என் மலர்
சினிமா செய்திகள்
- 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்
லியோ வெற்றியை அடுத்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். முதுமை தோற்றத்திலும், இளமைத் தோற்றத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்ற தகவல் பரவியது.
பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, லைலா என நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். படக்குழுவினர் தாய்லாந்து, சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் அடுத்ததாக படக்குழுவினர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். 14 வருடங்களுக்குப் பிறகு விஜய் படப்பிடிப்புகாக கேரளா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்
- அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகர் அஜித், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது.
மேலும், பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது. இதனையடுத்து, கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
தமிழ் பட டிரெண்டிங் ஹீரோயினாக இருந்து வந்த ஷாலினி நடித்த படம் அனைத்தும் 'ஹிட்' ஆகியது. அவருக்கு பட வாய்ப்புகள் வழங்க ஏராளமான தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர். ஆனால், ஷாலினி இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து சினிமாவில் இருந்தும் விலகினார்.

அதன் பின்னர் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தினார். ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர்.
இந்நிலையில், தற்போது அஜித்- ஷாலினிக்கு காதல் திருமணமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் நண்பர்கள், உறவினர்களுக்கு விருந்து வழங்கி கொண்டாடினர்.
மேலும், அஜித் - ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி தங்களது 25-வது ஆண்டு காதல் திருமணத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்களுக்கு பிடித்த 'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு' என்ற பாடல் ஒலிப்பது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம்
- இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
'காமெடி நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் அரசியல்-நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா' .சினி கிராப்ட் பிலிம்ஸ் தயாரிப்பில் காமெடி எழுத்தாளர் சாய் ராஜகோபால் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர்.

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், ஒ.ஏ.கே.சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து உள்ளார்.இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னை பரணி' டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் கவுண்டமணி பங்கேற்றார். 8 மணி நேரம் தொடர்ந்து உற்சாகத்துடன் கவுண்டமணி 'டப்பிங்' பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த படம் குறித்து இயக்குநர் சாய் ராஜகோபால் கூறியதாவது :-
"சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன்.

எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.
'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணியிடம் சொன்ன போது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார்.இப்படம் 6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஆகும்.
கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படுவதாக அமைந்து உள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளிப்பார்கள்."என்று கூறினார்.
- குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர் சில்க் சுமிதா.
- நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்.
பிரபல கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா 1996-ம் ஆண்டு தனது 35-வது வயதில் தூக்கில் தொங்கி இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் இரு விவாதங்கள் நடந்தன. சில்க் சுமிதா வாழ்க்கை சினிமா படமாகவும் வந்தது.
இந்த நிலையில் சில்க் சுமிதா மரணம் குறித்து கவர்ச்சி நடிகை ஜெயமாலினி தற்போது அளித்துள்ள பேட்டியில், "குறுகிய காலத்திலேயே பெயரும், பணமும், புகழும் சம்பாதித்தவர் சில்க் சுமிதா. படப்பிடிப்பு அரங்கில் எங்களுடன் அவர் பேச மாட்டார்.
ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான் மற்றும் எனது சகோதரி ஜோதி லட்சுமி, சில்க் சுமிதா ஆகிய மூன்று பேரும் நடித்து இருக்கிறோம். நல்லநிலையில் இருந்தும் சில்க் சுமிதா தற்கொலை செய்து கொண்டது வருத்தமான விஷயம்.

ஆனால் சில்க் சுமிதா வாழ்க்கையில் செய்த பெரிய தவறை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காதலிக்கலாம்... தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயாரையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டும் நம்பி வாழ்ந்தார்.
உறவினர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டால் பாதி அவர்கள் தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள். ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்களை வைத்துக்கொண்டால் அதுவும் நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்களுக்கு தெரிந்தால் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் சுமிதாவும் பலியாகிவிட்டார்'' என்றார்.
- சூது கவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார்.
- இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.
இயக்குநர் நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூலி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த பட வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.
- மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.
- ஜி.வி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்
பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்கதாநாயகனாக நடித்த படம் 'ரிபெல்'' இந்த படத்தை ' ஸ்டூடியோ கிரீன்' சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில், மமிதா பைஜு கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் , ஆதித்யா உள்பட பலர் நடித்து உள்ளனர்.மூணாறு பகுதியில் உள்ள மக்களின் அரசியல் வாழ்வு குறித்த உண்மை சம்பவ கதையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது.ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டது.மேலும் 'ரிபெல்' படத்துக்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.ஜிவி பிரகாஷ் நடிப்பு மட்டுமின்றி படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

இந்நிலையில் 'ரிபெல்' படம் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தற்போது அறிவித்து உள்ளது.
வருகிற மார்ச்- 22 -ந்தேதி தியேட்டர்களில் இப்படம் வெளியாக உள்ளது என 'எக்ஸ்' தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார்
- இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது
மலையாள 'திகில்' படம் கத்தனார். இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா- பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கின்றனர்.காட்டு மந்திரவாதி வேடத்தில் ஜெய சூர்யாவும், பேய் வேடத்தில் அனுஷ்காவும் நடிக்கின்றனர்.
இந்த படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். அமானுஷ்ய சக்திகள் தொடர்பான ஒரு கற்பனைத் திரைப்படம் ஆகும்.அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக நம்பப்படும் கேரளப் பாதிரியார் கடமட்டத்து கத்தனார் பற்றிய கதைகளை அடிப்படையாக கொண்டது.இந்த படத்திற்கு ராகுல் இசையமைக்கிறார். நவீன தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இப்படம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகரும் -திரைப்பட தயாரிப்பாளர்-நடன இயக்குனருமான பிரபுதேவா கத்தனார் - தி வைல்ட் சோர்சரர் நடிகர்களுடன் இணைந்து உள்ளார்.பிரபு தேவாவை முன்னணி நடிகர் ஜெயசூர்யா, தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்கும் புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
சந்தோஷ் சிவன் இயக்கிய உறுமி படத்திற்குப் பிறகு13 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா மலையாள சினிமா படத்தில் நடிக்கிறார். இந்த படம் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
- இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்
- இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ஏற்பாடு செய்த "ரோமன் ஹோலி" கொண்டாட்டம் நிகழ்ச்சி மும்பை 'ஆன்டிலியா'ஜியோ வேர்ல்ட் பிளாசாவில்நேற்று மாலை நடந்தது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்கள்பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

வண்ண ரத்தினக் கற்களின் மாஸ்டர் என்று அழைக்கப்படும் அற்புதமான ரோமானிய பெரிய நகைக் கடையான பல்கேரி, இந்திய வண்ண பண்டிகையான ஹோலி பண்டிகையை 'ரோமன் ஹோலி'என்ற பெயரில் கொண்டாடியது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபல்கேரிய நகைக் கடையின் உலகளாவிய தூதராக உள்ள நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி 'ஸ்லிட் புடவை' ரூ.8 கோடி மதிப்பு உள்ள :'பவ்ல்காரி நெக்லஸ்' அணிந்து இருந்தார்.இஷா அம்பானியின் நெருங்கியதோழி பிரியங்கா ஆவார்.
அம்பானி வீட்டு பெண்களான இஷா அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்,ஷ்லோகா மேத்தா ஆகியோருடன் பிரியங்கா சோப்ரா, மகிழ்ச்சியாக புகைப்படங்களுக்கு 'போஸ்' கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அதில் பங்கேற்ற அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் அம்பானியின் வீட்டில் இரவு ருசியான பல்சுவையான விருந்து வழங்கப்பட்டது.
- சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது
- விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்
கடந்த 2007 - ம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக 'அழகிய தமிழ் மகன்' படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பரதன் இயக்கி இருந்தார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் 'ஹிட்' ஆக அமைந்தன.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா, நமீதா ஆகியோர் நடித்து இருந்தனர்.
விஜய் இரட்டை வேடங்களில் 'ஹீரோ', வில்லன் ஆக நடித்து இருந்தார்.மேலும் விஜய்யின் துள்ளலான நடிப்பும், நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் அப்போது இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர்கள் இப்படத்தை ரசிக்க வாய்ப்பு உள்ளதை யொட்டி வருகிற 22 - ந்தேதி தியேட்டர்களில் மீண்டும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளது.
அதே போல விஜய்யின் 'ஹிட் ' படமான 'கில்லி' படம் ஏப்ரல் மாதத்தில் ரீ ரிலீஸ் செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது.இதனால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- 'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்
- துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .
ஆக்ஷன் கிங்' அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியை தொடங்கியவர் விஷால். அதன் பிறகு 2004 -ல் 'செல்லமே' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்தது.
அதன்பின் 2005- ல் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் 'சண்டைக்கோழி' படத்தில் நடித்து சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.இந்த படம் அவருக்கு திருப்பு முனையை தந்தது.
'திமிரு', தாமிரபரணி, மலைக்கோட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்- 2' படம் மூலம் புதிய இயக்குநராக மாறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ' எக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

" எனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு எனது கனவு, எனது லட்சியம், வாழ்க்கையில் நான் என்னவாக வேண்டும் என்ற எனது முதல் எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளது.நான் ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சவாலான ஒரு அறிமுக இயக்குனர் பொறுப்பை அடைய போகிறேன்.
'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்.இதனை விளக்க வார்த்தைகள் இல்லை, ஆனால் என் அப்பாவை நினைவு கூர்கிறேன் . ஜி.கே. ரெட்டி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார். கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது.
எது வந்தாலும் பரவாயில்லை, உங்கள் கனவுகளை விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும் தொடருங்கள், ஒரு நாள் அது நனவாகும்.ஒரு நடிகனாக இந்த அடையாளத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .
ஒரு இயக்குனராகவும் எனது கனவை முன்னெடுத்துச் சென்ற மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலை வேண்டாம் நிஜ வாழ்க்கையிலோ அல்லது ரீல் வாழ்க்கையிலோ நான் யாரையும் கைவிடுவதில்லை. இலக்கை அடையவோம் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.
- ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு.
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வலை பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து இளம் மற்றும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களையும கேட்டு கொள்கிறேன். இந்த தேர்தலில் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள் என்று அந்த பதிவின் மூலம் ஜெயம் ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
Urging all the young and first time voters of our country to come out and cast their vote in the upcoming election!
— Jayam Ravi (@actor_jayamravi) March 16, 2024
This election use your most basic democratic rights to VOTE for the right candidate.#MeraPehlaVoteDeshKeLiye
- இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது
- இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்
தற்பொழுது விஜய் ஆண்டனி ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி கதாநாயகியாக நடித்துள்ளார்.விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து இருக்கிறார். பரத் தனசேகர் இப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ரோமியோ படத்தின் ட்ரெயிலரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள் என செய்தியாளர் கேள்வி கேட்டார்.
அதற்கு விஜய் ஆண்டனி " மது என்பதில் ஆண், பெண் என வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. முந்தைய காலத்தில் இருந்து மது என்பது இருந்து வந்துள்ளது. அது காலத்திற்கு ஏற்ற மாதிரி பெயரை மாற்றிக் கொண்டது. சாராயம் என்ற பெயரில் முன் குடித்துக் கொண்டு இருந்தோம் இப்பொழுது கம்பனி பெயர்களால் உபயோகிக்கிறோம்.
இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார் என்று அவர் கூறிய வார்த்தை சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு விஜய் ஆண்டனிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பொது மன்னிப்பு கேட்காவிட்டால் விஜய் ஆண்டனி வீட்டிற்கு முன்னால் ஆர்பாட்டம் நட்த்துவோம் என அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி பொது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அன்பார்ந்த கிறிஸ்துவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே. திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டதல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான்.தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார். என்று கூறி இருந்தேன்.
ஒரு பத்திரிக்கயாளர் நண்பர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னதை , நான் பேசியதை இணைத்து தவராக அர்த்தப்படுத்தியதால் அது தவறாக எண்ணி உங்களைப் போல சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு, அப்பாற்பட்ட இயேசுவைப்பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என மனமார்ந்த மன்னிப்பை தெரிவித்து இருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






