"ஏழு கடல் ஏழு மலை" படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்

கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
"ஏழு கடல் ஏழு மலை" படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்
Published on: 

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். விஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிளான "மறுபடி நீ" பாடலை படக்குழு வெளியிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com