search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம்.
    • அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சென்னை:

    ஆன்லைனில் பெண்களின் புகைப்படங்களை காட்டி வலைவிரித்து பின்னர் பணம் பறிக்கும் கும்பலின் மோசடி லீலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    அந்த வகையில் வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன.

    இதனால் சென்னையில் வசிக்கும் வாலிபர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர்.

    இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக உள்ளனர். சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.

    ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும். குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள். அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கும் போலீசார் இது போன்ற போன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    • போலீசாரின் அதிரடி சோதனையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்
    • கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்து உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோட்டார் பகுதியில் போன் மூலமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இன்று காலை கஞ்சா வியாபாரி ஒருவரை பிடித்தனர்.

    அவரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிடிபட்ட கஞ்சா வியா பாரி உதவியு டன் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா வியாபாரியை மற்ற வியாபாரிகளுடன் போனில் பேச வைத்து பொறிவைத்து போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கி உள்ளனர்.

    அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை யடுத்து அவர்களை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோட்டார் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • தாயார் சுனிதாவுக்கு போன் செய்து, தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று தற்கொலை
    • ஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர், மரைன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக ஆகாஷ் வெறுப்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திங்கள்நகரில் வேலைக்குச் சென்றிருந்த தனது தாயார் சுனிதாவுக்கு போன் செய்த அவர், தனக்கு வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனக்கூறி உள்ளார்.

    சுனிதா இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார். அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது ஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

    அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுனிதா கொடுத்த புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×