என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஸ்மார்ட்போன்கள்
    X
    ஸ்மார்ட்போன்கள்

    கடந்த 2 மாதங்களில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள்

    பல்வேறு சிறப்பம்சங்கள் பெற்றுள்ள இந்த போன்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
    இந்த ஆண்டு தொடங்கி 2 மாதங்களில் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டன.

    சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஜியோமி, ரியல்மி, ஒப்போ, விவோ, ஆசஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் தரம் வாய்ந்த போன்களை இந்தியாவில் ஆறிமுகம் செய்துள்ளன.  

    இந்நிலையில் கடந்த 2 மாதங்களில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

    ஆசுஸ் ROG போன் 5- 6.78 இன்ச் டிஸ்பிளே, Qualcomm Snapdragon 888 SoC, 18GB  LPDDR5 ரேம், 512GB யு.எஃப்.எஸ் 3.1 ஸ்டோரேஜ், 6000mAh பேட்டரி, 30W சார்ஜர், ஆண்ட்ராய்டு 11 ஆகிய அம்சங்கள் வெளியிட்டுள்ள இந்த போனின் விலை ரூ.79,999 ஆகும்.

    சாம்சங் கேலக்ஸி எஸ் 21 FE 5ஜி -  6.4-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃபெஷ் ரேட், Exynos 2100 SoC, டால்பி அட்மாஸ், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெஸுக்கான IP68 சர்டிஃபிகேஷன் பெற்றது, ஒயர்லெஸ் சார்ஜிங். இந்த போனின் விலை ரூ.54,999 ஆகும்.

    ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜி- 120W ஃபாஸ்ட் சார்ஜிங், வெறும் 15 நிமிடங்கலில் முழுதாக சார்ஜ் ஏறும் தன்மை கொண்டது. 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் கொண்டது. 6.67-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,  1200nits பிரைட்னஸ், MediaTek Dimensity 920 SoC பிராசஸர் கொண்டது. இதன் விலை ரூ.26,999 ஆகும்.

    ரியல்மி 9ஐ- 6.6-inch full-HD+ டிஸ்பிளே, 90Hz பீக் ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 680 SoC பிராசஸர், ஸ்டிரியோ ஸ்பீக்கர், 33W சார்ஜிங். இதன் 4ஜிபி ரேம்+ 64 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம்+ 128 ஜிபி ஸ்டோரேஜ்ஜின் விலை ரூ.15,999-ஆகும்.

    ஆசுஸ் ROG போன் 5

    மோட்டோ ஜி71 5ஜி- 6.4-inch AMOLED டிஸ்பிளே, full-HD+ ரெஷலியூஷன், 60 Hz ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 695 பிராசஸர், 5000mAh பேட்டரி, 33W டர்போ பவர் சார்ஜர், 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ். இதன் விலை ரூ. 18,999-ஆகும்.

    ஒன்பிளஸ் 9 ஆர்.டி - 6.62-inch AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன். Qualcomm Snapdragon 888 SoC பிராசஸர். இண்டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட். 20 மணி நேரம் சார்ஜ் நிற்கும் 4,500mAh பேட்டரி. இதன் விலை ரூ.42,999 ஆகும்.

    ஒப்போ ரெனோ 7 - 6.4-inch AMOLED டிஸ்பிளே,  90Hz ரெஃப்ரெஷ்ரேட், ஃபுல் ஹெச்.டி+ ரெஷலியூஷன், MediaTek Dimensity 900 SoC பிராசஸர், 8ஜிபி ரே+ 256 ஜிபி ஸ்டோரேஜ், 4,500 mAh பேட்டரி. விலை ரூ.28,999 ஆகும்.

    விவோ T1 5G- 6.58 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், Qualcomm Snapdragon 695 SoC, 4ஜிபி ரேம், 6ஜிபி ரேம், 8ஜிபி ரேம் கொண்ட வேரியண்டுகள். 128 ஜிபி ஸ்டோரேஜ். 5000 mAh பேட்டரி. 18W ஃபாஸ்ட் சார்ஜிங். இதன் விலை ரூ.15,990-ஆகும்.
    Next Story
    ×