என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ரெபல் படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார்.
    • படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெபல் படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது.

    ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்குகிறார்.

    இந்த படத்தில், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.

    ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி எடுத்துள்ள இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ரெபல் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று படத்தின் 2-வது சிங்கிளான "தி ரைஸ் ஆப் ரெபல்" வெளியிடப்பட்டுள்ளது.

    • நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    • ‘மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள்

    நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21 படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.


    முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் பெயரும், டீசரும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்திருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் செய்த Transformation வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதில் சிவகார்த்திகேயனின் கடின உடற்பயிற்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போனார்கள்

    இந்த படத்திற்க்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இதே பெயரில் 1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் அமரன் படம் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசரை பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன் 'மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு தயாராகுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


    கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அயலான் படமும் நல்ல வசூலை பெற்றிருந்தது.



    • அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும்.
    • சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசை.

    இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் J.பேபி படத்தில் நடிகை ஊர்வசி, தினேஷ் மற்றும் மாறன் நடித்து உள்ளனர்.

    இந்த படம் அம்மா மற்றும் அவரது 2 மகன்கள் பற்றிய கதை ஆகும். சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவை மிகுந்த படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியிடப்படும் என்று படக்குழு நேற்று அறிவித்தது.

    ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியான நிலையில், இன்று 2-வது சிங்கிளான "லிட்டில் பிட் கிரேசி" பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    வருகிற மார்ச் 8- ந்தேதி பெண்கள் தினத்தையொட்டி இந்த படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்‌ஷன் கதையாக இது இருக்கும்

    கஜினி படத்தைப் போன்ற வேகமான ஆக்ஷன் படமாக 'SK23' திரைப்படம் இருக்கும் என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழில் 'ரமணா', 'கஜினி', 'துப்பாக்கி' "கத்தி' போன்றப் பல வெற்றி படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனுடன் 'எஸ்கே23' படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற்றது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.


    இந்நிலையில் 'SK23' படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆக்ஷன் ஜானர் படமாக இது இருந்தாலும் ரொமான்ஸ் மற்றும் தனித்துவமான பல விஷயங்களை இந்த படத்தில் பார்க்க முடியும். சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்திற்காக அவரது உடல்மொழியில் கவனம் செலுத்த சிறப்புப் பயிற்சியும் கொடுத்திருக்கிறோம். முதலில் மிருணாள் தாக்கூர்தான் எங்கள் சாய்ஸாக இருந்தது. ஆனால், ருக்மிணியின் வேறொரு படம் பார்த்தபோது மிருணாளை விட இவர் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால் இவரை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுபவர் ராதிகா
    • நடிகர்கள் திடீரென மூட் சரியில்லை என சென்று விடுவார்கள் என்றார் ராதிகா

    மராத்தி, தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் 38 வயதான ராதிகா ஆப்தே (Radhika Apte).

    ராதிகா, வேலூரில் பிறந்தவர். ராதிகாவின் பெற்றோர் வேலூர், கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றியவர்கள்.

    திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு எதிராக தயங்காமல் குரல் கொடுத்து வருபவர், ராதிகா ஆப்தே.

    திரைத்துறையில் தனது போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அதில் ராதிகா தெரிவித்ததாவது:

    பல மொழி திரைப்படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், நான் மிகவும் போராட வேண்டி இருந்தது "டோலிவுட்" (Tollywood) எனப்படும் தெலுங்கு திரைப்பட உலகம்.

    அதிக ஆணாதிக்கம் நிறைந்த திரைத்துறை தெலுங்கு படத்துறைதான்.

    பெண்களை அவர்கள் நடத்தும் விதம் சிறிதும் சகித்து கொள்ள முடியாது. பெண்களுக்கு அதில் வழங்கப்படும் பாத்திர படைப்புகளும் படத்தில் பங்கு பெறும் நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு பிடிக்காது.

    படப்பிடிப்பு தளங்களில் மரியாதையாக நடத்த மாட்டார்கள். நடிகர்கள் திடீரென "மூட்" சரியில்லை என கூறி சென்று விடுவார்கள். ஆனால், படக்குழுவினர் நடிகர்களை எதுவும் கேட்க மாட்டார்கள்.

    நான் தொடர்ந்து அங்கு பிரச்சனைகளை அனுபவித்தேன். இறுதியில், எனக்கு டோலிவுட் ஒத்து வராது என உணர்ந்து, தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    2016ல் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த "கபாலி", திரைப்படத்தில் "குமுதவல்லி" எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து விமர்சகர்களை ஈர்த்தவர் ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

    • "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்.
    • நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    "திட்டம்- 2" மற்றும் "அடியே" ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

    இந்த படத்தை செவன் வாரியர் பிலிம்ஸ் மற்றும் வெயிலோன் எண்டர்டெயின்மென்டுடன் ஜேஜேபி டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை இன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    அதன்படி, இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    படத்தின் பெயர் ஹாட் ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐஷ்வர்யா ராஜேஷ் தனது எக்ஸ் தளத்தில்," படம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிகிறது. ஹாட் ஸ்பாட் படத்தின் பர்ஸ்ட் லுக் பகிர்வதில் மகிழ்ச்சி.

    பட குழுவிற்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

      இயக்குநர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகியுள்ள "போர்" படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க, டிஜே பானு, சஞ்சனா நடராஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது.

      இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமிழில் போர் என்றும் ஹிந்தியில் டங்கே எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் தோற்றப் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

      நடிகர் விக்ரம் நடித்த 'டேவிட்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமான பிஜாய் நம்பியார், பின்னர் துலகர் சல்மான் நடித்த சோலோ படத்தை இயக்கினார். நவரசா, காலா ஆகிய இணையத்தொடர்களையும் அவர் இயக்கியுள்ளார்.

      டி சீரிஸ் சார்பாக பூஷன் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். 2 நபர்களுக்கு இடையேயான ஈகோ மோதலாக இப்படம் உருவாகியுள்ளது.

      • அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதோமுகம்' திரைப்படம் மார்ச் 1-தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
      • மார்ச் 1-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

      அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதோமுகம்' திரைப்படம் மார்ச் 1-தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

      இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.

      மார்ச் 1-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சரண் ராகவன் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

      ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. கதாநாயகன் தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து 'அதோமுகம்' படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

      • 2019ம் ஆண்டில் ஜோஸ்வா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.
      • பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.

      இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஷ்வா இமை போல் காக்க பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் உள்ளது.

      இந்த படம் 2019ம் ஆண்டில் படப்பிடிப்பு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை.

      இந்த திரைப்படம் வரும் பிப்ரவிர மாதம் 23ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

      வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான வருண் நாயகனாக நடித்துள்ளார்.

      மேலும், கிருஷ்ணா, ராஹி, யோகி பாபு, மன்சூர் அலிகான், விசித்ரா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

      இந்நிலையில், ஜோஷ்வா படத்தின் தால் என்கிற பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வௌியாகியுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

      • சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கதாநாயகனாக நடிக்க, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.
      • கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு பழங்கால முறையில், சுகப்பிரசவம் செய்வதற்காக கிராமம் ஒன்றுக்கு கதாநாயகன் அழைத்துச் செல்ல, அங்கு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதை.

      இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான, பர்த் மார்க் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

      இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கதாநாயகனாக நடிக்க, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

      கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு பழங்கால முறையில், சுகப்பிரசவம் செய்வதற்காக கிராமம் ஒன்றுக்கு கதாநாயகன் அழைத்துச் செல்ல, அங்கு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதை. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

      இப்படம் பிப்ரவரி 23-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



      • கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது
      • ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

      இளன் இயக்கத்தில் கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட உருவாக்கத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது

      சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த கவின், லிப்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். கவினின் இரண்டாவது திரைப்படமான டாடா மாபெரும் வெற்றி பெற்றது.

      இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது.

      இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வீடீயோவை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடீயோ மற்றும் பாடல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

      • ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
      • இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

      சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.

      ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

      'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

      ×