என் மலர்
- இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
- இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும்.
சியோல்:
தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ரூ.29 லட்சம் கோடி (350 பில்லியன் டாலர்) தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தென் கொரிய நாடாளுமன்றம் தாமதம் செய்து வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், தென் கொரியாவில் இருந்து இறக்குமதியாகும் கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மீது 25 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்த வரி உயர்வு அமலுக்கு வந்தால் தென் கொரியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்பதால், அந்நாட்டு அரசு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பேசிய தென் கொரிய தொழில் துறை மந்திரி கிம் ஜங்-குவான், "அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கான சிறப்புச் சட்டத்தை வரும் 12-ந் தேதி தென் கொரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம். இந்த தகவல் அமெரிக்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரி உயர்வு அபாயம் நீங்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் பெரிய தொழிற்சாலைகளை அமைக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிரம்ப் நிர்வாகம் இதில் பிடிவாதமாக இருந்தது. தற்போது தென் கொரியா இதற்குச் சம்மதித்துள்ளதால் இரு நாடுகளிடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்துள்ளது.
- சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார்.
- சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 89 ரன்கள் விளாசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த தொடரில் தொடக்கத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியிலும், அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து மூன்று அரைசதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 5 போட்டிகளில் 321 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்து தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.
சஞ்சு சாம்சனின் இந்த சிறப்பான ஆட்டத்தால் தான் இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் சஞ்சு சாம்சனின் மறக்கமுடியாத இந்த உலகக்கோப்பை ஆட்டத்தை பாராட்டி பிரபல மலையாள நடிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் சஞ்சு சாம்சனை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
- சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
- யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன்.
'இதுதாண்டா போலீஸ்' படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் -ஜீவிதாவின் இளைய மகள் ஷிவாத்மிகாவும் நடிகை ஆவார். தமிழில் 'பாம்', 'ஆரோமலே' படங்களில் நடித்துள்ள சிவாத்மிகா, தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷிவாத்மிகாவிடம், 'என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கும் போது, "யதார்த்த கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்ஷன் கதா பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்ஷனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்" என்றார்.
- மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம்.
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-25 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நள்ளிரவு 11.58 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : விசாகம் மாலை 4.44 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவான்மியூர், பெசன்ட்நகர், திருமயிலை, திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று தேய்பிறை சஷ்டி விரதம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னைமர வாகனத்தில் கண்ணன் அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-பரிசு
கடகம்-இன்பம்
சிம்மம்-உறுதி
கன்னி-பாராட்டு
துலாம்- பரிவு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- உண்மை
மகரம்-வெற்றி
கும்பம்-புகழ்
மீனம்-பணிவு
- இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
- ஐசிசி தொடர்களில் அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி நியூசிலாந்து.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அதிரடியாக விளையாடி 255 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் நியூசிலாந்தின் உலகக்கோப்பை கனவு மீண்டும் ஒருமுறை தகர்ந்துள்ளது. அதன்படி கடந்த 11 ஆண்டுகளில் ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவுவது இது 6-வது முறையாகும்.
இதுவரை 8 முறை ஐசிசி தொடர்களின் இறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது. அதில் 2 முறை மட்டுமே (2000 சாம்பியன்ஸ் ட்ராபி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்) வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 6 முறை தோல்வியைச் சந்தித்துள்ளது.
2009 சாம்பியன்ஸ் ட்ராபி: ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2015 ஒருநாள் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2019 ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் தோல்வி.
2021 டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.
2026 டி20 உலகக்கோப்பை: நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.
இருப்பினும், ஐசிசி தொடர்களில் அதிகமுறை (14 முறை) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து இப்போதும் தக்கவைத்துள்ளது.
- தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா?
- திருமணத்துக்கு பின்பு நாமும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வராதா?
தவெக தலைவர் விஜயை விமர்சித்து தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். முக்கியமாக எங்கள் தலைவர் விஜய் அவர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா?
நேற்று தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது. "அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது Worth ஏ இல்லை' என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் நான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது Worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?
ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும் ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன. உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில்,வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?
ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள் மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய GEN-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா?" எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர்.
நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன் உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன. இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?
இது நான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று. அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு. அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்வதே மனித்நேயத்தின் அடையாளம். ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை, அவர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நேரத்தில், அவர்களையே உங்கள் இடத்திற்கு வரவைத்து இரங்கல் தெரிவித்தீர்கள். இது தான் நம் கலாச்சாரமா? இது தான் தமிழர் பண்பாட்டின் வழியா? துயரத்தில் இருக்கும் மனிதர்களிடம் செல்வதே மரபு, அவர்களை அழைத்து வருவது மரபல்ல. அதையும் "பரவாயில்லை" என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட்டதால் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி விட்டது. ஒரு தலைவர் உருவாக்கும் நடைமுறை, நாளைய அரசியலின் ட்ரெண்டாக மாறிவிடும் . அதனால் தான் நான் கேட்கிறேன் தமிழக அரசியலில் நாம் உருவாக்க வேண்டியது மரபை மதிக்கும் கலாச்சாரமா? அல்லது மரபை மாற்றும் மோசமான ட்ரெண்ட் செட்டிங்களா? தமிழர் கலாச்சாரம் மரியாதையை சுற்றுக கொடுத்தது. அந்த மரியாதையை காக்கும் அரசியல் தான் தமிழகத்திற்கு தேவையான அரசியல் அந்த மரபை மாற்றும் வழியில் நாம் போகக் கூடாது.
எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய GEN-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல் பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா?
"பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. ஒரு தலைவர் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு தலைவர் உருவாக்கும் கலாச்சாரம் நாள் ஒரு தலைமுறையை உருவாக்கும். TVK உங்களுடன் இணைந்து பயணிக்கும் நான் அக்கறையுடன் எச்சரிக்க வருகிறேன். மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள். தமிழக இளைஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாகவே இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.
- இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரின் அதிரடியால் 255/5 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.
இதனைத் தொடர்ந்து பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (4/15) மிரட்ட, நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பட்டத்தைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு மற்றும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி என்ற முப்பெரும் சாதனைகளை இந்தியா படைத்துள்ளது.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் இன்று அதிகாலையில் நரேந்திர மோடி மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனுமன் தெக்ரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த அனுமன் கோவிலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் கழுத்தில் மாலையுடன் கையில் கோப்பையை ஏந்தியபடி சிறப்புப் பிரார்த்தனை மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவில் தடை உண்டு. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.
ரிஷபம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவிரயம் உண்டு.
மிதுனம்
எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் அலைபேசி மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியம் ஒன்று இனிதே முடியும்.
கடகம்
தைரியத்தோடு செயல்பட்டு சாதனைகள் படைக்கும் நாள். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும்.
சிம்மம்
யோகமான நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்பு உணர்ந்து நடந்து கொள்வர்.
கன்னி
செல்வ நிலை உயரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புண்ணிய காரியம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
துலாம்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். நேற்று தடைபட்ட காரியம் இன்று முடிவடையும். உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும்.
விருச்சிகம்
யோகமான நாள். நாட்டுப்பற்று மிக்கவர்கள் உங்களின் கூட்டு முயற்சி வெற்றியடைய வழிகாட்டுவர். கல்யாண வாய்ப்பு கைகூடும். வருமானம் உயரும்.
தனுசு
பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.
மகரம்
வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கும்பம்
வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் கைகூடும். வரவு திருப்தி தரும்.
மீனம்
சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.
மீனம்
இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026
சிரித்துப் பேசும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். வரவு வருவதற்கு முன்பே செலவுகள் காத்திருக்கும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026
வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். தேக ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் கைகூடும். வரவு திருப்தி தரும்.
மகரம்
இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026
வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் 9 மார்ச் 2026
பம்பரமாக சுழன்று பணியாற்றும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.







