என் மலர்
நீங்கள் தேடியது "Ramam ragavam"
- 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது.
- இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
'ராமம் ராகவம்' படத்தின் முதல் காட்சியை (கிளிம்ப்ஸ்) தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். தந்தை- மகனுக்கு இடையே உள்ள உணர்வுப்பூர்வமான அம்சங்களை கொண்டதாக உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் தன்ராஜ் கொரானானி இயக்குனராக அறிமுகமாவது மட்டுமின்றி நடித்துள்ளார். மேலும், தன்ராஜின் அப்பாவாக சமுத்திரக்கனியும் நடிக்கிறார்.
சமீபத்தில் வெளியான ஹனுமான் படத்தில் சமுத்திரக்கனி நடித்திருந்தார்.

இந்த படத்தின் முதல் காட்சி நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 'ஹேப்பி வாலண்டைன்ஸ் டாடி' என்ற டேக்லைனுடன் வீடியோ அமைந்து உள்ளது. மேலும், இந்த வீடியோவின் இறுதியில் 'என் காதல் ஆரம்பமானது உன்னால் தான், காதலர் தின வாழ்த்துக்கள்' என்று சமுத்திரக்கனி பேசும் வசனமும் உள்ளது.
இந்த படத்தில் ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.
2021-ம் ஆண்டில் வெளியான 'சாஷி' படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் அருண் சிலுவேரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். துர்காபிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பிருத்விபோலவரபு தயாரிக்கிறார்.
- மீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
- தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.
சின்னதிரையில் இயக்குனராக அறிமுகமாகிய சமுத்திரக்கனி அதற்கடுத்து நாடோடிகள் படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என பல படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சுப்பிரமணியபுரம், வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இவர் அப்பா, தலைக்கூத்தல், ஆண் தேவதை உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
தற்பொழுது தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களுள் சமுத்திரக்கனியும் ஒருவர். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து இருந்தார். தமிழில் திரு. மாணிக்கம் மற்றும் ராஜா கிளி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம்' திரைப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாராகியுள்ளது.
திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






