'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா

இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளதுத்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.
'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
Published on

ஏஜிஎஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 'GOAT' படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.

படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் 'ஷூட்டிங்' பல கட்டமாக நடந்து வருகிறது.

இறுதிகட்ட ஷூட்டிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்க இருக்கிறது. இதில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளன. இதற்கான ஷூட்டிங் லொகேஷன் தேர்வு செய்ய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சென்னையில் இருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு சினிமா சூட்டிங் தொடர்பான 'லொகேஷன்' இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்தார்.

அதைதொடர்ந்து விரைவில் மாஸ்கோவில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. விஜய்-யின் 'GOAT' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் 'GOAT'படம் குறித்த முக்கிய அப்டேட்கள் இன்று வெளியாகி உள்ளது.

'GOAT' படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாகவும், வில்லனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் த்ரிஷா சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஒரு அவர் பாடலுக்கு நடனம் ஆடுகிறார். இதில் ஒரு முழு பாடலுக்கு விஜயும், பிரபுதேவாவும் ஒன்றாக சேர்ந்து நடனம் ஆடுகிறார்கள். 'GOAT'படம் ஒரு அறிவியல் புனை கதையை தழுவியதாக அமைகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com