என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "single"

    • கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.
    • படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

    படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், கூலி படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 2வது சிங்கிள் வரும் ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா.
    • இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா. இவர் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இவர்களுடன் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதாநாயகனான ஸ்ரீ விஷ்ணு கேடிகா ஷர்மாவை காதலிக்கிறார் ஆனால் கேடிகாவுக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால் இவானானிற்கு ஸ்ரீயை பிடித்துள்ளது ஆனால் ஸ்ரீக்கு இவானாவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழலில் சிக்கி தவிக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

    திரைப்படம் நேற்று மட்டும் 5.1 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் வெளியான 3 நாட்களில் 16.30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இப்படம் உலகளவில் 20 கோடி ரூபாய் இலக்கை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா.
    • இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா. இவர் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இவர்களுடன் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதாநாயகனான ஸ்ரீ விஷ்ணு கேடிகா ஷர்மாவை காதலிக்கிறார் ஆனால் கேடிகாவுக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால் இவானானிற்கு ஸ்ரீயை பிடித்துள்ளது ஆனால் ஸ்ரீக்கு இவானாவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழலி சிக்க தவிக்கும் கதாநாயகனின் காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது.

    • கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.
    • படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

    இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார்.

    மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். விஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், காதலர் தினத்தை ஒட்டி, ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் சிங்கிளான "மறுபடி நீ" பாடலை படக்குழு வெளியிட்டது.

    ×