search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் பகுதியில் போன் மூலம் கஞ்சா விற்பனை
    X

    கோப்பு படம் 

    கோட்டார் பகுதியில் போன் மூலம் கஞ்சா விற்பனை

    • போலீசாரின் அதிரடி சோதனையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கினர்
    • கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.இதன் காரணமாக தற்பொழுது கஞ்சா விற்பனை ஓரளவு குறைந்து உள்ள நிலையில் ஒரு சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படு வதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோட்டார் பகுதியில் போன் மூலமாக கஞ்சா விற்பனை நடை பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் இன்று காலை கஞ்சா வியாபாரி ஒருவரை பிடித்தனர்.

    அவரை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு கஞ்சா சப்ளை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற கஞ்சா வியாபாரிகளையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    பிடிபட்ட கஞ்சா வியா பாரி உதவியு டன் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சா வியாபாரியை மற்ற வியாபாரிகளுடன் போனில் பேச வைத்து பொறிவைத்து போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்தனர். இன்று காலை முதல் மதியம் வரை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 7 கஞ்சா வியாபாரிகள் சிக்கி உள்ளனர்.

    அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கஞ்சா பொட்டலங்களை மாணவர்களுக்கு சப்ளை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

    பிடிபட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததை யடுத்து அவர்களை பிடிக்க வும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் கோட்டார் பகுதி யில் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×