search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
    • பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.

    இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.

    283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

    தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

    மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.

    ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    • தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது 24 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர், தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

    இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

    சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றார்.

    அப்போது, விமானத்தில் பயணத்தின்போது தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக மலையாள படமான ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியுடம், இன்பநிதியும் ரீல்ஸ் செய்தனர்.

    இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் பணம் பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கரிகாபாடு சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள கரிகாபாடு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை கொண்டு சென்றது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஐதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணத்தை எடுத்து சென்றதாக பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
    • தேர்தல் பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வாக்கு சேகரிப்பின் போது தங்களது பலத்தை காட்ட பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்.

    நந்தியாலா மாவட்டம் நந்தி கோட்கூரில் நேற்று அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    தன்னுடன் தேர்தல் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

    வேட்பாளர் கொடுத்த ரூபாய் நோட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது அது கள்ளநோட்டு என தெரிய வந்தது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வேட்பாளரிடம் கேட்டபோது நான் ஒரிஜினல் நோட்டுகளை தான் கொடுத்தேன் என கூறினார்.

    மேலும் சிலர் வேட்பாளர் கொடுத்தது கள்ள நோட்டு என தெரியாமல் கடையில் கொடுத்து மாற்றினர். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆந்திராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவருவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை தாராளமாக விநியோகம் செய்து வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.

    • மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல்.
    • வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாகியுள்ளது.

    சென்னையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
    • இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்

    மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.

    1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.

    மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.

    பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.

    • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
    • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

    ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

    அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

    திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.

    விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    கடந்த 3-ந் தேதியன்று இதே இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு மின் கோளாறு மட்டுமே காரணம் என்றும், வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதெனவும், கலெக்டர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாதெனும், அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், இன்று காலையில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்காததால் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கேள்வி களையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.
    • வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    குஜராத்:

    பாராளுமன்ற தேர்தலில் நேற்று 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 64.40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பனேஜ் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு ஓட்டு போட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வாக்காளர் உறுதி செய்துள்ளார்.

    கிர் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள பனேஜின் கோவில் பூசாரியான மஹந்த் ஹரிதாஸ், ஜூனாகத் பாராளுமன்ற தொகுதியின் கீழ் வரும் வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்ட ஒரே வாக்காளர் ஆவார். அவருக்காக தேர்தல் ஆணையம் தனி வாக்குச்சாவடியை அமைத்தது.

    நேற்று காலை 11 மணியளவில் மஹந்த் ஹரிதாஸ் வாக்களித்தன் மூலம் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது.

    வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹரிதாஸ், ஜனநாயக நாட்டில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார்.

    ×