என் மலர்
சினிமா செய்திகள்
- அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
- தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்
பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இந்நிலையில்அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அப்படத்தின் டைட்டில் இப்பொழுது அதிகாரப்பூர்வமாக படக்குழுவுனரிடம் இருந்து வெளியிடப் பட்டுள்ளது. படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் சமூக வலைத்தளங்களில் படத்தின் டைட்டில் போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.

- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி
- குக் வித் கோமாளி புதிய சீசனில் யார் நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர்.
- அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனக்கு என LCU யூனிவர்ஸ் என்ற ஒரு கான்சப்டை உருவாக்கினார்.
இதற்கு முன் கமலஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கினார். அப்படமும் கமல் ரசிகர்களின் மத்தியில் மிகவும் கொண்டாட பெற்றது. கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
மார்ச் 14 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகெராஜ் நேற்று இரவு தன் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடிகை ஷ்ருதிஹாசனும் லோகேஷ் கனகராஜும் இணைந்து ஆல்பம் பாடலை உருவாக்கியுள்ளனர். அதன் தலைப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். இப்பாடலை ஷ்ருதிஹாசன் எழுதி, பாடி அதை இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது
- இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார்
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் ரவி, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும்.
- பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன்.
ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். பல ஹிட்டான பாடல்கலை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து இருக்கிறார். இசையமைப்பில் இருந்தவர் பின் படங்கள் நடிக்க தொடங்கினார். 2015 ஆம் ஆண்டில் டார்லிங் படத்தில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாள மயம், நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, கடவுள் இருக்கான் குமாரு, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். ஒரு இசையமைப்பாளராக மட்டும் அல்ல ஒரு நல்ல நடிகனாகவும் அவர் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மார்ச் 22-ஆம் தேதி ஜி.வி.பிரகாஷ் குமாரின் அடுத்த படமான ரெபெல் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள படம் கள்வன். ரமேஷ் அய்யப்பன் மற்றும் ஷங்கர் இத்திரைப்படத்தை எழுதியுள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் , இவானா மற்றும் பாரதி ராஜா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு மேற்கொள்ள ரேமண்ட் டெரிக் மற்றும் காஸ்டா படத்தொகுப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை ஏப்ரல் 4-ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் பி.வி. ஷங்கர் பல முன்னணி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராட்சன், முண்டாசுப்பட்டி, புரூஸ் லீ, மரகத நாணயம் இவர் ஒளிப்பதிவு செய்தப் படங்களாகும். ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளிவந்தப் படம் மரகத நாணயம். ஏ.ஆர்.கே சரவணனுடன் இணைந்து பி.வி ஷங்கர் இப்படத்தை இயக்கினார்.
- வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்.
- நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின.
சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதனையடுத்து அவரது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அச்சமயத்தில் தன்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களுக்கு வரலட்சுமி சரத்குமார் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார்.
இந்நிலையில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். இதனையடுத்து, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின. அதன் காரணமாகதான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்றும் வதந்திகள் கிளம்பியது.
இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,
நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட வேறு எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது.
உண்மையிலேயே நீங்கள் கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இங்கு இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னை பற்றிய அவதூறுகள்தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.
- இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது
- த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.
படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது.
இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விஜய்-யின் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது.
'GOAT' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதில் ஒரு முழு பாடலுக்கு விஜயும், பிரபுதேவாவும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். 'GOAT'படம் ஒரு அறிவியல் புனை கதையை தழுவியதாக அமைகிறது.
- விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
- நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தெரிகிறது. விஜய் இத்திரைப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். ஒன்று முதுமை தோற்றமும் மற்றொன்று இளமை தோற்றம் ஆகும்.
நடிகர் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி என்று பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். மே மாதம் படத்தை வெளியிடுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் திரிஷா கோட் படத்தில் நடிக்கவுள்ளார். இரண்டு நாட்கள் இப்படத்திற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்திற்கு அடுத்து நடிகை திரிஷா மீண்டும் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- இந்த ஆலோசனையில் அல்லு அர்ஜுனுடன், அட்லீ முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
- நடிகர் அல்லு அர்ஜுனை இதுவரை இல்லாத ஒரு புதிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்து உள்ளார்
பிரபல இயக்குனர் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை நடிக்க வைத்து வெளியான படம் ஜவான். இந்த படம் பெரும் வெற்றிப் பெற்றதையொட்டி அட்லீ மகிழ்ச்சியில் உள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த பட வெற்றியை தொடர்ந்து அட்லீ தற்போது அடுத்த படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்துக்கு 'A6 'என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது அட்லீ இயக்கும் 6- வது படம்.
இந்நிலையில் புதிய படம் இயக்கும் பணி தொடர்பான ஆலோசனையில் அட்லீ ஈடுபட்டார். மேலும் ஆலோசனை குறித்த வீடியோவை
'இன்ஸ்டாகிராம்' தளத்தில் அட்லீ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் படக்குழு ஆலோசனையில் அட்லீ தனது மனைவியின் மடியில் அமர்ந்திருந்த மகனின் ஒப்புதலைப் பெறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த அட்லீ, 'A6' விவாதம் என்றும் அதில் எழுதி இருக்கிறார்.

இந்த ஆலோசனையில் அல்லு அர்ஜுனுடன், அட்லீ முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை இதுவரை இல்லாத ஒரு புதிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்து உள்ளார்.
இதனால் அல்லு அர்ஜுன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். A6 படத்தின் படப்பிடிப்பை அக்டோபரில் தொடங்க அட்லீ திட்டமிட்டுள்ளார்.
- கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
- தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது
கடந்த 2 வாரத்துக்கு முன் வெளிவந்த மலையாள மொழி 'திரில்லர்' படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.
நண்பர்கள் குழு ஒன்று மலைப்பகுதியில் சுற்றுலா செல்கிறது. அவர்களில் ஒருவர் குணா குகைக்குள் சிக்கி விடுகிறார். அவரை மீட்க போராடும் நண்பர்கள் பற்றிய கதையை பரபரப்பான விதத்தில் படமாக்கி உள்ளனர்.
இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 3 வாரங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. மலையாளப் படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பிலும் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
இதுவரை உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கேரளா தாண்டி தமிழ்நாட்டிலும் பலத்த வரவேற்பைப் பெற்ற 'மஞ்சும்மல் பாய்ஸ்', வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ஒரு வெளி மாநில படம் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும். பாகுபலி, கேஜிஎஃப் வரிசையில் இந்த ஆண்டு மஞ்சும்மல் பாய்ஸ் படம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்
- ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது
பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.அஜித்தின் 62 - வது பிரம்மாண்ட படமாக இது உருவாகி வருகிறது.
இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் அங்கு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே-63 படம் குறித்த புது அப்டேட் இன்று இணையதளத்தில் வெளியானது. அஜித்தின் தீவிர ரசிகரான 'மார்க் ஆண்டனி' பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே-63 படத்தை இயக்குகிறார்.
'விடுதலை: படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' பட நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.ஏகே-63 படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.அஜித்தின் ஏகே-63 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இணையதளத்தில் வெளியானதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு.
- இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சென்னையில் புதிய மியூசிக் ஸ்டூடியோ தொடங்கியுள்ளார். இந்த ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று பார்வையிட்டார்.
இதுபற்றி தேவி ஸ்ரீ பிரசாத் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:-
இளையராஜா இசையையும் என்னையும் பிரிக்க முடியாது 'ஒரு சிறு குழந்தையாக, இசை என்றால் என்ன என்பதை அறிவதற்கு முன்பே, இந்த இசைஞானி இளையராஜா சாரின் இசை எனக்குள் ஒரு மேஜிக்கை ஏற்படுத்தியது. நான் எப்போதும் என்னைச் சுற்றி அவருடைய இசையுடன் வளர்ந்தேன். பிரிக்க முடியாத வகையில் நான் அவருடைய இசையுடன் இணைந்திருக்கிறேன். ஒரு இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் அவரது இசைதான்.

'நான் இசையமைப்பாளராக மாறி எனது சொந்த ஸ்டூடியோவை உருவாக்கியதும் அதில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை மாட்டினேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இளையராஜா ஐயா என்னைப் பார்க்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய மற்றும் வாழ்நாள் கனவு.

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நமது உண்மையான ஆசைகள் மற்றும் அன்பை நிறைவேற்றக் கூடியது. அதன்படி இறுதியாக எனது இந்த கனவு நனவாகியது, குறிப்பாக எனது குருவான ஸ்ரீமாண்டலின் யு ஸ்ரீனிவாஸ் அண்ணா பிறந்த நாளில் என்னுடைய கனவு நினைவாகி உள்ளது. நான் இன்னும் என்ன கேட்க முடியும்! இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா ஐயா, உங்கள் வருகைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
1/2
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) March 12, 2024
My LIFETIME DREAM came TRUE
?❤️??
Maestro
ISAIGNANI ILAYARAJA@ilaiyaraaja SIR
in my Humble Studio..??
My "GOD OF MUSIC" In my TEMPLE
???❤️? pic.twitter.com/W4EY1qHacn






