என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இவானா நடித்த #Single படத்தின் வசூல் விவரம்
    X

    இவானா நடித்த #Single படத்தின் வசூல் விவரம்

    • லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா.
    • இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார்.

    பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை இவானா. இவர் தற்பொழுது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் தற்பொழுது #சிங்கிள் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க ஸ்ரீ விஷ்னு கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இவர்களுடன் கேடிகா ஷர்மா மற்றும் வென்னிலா கிஷோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படம் ஒரு முக்கோண காதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது. கதாநாயகனான ஸ்ரீ விஷ்ணு கேடிகா ஷர்மாவை காதலிக்கிறார் ஆனால் கேடிகாவுக்கு இவரை பிடிக்கவில்லை. ஆனால் இவானானிற்கு ஸ்ரீயை பிடித்துள்ளது ஆனால் ஸ்ரீக்கு இவானாவை பிடிக்கவில்லை. இப்படி ஒரு சூழலில் சிக்கி தவிக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

    திரைப்படம் நேற்று மட்டும் 5.1 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் வெளியான 3 நாட்களில் 16.30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. விரைவில் இப்படம் உலகளவில் 20 கோடி ரூபாய் இலக்கை அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×