சூது கவ்வும் 2 புது அப்டேட் வெளியீடு

சூது கவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.
சூது கவ்வும் 2 புது அப்டேட் வெளியீடு
Published on

இயக்குநர் நலன் குமாரசாமி இக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும். இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூலி ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த பட வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நடிக்கிறார். இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com