என் மலர்
நீங்கள் தேடியது "சஸ்பென்ஸ் திரில்லர்"
- புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்.
- புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்
'காளிதாஸ்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்க்ரெடிபிள் ப்ரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது.
எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இத்திரைப்படத்தின் மூலம் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் கிஷோர், சார்லி, ஹார்ட் பீக் புகழ் சாருகேஷ், வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குநர் கூறுகையில்," இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது," என தெரிவித்தார்.
- அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதோமுகம்' திரைப்படம் மார்ச் 1-தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- மார்ச் 1-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'அதோமுகம்' திரைப்படம் மார்ச் 1-தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் அனந்த் நாக், சரித்திரன், நக்லைட்ஸ் கவி, வர்கீஸ், பிபின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் அருண்பாண்டியன் நடித்திருக்கிறார்.
மார்ச் 1-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சரண் ராகவன் பின்னணி இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அருண் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷ்ணு விஜயன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை இதுவரை பட விநியோக வியாபாரத்தில் இருந்து வந்த ரீல் பெட்டி நிறுவனம் தரிகோ பிலிம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மலைகள், குளிர், மிஸ்ட் ஆகியவையுடன் டெக்னாலஜியுடன் கூடிய சஸ்பென்ஸ் திரில்லாராக படம் உருவாகியுள்ளது. கதாநாயகன் தனது மனைவி மொபைல் போனில் அவருக்கு தெரியாமல் ஒரு ஸ்பை அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததால் அவனது வாழ்க்கை தலைகீழாக மாறுவது தான் கதை. இதை சுற்றி பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையை வடிவமைத்து 'அதோமுகம்' படத்தை உருவாக்கியுள்ளார்கள்.






