இரணியல் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

தாயார் சுனிதாவுக்கு போன் செய்து, தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று தற்கொலைஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.
இரணியல் அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

கன்னியாகுமரி:

இரணியல் அருகே குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஆகாஷ் (வயது 19). இவர், மரைன் கோர்ஸ் படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஆகாஷ் வெறுப்புடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திங்கள்நகரில் வேலைக்குச் சென்றிருந்த தனது தாயார் சுனிதாவுக்கு போன் செய்த அவர், தனக்கு வாழ பிடிக்கவில்லை தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனக்கூறி உள்ளார்.

சுனிதா இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் கூறியுள்ளார். அவர்கள் வீட்டில் சென்று பார்த்த போது ஆகாஷ் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுனிதா கொடுத்த புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com