என் மலர்
சினிமா செய்திகள்
- சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார்
- . இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகனாக சூர்யா இருக்கிறார். திரைத்துறை பணியிலும் , சமூக பணியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 2020-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார் சூர்யா.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய் பீம் மக்களிடையே சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கங்குவா'. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். அவர் இதுவரை தயாரித்த படங்களில் கங்குவா தான்
மிகப்பெரிய பட்ஜட் படம். சூர்யா இப்படத்தில் 6 வேடங்களில் நடித்துள்ளார். பாபி டியோல், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ் ரவிக்குமார் என பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. இத்திரைப்படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணியளவில் கங்குவா படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக்குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
- இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
திருவனந்தபுரம்:
கேரள மாநில கோவில் விழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அந்த மாநிலத்தின் பாரம்பரியமாக உள்ளது. இதற்காக மாநிலத்தின் பெரும்பாலான கோவில் வளாகங்களிலேயே பிரத்யேகமாக யானைகள் வளா்க்கப்படுகிறது.
இதற்கு விலங்குகள் நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்தபடி இருந்தனர். அதனை கருத்தில் கொண்டு கோவில் விழாக்கள் உள்பட எந்த சடங்குகளிலும் இனி யானை உள்ளிட்ட உயிருள்ள விலங்குகளைப் பயன்படுத்துவதில்லை என மாநிலத்தில் முதல் முறையாக திருச்சூா் மாவட்டம் இரிஞ்சாடப் பள்ளி ஸ்ரீ கிருஷ்ணா் கோவில் நிா்வாகம் முடிவெடுத்தது.
அதன்படி அந்த கோவில் விழாக்களில் கடந்த ஆண்டு முதல் இயந்திர யானை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் 2-ஆவது கோவிலாக கொச்சி திருக்கயில் மகாதேவர் கோவிலிலும் உயிருள்ள விலங்குகளை பயன்படுத்துவதில்லை என முடிவு எடுக்கப்பட்டது.
கோவில் நிா்வாகத்தின் அந்த முடிவை பாராட்டும் விதமாக, கோவிலுக்கு இயந்திர யானை ஒன்றை பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து பரிசளித்துள்ளனா். 'மகாதேவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த இயந்திர யானை, இனி கோவில் விழாக்களில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திர யானையை வழங்கும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மகாதேவன் இயந்திர யானை, கோவில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து நடிகை பிரியாமணி, 'தொழில்நுட்ப வளா்ச்சி மூலம் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நமது கலாசார நடைமுறைகள் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படுவதை நாம் உறுதிப்படுத்தலாம்' என்றாா்.
இது குறித்து மாகதேவர் கோவில் நிர்வாகத்தினர் கூறும்போது, 'மனிதா்கள் போல் தங்கள் குடும்பத்துடன் இணைந்து சுதந்திரமாக வாழவே எல்லா விலங்குகளையும் கடவுள் படைத்தாா். அந்த வகையில், கோவில் விழாக்களில் இயந்திர யானையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சிதான்' என்றனா்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சென்னை கோவளம் நெடுஞ்சாலையில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
- திருவனந்தபுரம் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கி எழு மனோகரா படம் மூலம் அறிமுகம் ஆனவர் அருந்ததி நாயர். இவர் தமிழில் சைத்தான் கன்னி ராசி, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் வசித்து வரும் இவர், சென்னை கோவளம் சாலையில் தனது சகோதரர் உடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் விபத்தில் சிக்கியது. இதில் அருந்ததி நாயர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து கடந்த 14-ந்தேதி நடந்துள்ளது.
அருந்ததி நாயர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கசியத் தொடங்கின. இந்த நிலையில் அந்த செய்தி உண்மைதான் என அவரது சகோதரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி அருந்ததியின் சகோதரி ஆர்த்தி வெளியிட்ட பதிவில், "மூன்று நாட்களுக்கு முன் விபத்து ஒன்றில் அருந்ததி பலத்த காயமடைந்து உயிருக்காக போராடி வருகிறார். திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவி உடன் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது.
- மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது.
சசிகலா புரடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம், "கா".
இந்த படம் மார்ச் 22-ம்ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பாக்யராஜ், "ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார் அவருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது."

"அந்த காலத்தில், வெளியாகும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இது போல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. இப்படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்."
"மஞ்சும்மல் பாய்ஸ் மலையாளத்தை விட இங்கு தான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். பெரிய எழுத்தாளர் இப்படிப் பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக்காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்க வில்லையே என கேரள மக்கள் நினைத்து விடக்கூடாது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காண தயாராகுங்கள்.
- ஆடுஜீவிதம் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட சர்வைவல் அட்வென்ச்சர் படமாக 'தி கோட் லைஃப்- ஆடுஜிவிதம்' திரைப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, "தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது! நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான 'ஆடுஜீவிதம்' கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இந்த படத்தை பிரசாத் முருகன் இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளனர்.
ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பி.ஜி.எஸ். ப்ரொடக்ஷன்ஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A Time In Madras).
இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளனர். நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் பிரசாத் முருகன், "நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும், அவர்களது வாழ்க்கையை, அந்த துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதை கருத்தியல் அரசியலுடன், கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்," என்று தெரிவித்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார். காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
'ராட்சசன்' படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் இந்த படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- . பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
- இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்
47 வருடங்களாக இசைத் துறையில் யாரும் தொட முடியாத உச்சத்தில் இருப்பவர் இசைஞானி இளையராஜா.. இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். இளையராஜாவை இசை ஞானி என்றும் , மேஸ்ட்ரோ என்றும் அழைப்பர். பல விருதுகளை வென்று இருக்கிறார் இளையராஜா. பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றுள்ளார்.
வசீகரிக்கும் மெல்லிசைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற இசை மேஸ்ட்ரோ இளையராஜா, இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் இசை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமானவர். இப்போது, அவரது பணியை நினைவுக்கூரும் வகையில்,அவரது வாழ்க்கை பற்றிய பயோபிக் உருவாகிறது.
இப்படத்தில் இளையராஜா கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பாளர் ஆவதற்கு முன் அவர் பயணித்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.
சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை இவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 20 ஆம் தேதி லீலா பேலசில் படப்பிடிப்பை துவங்கவுள்ளனர். 2025 ஆம் ஆண்டு வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
- குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் ஆகியோர் திடீரென விலகினர்.
குக் வித் கோமாளி நடுவரான வெங்கடேஷ் பட் விலகியிருந்தாலும், செஃப் தாமு அந்த நிகழ்ச்சியின் நடுவராக தொடர்வார் என சொல்லப்பட்டது.
குக் வித் கோமாளி புதிய சீசனில் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக யார் புதிய நடுவராக வரப்போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், மெஹந்தி சர்க்கஸ் பட நாயகனான மாதம்பட்டி ரங்கராஜ் தான் குக் வித் கோமாளி 5-வது சீசனின் புதிய நடுவராக வரவுள்ளார்.
இவர் தொழிலதிபர் மட்டுமின்றி ஒரு பெரிய கேட்டரிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல பிரபலங்களின் வீட்டு திருமண நிகழ்ச்சிகளுக்கு அவர் தான் கேட்டரிங் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ப்ரோமோ வீடியோ ஒன்றை விஜய் டிவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
Cooku with Comali 5 ?? | Coming Soon | Launch Promo | #CookuWithComaliSeason5 #CookuWithComali5 #CWC #ChefDamodharan #ChefDamu #ChefMadhampattyRangaraj #ChefMadhampatty pic.twitter.com/gUuUmFoe6z
— Vijay Television (@vijaytelevision) March 18, 2024
- யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார்.
- யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்து 2018 ஆம் ஆண்டு கே. ஜி. எஃப் சாப்டர் 1 படம் வெளியானது. பான் இந்தியன் படமாக இப்படம் அமைந்தது . கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் நகர்த்தி சென்றது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டது கே.ஜி.எஃப் திரைப்படம். கன்னடா திரைத்துறையில் அதிகம் வசூலித்த படம் இதுவே.
யாஷ் இப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதற்கடுத்து கே ஜி எஃப் பகுதி 2 வெளியானது அப்படமும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
யாஷ் அடுத்ததாக கீது மோஹன் தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி நடித்து 2019 வெளியான 'மூத்தோன்' படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் நாரயணன் மற்றும் யாஷ் இணைந்து கே வி என் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் கீழ் தயாரிக்கவுள்ளனர்.
யாஷ், சாய் பல்லவி, நவாசுதின் சித்திக், சம்யுக்தா மேனன், ஷைன் டாம் சாக்கோ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் கரீனா கப்பூர் நேற்று நடந்த நேர்காணலில் அவர் ஒரு மிக பெரிய சவுத் இந்தியன் படத்தில் நடிக்கவுள்ளார் அப்படம் பான் இந்தியன் படமாக இருக்கப்போகிறது என கூறியுள்ளார். கரீனா கபூர் டாக்சிக் படத்தில் நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கபடுகிறது. ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு டாக்சிக் படம் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார்
- ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தன் குரலால் மக்கள் மனதை கட்டிப் போட்ட நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் தாஸ். நடிகர் ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளியான கைதி படத்தில் அன்பு கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நின்றது. அர்ஜூன் தாஸ் கூறிய 'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' டயலாக் வைரலாக பரவி, இன்றுவரை மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' என அடுத்தடுத்த படங்களால் கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர், 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் - லிஜோமோல் ஜோடியை வைத்து 'லோனர்ஸ்' எனும் கதையை இயக்கியிருப்பார் ஹலீதா ஷமீம். அதன் பிறகு, முழு நீளப்படத்தில் நாயகனாக அறிமுகமானது இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய 'அநீதி'. சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான போர் படத்தில் நடித்து இருந்தார்.
அடுத்தடுத்து மிக முக்கியான சுவாரசியமான படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'கப்பேலா' திரைப்படத்தின் டோலிவுட் வெர்ஷனில் நடித்தார். சுஜீத் இயக்கத்தில் 'தே கால் ஹிம் ஓஜி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
பிரபாஸை வைத்து 'சாஹோ' படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். 'ஜூன்', 'மதுரம்' ஆகிய படங்களையும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' எனும் வெப் சீரிஸையும் இயக்கிய
மலையாள இயக்குனரான அஹமத் கபீர் இயக்கத்தில் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் அர்ஜூன் தாஸ்.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். இவரது ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காகவும், ரிலீஸ் தேதிக் குறித்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்
- இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்
பிரபல நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். சரத்குமார் மற்றும் கொளதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தனது புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்.
அந்த பதிவில்,ஆர்யா கூறி இருப்பதாவது :-
எனது 'Mr.X' புதிய படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த படத்தை சகோதரர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
மிஸ்டர் எக்ஸ்' படத்திற்கு. மார்ச் 2023 - ல் ஸ்கிரிப்ட் தயாரானது. புதிய உடல் தோற்ற பொலிவுக்கான வேலை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது. அதன் பின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கியது.

இறுதியாக, நாங்கள் படத்தின் கடைசி ஷெட்யூலில் இருக்கிறோம். இலக்கை நோக்கி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது மார்ச் 2024-ல் இருக்கிறேன். எனது உடல்வாகு தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ்.
- தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார்.
கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.
வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.
தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூட் கேஸ்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






