என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
    • மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைதி படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ். இயக்குநர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நாயகனாக அறிமுகமானார். தற்போது, இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகும் ரசவாதி படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், மலையாளத்தில் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடிக்க உள்ளதாக அர்ஜுன் தாஸ் அறிவித்து உள்ளார். இயக்குநர் அஹமது கபீர் இயக்கும் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.

    கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற லோகேஷ் கனகராஜ் படங்களின் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், முதன்முறையாக மலையாள சினிமாவுக்கு ஹீரோவாக வருகிறார். ஜூன் மற்றும் மதுரம் மற்றும் 'கேரளா க்ரைம் பைல்ஸ்' என்ற வெப் சீரியலுக்குப் பிறகு அகமது கபீர் புதிய படத்தை இயக்குகிறார்.

    இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். படத்தின் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது இப்படம் காதலை மையமாக வைத்து எண்டர்டெயினராக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத்தொகை 10 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.
    • சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் சினிமா துறைகளில் சாதித்தவர்களுக்கு மத்திய அரசால் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 2021-ம் ஆண்டுக்கான தேசிய விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக விருது வழங்குவது தள்ளிப்போனது.

    இந்த ஆண்டு 2022-ம் ஆண்டு சினிமா துறைகளுக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தேசிய விருதுக்கான விண்ணப்பம் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் முடிவடைந்தது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது இந்திரா காந்தி பெயரிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான விருது நர்கிஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த இரண்டு விருதுகளும் அவர்களது பெயரில் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது "இயக்குனருக்கான சிறந்த அறிமுக படம்" என்ற பெயரில் வழங்கப்படும். தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படத்திற்கான நர்கிஸ் தத் விருது தேசிய சமூக மற்றும் சுற்றுசூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது என்ற பெயரில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது பெரும் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் பரிசுத்தொகையை பங்கிட்டு கொள்வார்கள். இனிமேல் இயக்குனருக்கு மட்டுமே இந்த பணம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சமூகப் பிரச்சனைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம் என இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. தற்போது அது ஒரே விருதாக வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய திரைத்துறையில் சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் தாதாசாகேப் பால்கே விருதை பெறும் நபருக்கு முன்னதாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அது 15 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த அனிமேசன் சினிமா மற்றும் ஸ்பெசல் எபெக்ட்ஸ் ஆகிய விருதுகள் ஒன்றாக்கப்பட்டு சிறந்த ஏவிஜி (animation, visual effects, gaming and comics) சினிமா பெயரில் வழங்கப்பட இருக்கிறது.

    • இந்த படப்பிடிப்பில் சிவகாத்திகேயன் கலந்து கொண்டார்.
    • நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் எஸ்.கே.23. ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். 

    இந்த படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடந்தது. இந்த படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகளை ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தொடங்கினார். இந்த படப்பிடிப்பில் சிவகாத்திகேயன் கலந்து கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல்வேறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

    இந்த நிலையில் தற்போது 'SK23' படத்தில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்றுகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்க உள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2014-ல் வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் ஏஆர் முருகதாஸ் கதை எழுத அவரது உதவி இயக்குனர் திருக்குமரன் இயக்கினார். 

    • மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
    • டைரக்டர் மணிகண்டனின் வீட்டு வாசல் கேட் பகுதியில் ஒரு பாலித்தீன் பை தொங்கிக்கொண்டிருந்தது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரை சேர்ந்தவர் சினிமா டைரக்டர் மணிகண்டன்.

    இவர் 'காக்கா முட்டை', 'கடைசி விவசாயி' ஆகிய தேசிய விருது பெற்ற படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர்.

    மத்திய அரசால் வழங்கப்பட்ட 2 தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை உசிலம்பட்டி எழில்நகரில் உள்ள வீட்டில் மணிகண்டன் வைத்திருந்தார். தற்போது மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். உசிலம்பட்டியில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்தது.

    கடந்த 8-ந் தேதி அவருடைய வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே ஒரு கும்பல் புகுந்தது. பீரோவை உடைத்து, அதில் இருந்த தேசிய விருது பதக்கங்கள், பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கொள்ளையர்கள் பிடிபடவில்லை.

    இந்த நிலையில், நேற்று டைரக்டர் மணிகண்டனின் வீட்டு வாசல் கேட் பகுதியில் ஒரு பாலித்தீன் பை தொங்கிக்கொண்டிருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் உடனடியாக விரைந்து வந்து அந்த பையை திறந்து பார்த்தனர். 

    கொள்ளையர்கள் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம்.

    கொள்ளையர்கள் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம்.

    அதில், ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், "அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்று எழுதப்பட்டிருந்தது.

    மேலும் அந்த கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் அந்த பையில் போட்டு தொங்க விட்டு விட்டு திருடர்கள் சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை போலீசார் மீட்டு, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தேசிய விருதின் முக்கியத்துவத்தை உணர்ந்த கொள்ளையர்கள், அதை திருடிய வீட்டிலேயே கொண்டு வந்து பையில் கட்டி தொங்க விட்டுச் சென்றது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. 

    • இந்த படம் ஆக்‌ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது.
    • அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது.

    நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்ஷன் டிராமா "மெட்ராஸ்காரன்" திரைப்படம்.

    எஸ்.ஆர். புரோடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதிய படத்திற்கு மெட்ராஸ்காரன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர்.

    இந்த படம் ஆக்ஷன் டிராமா கலந்த கதையம்சம் கொண்டிருக்கிறது. இப்படத்தின் பூஜை, எளிமையாக நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

     


    இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பொன்ராம், "வாலி என் நண்பர் ஒவ்வொரு படத்திலும் திரைக்கதை பணிகளின்போது பேசிக்கொள்வோம். மிகத்திறமையானவர் அவரின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஷேன் நிகாம் எனக்குப் பிடித்த நடிகர், கலையரசனும் என் நண்பர்."

    "இந்தக்குழுவே மிகவும் உற்சாகம் தரக்கூடிய குழுவாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஒரு படத்தைத் தருவார்கள் என நம்புகிறேன் இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்."

    இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.

    • ராம்சரண் இது எனது தொழில்.
    • நாங்கள் இருவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து வந்தோம்.

    தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றதுடன் அதில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது.

    ராம்சரணுக்கும் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரான பிரதாப்ஜி ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 11 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்ததால் சிரஞ்சீவி குடும்பமே கொண்டாடி மகிழ்ந்தது.


    இந்நிலையில் உபாசனா தனது கணவர் ராம்சரண் பற்றி மனம் திறந்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என் கணவர் ராம்சரண் மற்ற நடிகைகளுடன் அந்தரங்க காட்சியில் நடிக்கும் போது நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். ஏன் என்றால் நான் சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள். எனவே அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

    கதாநாயகிகளுடன் இப்படி நடித்துதான் ஆக வேண்டுமா? என்று பல முறை அவரிடம் கேட்டுள்ளேன். அதற்கு ராம்சரண் இது எனது தொழில். இப்படித்தான் இருக்கும் என எனக்கு புரிய வைத்தார். இப்போதெல்லாம் சரியாகிவிட்டது. ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்து வந்தோம். என்னை புரிந்து கொண்டு எனக்காக அனைத்தையும் புரிய வைத்து அவர் என்னை விட சிறந்தவராக இருக்கிறார். மேலும் குழந்தை வளர்ப்பில் நாங்கள் இருவரும் முக்கிய பங்கு வகிக்கிறோம் என்று கூறினார்.

    • சதீஷ் நடித்துள்ள புதிய படம் விரைவில் ரிலீசாகிறது.
    • இந்த படத்தில் சிம்ரன் குப்தா நடித்துள்ளார்.

    வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில், கே விஜய் பாண்டி தயாரிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில், சதீஷ் நாயகனாக நடிக்கும் படம்  "வித்தைக்காரன்". பிளாக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 23 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

    இதனிடையே இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசிய நடிகர் சதீஷ், "தமிழக மக்கள் என்னை ஹீரோவாக ஏற்றுக்கொண்டு படம் பார்த்ததற்கு நன்றி. தளபதி விஜய் சார் தான் இந்த படத்தை துவங்கி வைத்தார். அவருக்கு என் முதல் நன்றி. என்னைச் சமீபத்தில் சந்தித்த போது கான்ஜூரிங் கண்ணப்பன் பார்த்ததாகச் சொன்னார். அவர் பாராட்டியது மிகப்பெரிய சந்தோஷம்."

     


    "இயக்குனர் வெங்கி தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். 'V' செண்டிமெண்ட் எங்களுக்கு ஒர்க் அவுட் ஆகி வருகிறது. படம் ஆரம்பித்து வைத்த விஜய் சார், இயக்குநர் வெங்கி, பட டைட்டில் வித்தைக்காரன் என எல்லாம் 'V' தான். இப்படம் வெற்றியாக அமையுமென நம்புகிறேன்."

    "ஆனந்தராஜ் சார், இயக்குநர் சுப்பிரமணிய சிவா என எல்லோரும் நல்ல ரோல் செய்திருக்கிறார்கள். சிறு வயதில் ஆனந்தராஜ் சாரை பார்த்து பயந்திருக்கிறேன். இப்போது அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. சிம்ரன் குப்தா அர்ப்பணிப்புடன் நடித்தார், அவருக்கு வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.

    • திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது.
    • திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தான் முதல் சங்கம்.

    திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், இதுவரை வாக்கு உரிமை இல்லாத அசோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், இதை எதிர்ப்பு ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில், தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி, திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் மீண்டும் நடத்தப்பட இருக்கிறது.

    வரும் பிப்ரவரி 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் தேர்தல் நடைபெற இருப்பதாக, சங்கத்தின் தலைவர் தீனா அறிவித்துள்ளார். மேலும், தேர்தலில் மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் தீனா தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

    இது குறித்த அறிவிப்பை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு பேசிய இசையமைப்பாளர் தீனா, "அசோசியேட் உறுப்பினர்களுக்கு எந்த வகை சலுகைகளும் இல்லாமல் இருந்ததோடு, அவர்களுகு வாக்கு உரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் இருந்தது. இது பற்றி பலர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். அதனால், சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக நான் முயற்சி மேற்கொண்டு அவர்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன். தற்போது மூன்றாவது முறை நான் தலைவராக வெற்றி பெற்றால், அசோசியேட் உறுப்பினர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்க பாடுவேன்.

    திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம் தான் முதல் சங்கம். ஆனால், எங்கள் கட்டிடம் இன்னும் பழமையாகவே இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். நான் முதல் முறையாக தலைவராக வந்த போதே இதற்கான முயற்சியில் இறங்கினேன். ஆனால், கொரோனா பாதிப்பு வந்ததால் தடைப்பட்டு விட்டது. தற்போது நான் மீண்டும் தலைவரான இந்த முறை சங்கத்தின் கட்டிடத்தை கட்டுவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுவேன்." என்று தெரிவித்தார்.

    • கருத்துள்ள படங்களை பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
    • விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான வாணி போஜன் தனியார் நகைக்கடையின் சென்னை கிளையை திறந்து வைத்தார். பிரமாண்டமாக துவங்கப்பட்ட வில்வா ஜூவல்ஸ்-ஐ விளக்கேற்றி துவக்கி வைத்த வாணி போஜன், கடையில் உள்ள நகைகளை பார்த்து ரசித்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வாணி போஜன், "சினிமாவில் மசாலா படத்தை பார்ப்பதை விட நல்ல கருத்துள்ள படங்களை பார்ப்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமூக கருத்துள்ள படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளேன். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது.

    அரசியலுக்கு இவர்கள் தான் வரவேண்டும், இவர்கள் வரக்கூடாகு என்றில்லை. நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். செங்கலம் வெப் சீரிசில் நடிக்கும் போது, அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்பவும் அந்த ஆசை இருக்கு.

    அரசியலில் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன செய்வார் என்பதை பார்க்கலாம். இந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று, சமூக வலைதளம் குறித்த படம் இப்போது வெளியாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார்.
    • நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானவர் சமந்தா. தெலுங்கு மொழியில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோது நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோடிசிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் மீண்டும் நடிக்க தொடங்கிய சமந்தா விஜய் தேவரகொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டார். இதையொட்டி சிகிச்சைக்கு பின் சினிமாவில் இருந்து விலகி சமந்தா ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.

    அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் நான் எப்போது மீண்டும் நடிக்க வருவேன் என பலர் கேட்கிறார்கள்.

    விரைவில் சினிமாவில் நடிக்க திரும்ப இருக்கிறேன்.

    ஆனால் அதற்கு முன்பு உடல் நலம் பற்றிய பதிவு ஒன்றை அடுத்த வாரம் வெளியிடுவேன். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன் என கூறினார்.

    • விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளன.
    • தனது மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிட்டபடி நயன்தாரா பயணம் செய்து வருகிறார்.

    சரத்குமாருடன் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றவர் நயன்தாரா.

    தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை உள்ளன.

    என்னதான் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வந்தாலும் குழந்தைகளுக்கு அழகான அம்மாவாக இருந்து வருகிறார் நயன்தாரா.

    படப்பிடிப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அம்மாவாக பெரும்பாலும் குழந்தைகளை அழைத்து செல்கிறார்.

    அந்த வகையில் இரு குழந்தைகளுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காரில் செல்வதை தனது வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் தனது மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை முத்தமிட்டபடி நயன்தாரா பயணம் செய்து வருகிறார்.

    இந்த வீடியோ காட்சிகளுக்கு ரசிகர்கள் வரவேற்று கருத்து பதிவிட்டுள்ளனர். 

    • இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
    • இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து எஸ்.ஜே. சூர்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "இந்த அன்புக்கு மிக்க நன்றிகள் விக்னேஷ் சிவர் சார், லவ் இன்சூரன்ஸ் கம்பனி படத்தில் எனது முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன். எனது பெர்ஃபார்மன்சில் நீங்கள் எதிர்பார்த்தவைகளை நான் மிகவும் விரும்பினேன். தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் ஆவலாக எதிர்நோக்குகிறேன். காட்சிக்கு நீங்களும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் கொடுத்திருக்கும் தோற்றம் வாவ் சொல்ல வைக்கிறது," என குறிப்பிட்டுள்ளார். 



    ×