Mr.X': புது 'அப்டேட்' வெளியிட்ட ஆர்யா

புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார் இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்
Mr.X': புது 'அப்டேட்' வெளியிட்ட ஆர்யா
Published on

பிரபல நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். சரத்குமார் மற்றும் கொளதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். திபு நின்னன் தாமஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஆர்யா இன்று தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் தனது புதிய 'Mr X ' திரைப்படத்திற்க்கான அவரது உடலமைப்பு தொடர்பான புகைப்படங்கள் பகிர்ந்து உள்ளார்.

அந்த பதிவில்,ஆர்யா கூறி இருப்பதாவது :-

எனது 'Mr.X' புதிய படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த படத்தை சகோதரர் மனு ஆனந்த் இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

மிஸ்டர் எக்ஸ்' படத்திற்கு. மார்ச் 2023 - ல் ஸ்கிரிப்ட் தயாரானது. புதிய உடல் தோற்ற பொலிவுக்கான வேலை ஏப்ரல் 2023-ல் தொடங்கியது. அதன் பின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கியது.

இறுதியாக, நாங்கள் படத்தின் கடைசி ஷெட்யூலில் இருக்கிறோம். இலக்கை நோக்கி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறோம். தற்போது ஒரு வருடம் ஆகிவிட்டது. தற்போது மார்ச் 2024-ல் இருக்கிறேன். எனது உடல்வாகு தொடர்பான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன்.இந்த படம் அதிரடி காட்சி நிறைந்த படம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com