத்யம், சுபம், சாந்தம் எனும் 3 திரையரங்கங்கள்; தேவி, தேவிபாலா, தேவிகலா, தேவி பாரடைஸ் என 4 திரையரங்கங்கள் என புதிய திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடங்களாக அரங்கங்கள் காட்சியளித்ததை இன்றளவும் சினிமா ரசிகர்கள் நினைவு கூர்கின்றனர்.
இப்பட்டியலில் தென் சென்னை மக்களின் விருப்பமான திரையரங்கு வளாகமாக அசோக் நகரில், அசோக் பில்லருக்கு அருகே "உதயம் காம்ப்ளெக்ஸ்" எனும் பெயரில் உதயம், சந்திரன், சூரியன் என ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்ட 3-அரங்க காம்ப்ளெக்ஸ் விளங்கியது.
பல வருடங்களுக்கு பிறகு "மினி உதயம்" என சிறிய திரையரங்கம் ஒன்றும் அதில் உருவாக்கப்பட்டது.

"உதயம் தியேட்டரில, என் இதயத்தை தொலச்சேன்…" என இசையமைப்பாளர் தேவா ஒரு திரைப்படத்தில் பாடலே பாடியிருப்பார்.
ஆனால், கடந்த 15 வருடங்களாக, காலத்தை வென்ற திரைப்படங்களை திரையிட்ட அரங்குகளுக்கு "மல்டிப்ளெக்ஸ்" வடிவ திரையரங்குகள் கடும் போட்டியை கொடுத்து வருகின்றன.
வர்த்தக ரீதியாக 80களிலும் 90களிலும் ஈட்டிய வருவாயை மீண்டும் எட்ட முடியாமல், அதிகரிக்கும் பராமரிப்பு செலவு மற்றும் பணியாட்கள் ஊதியம், வரிகள், மின்சார கட்டணம் என பல்வேறு செலவினங்களை சமாளிக்க முடியாமல், பல திரையரங்கங்கள், வணிக வளாகங்களாகவும், அபார்ட்மென்ட்களாகவும் உருமாறின.
இதில், தற்போது "உதயம் காம்ப்ளெக்ஸ்" இணைந்துள்ளது.
உதயம் திரையரங்க உரிமையாளர்கள், சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனம் (காஸா கிராண்ட்) ஒன்றுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, "உதயம் காம்ப்ளெக்ஸ்" முற்றிலும் இடிக்கப்பட்டு அங்கு புதிய கட்டிடம் அமையவுள்ளது.
அங்கு ஒரு புதிய குடியிருப்பு வளாகம் மற்றும் அலுவலக வளாகம் வரவுள்ளதாக தெரிகிறது.
1983ல் திறக்கப்பட்ட "உதயம் காம்ப்ளெக்ஸ்" 40 வருடங்களாக மக்கள் நினைவில் நிற்கும் ஒரு முக்கிய இடமாகும்.

தாராளமான இரு சக்கர வாகன நிறுத்துமிடம், முன் பக்கம் பெரிய காலி இடம், அரங்க வாயிலில் அமர்ந்து கொள்ள பல படிகள் என பல வசதிகள் இருந்ததால், பொதுமக்களுக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு - விருப்பமான திரையரங்க வளாகமாக "உதயம் காம்ப்ளெக்ஸ்" இருந்தது.
62 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த கட்டிடத்திற்கு 15 பேர் பங்குதாரர்கள் என கூறப்படுகிறது.

கே. பாக்யராஜின் "இது நம்ம ஆளு", விக்ரமனின் "புது வசந்தம்", மணிரத்னத்தின் "அஞ்சலி", "தளபதி", சந்தானபாரதியின் "குணா" ஆர்.வி. உதயகுமாரின் "பொன்னுமணி", தரணியின் "கில்லி" உள்ளிட்ட ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பல வெற்றி திரைப்படங்களை இங்கு கண்டது பசுமையாக நினைவில் உள்ளதாக கூறும் திரைப்பட ரசிகர்கள், "உதயம்" இடிபடும் செய்தியை கனத்த இதயத்துடன் ஏற்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் முழு திரைப்படத்தையும் பார்க்கும் காலகட்டத்தில் வாழ்ந்தாலும் திரையரங்குகளில் அகன்ற வெண்திரையில், பலருக்கு நடுவே, விருப்பமானவர்களுடன் அமர்ந்து, திரைப்படங்களை காண்பது ஒரு தனி அனுபவம்.
திரைப்பட வளாகமாக மட்டுமின்றி சென்னைக்கு ஒரு அடையாளமாகவும் இருந்து வந்தது "உதயம் காம்ப்ளெக்ஸ்" என்றால் அது மிகையாகாது.
- இசையமைப்பாளர் தமன் ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பு அளித்தார்.
- சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10-வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது.
எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார்.

அதே போல் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆரம்பகட்டத்திலேயே, கானா சேட்டு என்ற பங்கேற்பாளருக்கு சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைசால் கானா சேட்டு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இறுதிக்கட்ட வெற்றியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தாண்டி, ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு பங்கேற்பாளருக்குக் கிடைத்தது அனைவரையும் வியக்கவைத்த அற்புத தருணமாக அமைந்தது.
- காதலர்கள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
- சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 14ம் தேதி (இன்று) 'காதலர் தினம்'. உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள், தம்பதிகள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்களும் காதலர் தினத்தில் தங்களது காதல் படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு காதலர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இந்த படம் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் விஜய்சேதுபதி -த்ரிஷா நடித்த '96' திரைப்படம் காதலர் தினத்துக்குக்காக இன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் சில தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
- சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது.
- கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் 'கங்குவா' என்ற புதிய படத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ளார். இந்த படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி.
இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா 6 வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2 வருடங்களாக நடந்தது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தின் டிஜிட்டல் பணிகளை நடிகர் சூர்யா நேரில் பார்வையிட்டார்.
அதை தொடர்ந்து படக்குழுவை பாராட்டி நன்றி தெரிவித்தார். கங்குவா' திரைப்படம் உலகம் முழுவதும் விரைவில் திரையிடப்பட உள்ளது.






