என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்
இந்த போன் இன்று பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம்.
ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த போன் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இந்த போனில் 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போன் MediaTek Helio G96 chipset பிராசஸரை கொண்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.ஸில் இயங்கும் இந்த போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இந்த போனின் 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த போன் இன்று பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம்.
இந்த சீரிஸில் பிலிப்ஸ் Xenium E209, பிலிப்ஸ் Xenium E125 மற்றும் பிலிப்ஸ் E102A ஆகிய போன்கள் இடம்பெற்றுள்ளன.
டிவிபி டெக்னாலஜி புதிய பிலிப்ஸ் இ சீரிஸ் ஃபீச்சர் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சீரிஸில் பிலிப்ஸ் Xenium E209, பிலிப்ஸ் Xenium E125 மற்றும் பிலிப்ஸ் E102A ஆகிய போன்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் பிலிப்ஸ் Xenium E209 போனில் 2.4 இன்ச் டிஸ்பிளே, 1000 mAh பேட்டரி, எஸ்.டி கார்ட் ஸ்லாட், ப்ளூடூத் 3.0 கனெக்டிவிட்டி, மீடியாடெக் நியூக்ளியஸ் ரியல்டைம் ஓ.எஸ் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.2,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிலிப்ஸ் Xenium E125 போனில் 1.77 இன்ச் டிஸ்பிளே, 2000mAh பேட்டரி, QVGA கேமரா, ப்ரீ இன்ஸ்டால்ட் கேமஸ் மற்றும் இன்பில்ட் மியூசிக் பிளேயர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது தவிர ப்ளூடூத் 3.0 கனெக்டிவிட்டி, டூயல் சிம் சப்போர்ட், எக்ஸ்பேண்டபிள் மெமரி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த போனின் விலை ரூ.2,099-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிலிப்ஸ் E102A போனில் 1.77 இன்ச் டிஸ்பிளே, 128x160 பிக்ஸல் ரெஷலியூஷன், 1000mAh பேட்டரி, ஜிபிஆர்எஸ் பிரவுசர் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவிர இன்பில்ட் வி.ஜி.ஏ கேமரா, எஸ்.டி கார்ட் ஸ்லாட், இன் பில்ட் மியூசிக் பிளேயர், பவர்ஃபுல் ஸ்பீக்கர்ஸ், இன்பில்ட் கேம்ஸ் ஆகியவையும் இதில் தரப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.1,399-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷியா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 7-வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்குள் படையெடுத்த ரஷியா முதல் வேலையாக தொலைத்தொடர்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் அந்நாட்டின் இணைய சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த உக்ரைன் நாட்டிற்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உதவி செய்ய முன் வந்தார். இதன்படி தங்கள் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வழி வழங்கப்படும் ’ஸ்டார் லிங்க்’ இணைய சேவையை உக்ரைன் நாட்டிற்கு எலான் மஸ்க் வழங்கியுள்ளார்.

ரஷிய படைகள் ஆக்கிரமிக்க முடியாத அண்டை நாடுகளின் எல்லைகளில் ரீசீவர் முனையங்களை நிறுவி, செயற்கைக்கோள் மூலமாக அலைகற்றை உள்வாங்கி, அவற்றை உக்ரைனுக்கு வழங்குவதே தனது திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷிய படைகள் மேலும் தாக்குதலால் நடத்தினாலும் ஸ்டார்லிங் இணைய சேவையை நிறுத்த முடியாது என்றும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை கொண்டு இந்த இணைய சேவை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த கொசு விரட்டியை அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்டவற்றுடன் இணைந்துகொள்ள முடியும்.
இந்தியாவில் மட்டுமல்ல கொசு பிரச்சனை உலகம் முழுவதுமே இருக்கிறது. இரவில் தூங்கவிடாமல் தொந்தரவும் செய்தும், நோய்களை பரப்பும் இந்த கொசுவை ஒழிப்பதற்கு பல்வேறு கண்டுபிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
தெர்மாசெல் நிறுவனம் ஸ்மார்ட் கொசு விரட்டி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்திற்கு லிவ் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கொசு விரட்டியை அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றுடன் இணைந்துகொள்ள முடியும். லிவ்+ என்ற மொபைல் செயலியும் இந்த கொசு ஸ்மார்ட் கொசு விரட்டியை இயக்குவதற்கு உதவுகிறது.
கொசுக்களை விரட்டுவதற்கு இதில் தரப்பட்டுள்ள மருந்து ஒரு வாரத்திற்கு 8 மணி நேரம் என பயன்படுத்தினால் 12 வாரங்களுக்கு வரும். இந்த மருந்தில் 5.5 சதவீதம் மெட்டோஃபுளூதெரின் என்ற ரசாயனம் தரப்பட்டுள்ளது. இது சூடாக்கப்பட்டு புகை போன்று வெளியாகும். வாசம் எதுவும் இல்லாத இந்த புகை 20 அடி ரேடியஸுக்கு கொசுக்களை அண்ட விடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த லிவ் கொசு விரட்டியின் விலை இந்திய மதிப்பில் ரூ.52,000 என கூறப்பட்டுள்ளது. இதில் மூன்று விரட்டிகள் தரப்பட்டிருக்கும். 945 சதுர அடிவரை இது கொசுக்களிடம் இருந்து பாதுகாப்பை வழங்கும்.
ஒரு சாதனத்தில் 5 கொசு மருந்துகளை கனெக்ட் செய்ய முடியும். மருந்து தீர்ந்துவிட்டால் மீண்டும் நிரப்புவதற்கு 6 மருந்துகள் ரூ.9100 இந்திய மதிப்பில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ரூ.25,000 மதிப்பில் வெளியாவதாக எதிர்பார்க்கப்படும் ஐபோன் எஸ்.இ 2-ன் ரிலிஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு நிகழ்சிகளை ஏற்பாடு செய்து தனது சாதனங்களை அறிமுகம் செய்யும்.
பல கட்டங்களாக நடைபெறும் இந்த நிகழ்வு, இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு நிகழ்வின் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வருடத்தின் முதல் ஆப்பிள் நிகழ்வு மார்ச் 8 நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த முதல் நிகழ்வில் புதிய ஐபோன், ஐபேட் மற்றும் பல சாதனங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், குறிப்பாக ஐபோன் எஸ்இ 3 இந்த நிகழ்வில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த போன் A15 Bionic SoC பிராஸர், ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்புகளை கொண்டிருக்கும் என்றும், ரூ.25,000 மதிப்பில் இந்த போன் வெளியாகலாம் என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
வாட்ஸ்அப்பின் கொள்கையை மீறியதாக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த கணக்குகள் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் உண்மைக்கு புறம்பான மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்அப் சப்போர்ட்டை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
நம் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.
பல்வேறு சிறப்பம்சங்கள் பெற்றுள்ள இந்த போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டன.
சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் ஆறிமுகம் செய்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB LPDDR5 ரேம், 512GB யு.எஃப்.எஸ் 3.1 ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி, 30W சார்ஜர், ஆண்ட்ராய்டு 11 ஆகிய அம்சங்கள் வெளியிட்டுள்ள இந்த போனின் விலை ரூ.79,999 ஆகும்.
சாம்சங் கேலக்ஸி எஸ் 21 FE 5ஜி - 6.4-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃபெஷ் ரேட், Exynos 2100 SoC, டால்பி அட்மாஸ், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெஸுக்கான IP68 சர்டிஃபிகேஷன் பெற்றது, ஒயர்லெஸ் சார்ஜிங். இந்த போனின் விலை ரூ.54,999 ஆகும்.
ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி- 120W ஃபாஸ்ட் சார்ஜிங், வெறும் 15 நிமிடங்கலில் முழுதாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது. 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் கொண்டது. 6.67-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200nits பிரைட்னஸ், MediaTek Dimensity 920 SoC பிராசஸர் கொண்டது. இதன் விலை ரூ.26,999 ஆகும்.
ரியல்மி 9ஐ- 6.6-inch full-HD+ டிஸ்பிளே, 90Hz பீக் ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், ஸ்டிரியோ ஸ்பீக்கர், 33W சார்ஜிங். இதன் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.15,999-ஆகும்.

மோட்டோ ஜி71 5ஜி- 6.4-inch AMOLED டிஸ்பிளே, full-HD+ ரெஷலியூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 695 பிராசஸர், 5000mAh பேட்டரி, 33W டர்போ பவர் சார்ஜர், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ். இதன் விலை ரூ. 18,999-ஆகும்.
ஒன்பிளஸ் 9 ஆர்.டி - 6.62-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன். Qualcomm Snapdragon 888 SoC பிராசஸர். இண்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட். 20 மணி நேரம் சார்ஜ் நிற்கும் 4,500mAh பேட்டரி. இதன் விலை ரூ.42,999 ஆகும்.
ஒப்போ ரெனோ 7 - 6.4-inch AMOLED டிஸ்பிளே, 90Hz ரெஃப்ரெஷ்ரேட், ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன், MediaTek Dimensity 900 SoC பிராசஸர், 8ஜிபி ரே+ 256 ஜிபி ஸ்டோரேஜ், 4,500 mAh பேட்டரி. விலை ரூ.28,999 ஆகும்.
விவோ T1 5G- 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 695 SoC, 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டுகள். 128 ஜிபி ஸ்டோரேஜ். 5000 mAh பேட்டரி. 18W ஃபாஸ்ட் சார்ஜிங். இதன் விலை ரூ.15,990-ஆகும்.
பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக கூறி இந்த செய்தியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அந்த இ-மெயிலில், பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது.
முதலில் இது ஹேக்கர்களிடம் இருந்து வந்த போலி மெயிலாக இருக்கலாம் என பலரும் சந்தேகித்த நிலையில், இந்த இ-மெயில் உண்மையில் ஃபேஸ்புக்கில் இருந்து தான் அனுப்பப்பட்டது என அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஃபேஸ்புக்கை நீண்ட நாட்களாக பயன்படுத்தாதவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட வாய்ப்பிருப்பதால் இவ்வாறு இ-மெயில் அனுப்பி எச்சரிக்கை விடுக்கப்படுவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் புரொடக்ட்டை ஆன் செய்வதன் மூலம் கூடுதல் பாதுகாப்பு அந்த கணக்குகளுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது.
குறிப்பாக ஃபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் நபர்கள் நீண்ட நாட்களாக கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அவர்களுக்கும் இந்த மெயில் அனுப்பப்படுகிறது. காரணம் அவர்கள் கணக்கை ஹேக் செய்வது மூலம் நீண்ட நபர்களை எளிதாக சென்றடையும் அபாயம் இருக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நத்திங் நிறுவனம் பவர் பேங்க், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட 5 சாதனங்களை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் கடந்த ஆண்டு ‘நத்திங்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
அந்நிறுவனம் தனது முதல் சாதனமாக ‘நத்திங் இயர் 1’ ஒயர்லெஸ் இயர்போன்ஸை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு எழுந்த நிலையில், தற்போது புதிய குறைந்த விலை சாதனம் ஒன்றையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக ட்விட்டரில் டீசர் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவலின் படி, அந்த சாதனம் குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.

டிரான்ஸ்பரன்ட் பாடி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த மாதம் இந்த ஸ்மார்ட்போன் குறித்து மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று நத்திங் நிறுவனம் குறைந்த விலை பவர் பேங்க் உள்ளிட்ட 5 சாதனங்களையும் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது.
ஜியோ நிறுவனம் ஒன்பிளஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்களுக்கான கேம் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கேம்கள் ஜியோ கேம்ஸ் பிளாட்ஃபார்மின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், கேமிங்கிற்காக இது தான் முதல்முறை நாங்கள் வேறு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம். மேலும் இந்திய டிவி துறைக்கும் இது புதிய தொடக்கமாக இருக்கும் என கூறியுள்ளது.
ஏற்கனவே ஜியோ கேம்கள் ஸ்மார்ட்போன்கள், செட்டப் பாக்ஸ்கள் ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது ஸ்மார்ட்டிவியிலும் இடம்பெறவுள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் டிவி யு1, ஒன்பிளஸ் டிவி Q, ஒன்பிளஸ் டிவி Y12 ஆகியவற்றில் இந்த கேம்கள் இடம்பெறும். மேலும் பழைய மாடல் டிவிக்களுக்கு புதிய அப்டேட்டில் இந்த கேம்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் 7 சதவீத டிவிக்களுக்கான மார்க்கெட் பங்குகளை வைத்துள்ளது. தற்போது ஸ்மார்ட் டிவிக்கான தேவை மற்றும் ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து வருவதால் அந்த நிறுவனம் ஆன்லைன் கேமிங்கை டிவிகளுக்கும் கொண்டு வர முயற்சித்து வருகின்றன.
மைக்ரோசாஃப்ட் உருவாக்கிய பல தயாரிப்புகளுக்கான எண்ணம் தனது மகனின் நிலையை பார்த்தே தோன்றியது என சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழந்தார்.
26 வயதாகும் ஜெயின் நாதெல்லா பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது.

இதுகுறித்து, தனது மகனின் நிலையை பார்த்து தான் அவரை போன்று உள்ள நபர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக நாதெல்லா தெரிவித்தார்.
இணையவாசிகள் அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதில் நேரம் செலவிடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது ஐஜிடிவி செயலியை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் நிறுவனம் வீடியோக்களை அடிப்படியாக கொண்டு ஐஜிடிவி சேவையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த சேவையை நிறுத்தி, ஐஜிடிவியை தனி செயலியாக மாற்றியது. இந்நிலையில் தற்போது ஐஜிடிவி சேவையை முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
ஐஜிடிவியில் வழங்கப்பட்டு வந்த அனைத்து அம்சங்களும், வீடியோ சேவைகளும் இனி இன்ஸ்டாகிராம் செயலியிலேயே வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது உள்ள இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்களில் விளம்பரங்கள் இடம்பெறும் வகையிலும் இன்ஸ்டாகிராம் மாற்றம் செய்து வருகிறது. இதன்மூலம் வீடியோ கிரியேட்டர்கள் ரீல்ஸ் மூலம் வருமானமும் பெறலாம் என கூறியுள்ளது.
இணையவாசிகள் தற்போது அதிக அளவில் வீடியோக்களை பார்ப்பதிலேயே நேரம் செலவிட்டு வருவதால், தனியாக இயங்கும் ஐஜிடிவி சேவையை நிறுத்தி, இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோ அம்சத்தை மேம்படுத்தும் வேலையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.






