"கூலி" படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
"கூலி" படத்தின் 2வது பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு
Published on: 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், கூலி படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2வது சிங்கிள் வரும் ஜூலை 11ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com