என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இன்று பலரும் ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கிடைக்கும் இலவச வைஃபையை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    இன்று இண்டர்நெட் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் தொடங்கி, ஒர்க் ஃபிரம் ஹோம் வேலை, மொபைல் கேம் வரை அனைத்திற்கும் இண்டர்நெட் பயன்பாடு தேவைப்படுகிறது. 

    நமக்கு தேவையான டேட்டாக்கள் மொபைல் இண்டர்நெட் மூலம் தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இருப்பினும் பலர் பொது இடங்களில் வைஃபை மூலம் தரப்படும் இலவச இண்டர்நெட்டையும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருக்கும் ஆபத்துகளையும், அவற்றை எப்படி தவிர்ப்பது என்றும் இப்போது காணலாம்.

    ரெயில் நிலையம், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தரப்படும் இலவச வைஃபையைப் பயன்படுத்தும் போது, குற்றவாளிகள் எளிதாக நமது தகவல்களை திருடலாம். அவற்றின் மூலம் பண இழப்பு முதல் ஆபத்தான குற்றங்கள் வரை எதுவேண்டுமானாலும் ஏற்படலாம். இவற்றை தவிர்ப்பதற்காக நாம் சில பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம். 

    இதன்படி, முதலில் நமக்கு தரப்படும் இண்டர்நெட் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வைஃபை நெட்வொர்க் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வைஃபை ஆபரேட்டரை தொடர்புகொண்டு சரியான சிக்னல் பெயரை கேட்டறிந்துகொள்ள வேண்டும்.

    இலவச வைஃபையில் உள்ள ஆபத்து

    ஹேக்கர்கள் போலி வைஃபையை உருவாக்கி மக்களின் தகவலின் திருடுவதை தவிர்க்க ஐபி முகவரி வழியாக உங்கள் சாதனங்களை வைஃபையுடன் இணைக்கலாம்.

    அதேபோன்று பொது இடங்களில் வரும் வைஃபை மூலம் நாம் பயன்படுத்தும் இணையதள முகவரிக்கு முன்னால் HTTPS இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவும்.

    நமது கணினி மற்றும் ஸ்மார்ட்போனை பொது இடங்களில் உள்ள வைஃபையில் இணைக்கும்போது ஆன்டி-வைரஸ் அல்லது பிற இணைய பாதுகாப்பு செயலி, மென்பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

    நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க விபிஎன்-ஐ பயன்படுத்தலாம். வி.பி.என் பொது வைஃபையில் நமது தரவுகளை பாதுகாக்கும். 
    எல்.ஜியின் இந்த ப்ரொஜக்டர்களில் ஸ்டீரியோ, சரவுண்ட் உள்ளிட்ட பல அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
    எல்.ஜி நிறுவனம் HU715Q Ultra Short Throw laser projector மற்றும் HU710P laser-LED hybrid என்ற 2 புதிய சினிபீம் 4கே ப்ரொஜக்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரொஜக்டர்களில் பகல் நேரத்திலும் துல்லியமான வீடியோக்களை நம்மால் காண முடியும். 

    இந்த சினிமா ப்ரொஜக்டர்களில் 2,000,000:1 கான்ட்ரஸ்ட் ரேட்ஷியோ வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதிக வெளிச்சமான அல்லது வெளிச்சம் இல்லாத காட்சிகள் கூட துல்லியமாக தெரியும்.

    இதில் HU710P ப்ரொஜக்டர் 2000 லூமென்ஸ் பிரைட்னஸை வழங்கும். மேலும் அறையின் பின்பக்கம் ப்9.5 அடி முதல் 15 அடி தூரத்தில் வைத்துகொள்ளும் வகையில் இந்த ப்ரொஜக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரொஜக்டர் 40 இன்ச் முதல் 300 இஞ்ச் வரையிலான ரேஞ்சில் அதிக ஃபிளக்சிபிளிட்டியுடன் காட்சிகளை வழங்குகிறது. 

    அதேபோன்று HU715Q ப்ரொஜக்டர், 80 இன்ச் முதல் 120 இன்ச் வகையிலான காட்சியையே உருவாக்கவல்லது ஆனால் 8.5 இன்ச் தூரத்திலேயே இந்த ப்ரொஜக்டரை வைத்துகொள்ள முடியும். மேலும் இது 2,500 லூமென் பிரைட்னசை வழங்குகிறது.

    எல்.ஜி ப்ரோஜெக்டர்கள்

    இந்த ப்ரொஜக்டரில் 40W ஸ்டீரியோ செட்டப், 10W ப்ளூட்டூத்துடன் கூடிய சரவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு 4கே ப்ரொஜக்டர்களிலும் 3 ஹெச்.டி.எம்.ஐ போர்ட்டுகள், 2 யூ.எஸ்.பி போர்ட்டுகள், ஏர்பிளே 2, ஹோம்கிட், ஸ்க்ரீன் ஷேரிங் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    HU710P ப்ரொஜக்டரின் விலை இந்திய மதிப்பில் ரூ.1,88,236-ஆகவும், HU715Q-ன் விலை இந்திய மதிப்பில் ரூ.2,25,899-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 150W SuperVOOC வேகமான சார்ஜிங் டெக்னாலஜி, ஆக்ஸிஜன் ஓஎஸ் இயங்குதளம் ஆகியவை இடம்பெறும்.

    மேலும் இதில் தரப்பட்டுள்ள ஹைப்பர்பூஸ்ட் கேமிங் இன்ஜின், ஜிபிஏ ஃப்ரே ஸ்டேபிலைசர் ஃபிரேம் ரேட் ஃபிளட்சுவேஷனை குறைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஓ-சிங், ஜிபியூ லோட் கண்ட்ரோல் ஆகிய பல அம்சங்கள் இந்த போனில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
    ரியல்மியின் இந்த தொழில்நுட்பம் ஜியோமி அறிமுகம் செய்துள்ள 120W ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
    ரியல்மி நிறுவனம் 150W UltraDart சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 5 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும்.  இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனுடன் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது.

    இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் தெர்மல் வெப்பத்தை 43 டிகிரி செல்சியஸுக்கு கீழாக வைத்துகொள்ளவும், 1000 சார்ஜ் சைக்கிள்களுக்கு பிறகும் பேட்டரி கெப்பாசிட்டியை 80 சதவீதத்தில் வைத்திருக்கவும் உதவும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    150W அல்ட்ராடார்ட் சார்ஜிங்

    ரியல்மியில் அல்ட்ரா சார்ஜிங் கட்டமைப்பு ஸ்மார்ட் சாதனங்களில் 100-200W சார்ஜிங்ஜை சப்போர்ட் செய்யும் முதல் கட்டமைப்பு என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று சார்ஜ் ஏறும்போது சாதனங்களின் ஹார்ட்வேரை சரியான வெப்பத்தில் வைத்திருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் லித்தியம் பேட்டரிகளில் சரியாக வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த தொழில்நுட்பம் குறித்த முழு விவரங்களும் ரியல்மி ஜி.டி நியோ 3 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரியல்மியை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் 150W சார்ஜிங் சப்போர்ட் போன்களை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த தொழில்நுட்பம் ஜியோமி அறிமுகம் செய்துள்ள 120W ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

    பட்ஜெட் விலையில் வாங்கக்கூடிய 3 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம், நோக்கியா சி21, நோக்கியா சி21 பிளஸ், நோக்கியா சி2 2-வது எடிஷன் என்ற மூன்று  புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

    இதில் நோக்கியா சி2 2-வது எடிஷன் போனில் 5.7-inch FWVGA டிஸ்பிளே, quad-core MediaTek SoC பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இதில் 5 மெகாபிக்ஸல் ஃபிக்ஸ்ட் ஃபோகஸ் லென்ஸ் பின்பக்க கேமரா, எல்.இ.டி பிளாஷ், 2 எம்.பி செல்ஃபி கேமரா, 2400mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.6,700-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நோக்கியா சி21 போனில் octa-core Unisoc SC9863A SoC பிராசஸர், 2ஜிபி/3ஜிபி ரேம், 6.5-inch HD+ display, 8 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா, 5 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 3000 mAh பேட்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 8,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நோக்கியா சி21 சீரிஸ் போன்கள்

    நோக்கியா சி21 பிளஸ் போனில் 6.5-inch HD+ டிஸ்பிளே, octa-core Unisoc SC9863A பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் எல்.இ.டி ஃபிளாஷுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இது தவிர 5 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார், 4000 mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்த போனின் விலை இந்திய மதிப்பில் ரூ.10,100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த விற்பனையில் ஐபோன் எஸ்.இ ரூ.28,999 விலைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஃபிளிப்கார்ட் நிறுவனம் பிக் பச்சட் தமால் விற்பனையை மார்ச் 4 முதல் மார்ச் 6-ம் தேதி வரை அறிவித்துள்ளது.

    இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கு அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த விற்பனையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ மற்றும் ஐபோன் 12 சீரிஸ் ஆகியவற்றுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர எலக்ட்ரானிக் சாதனங்கள் 80 சதவீதத்திலும், டிவிக்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த பிக் பச்சாட் தமால் விற்பனையில் தினமும் நள்ளிரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு புதுப்புது தள்ளுபடிகள், கோம்போ சலுகைகள் அறிவிக்கப்படும் என கூறபட்டுள்ளது.

    ஃபிளிப்கார்ட் விற்பனை

    இந்த சிறப்பு தள்ளுபடியில் யூ.பி.ஐ பரிவர்த்தனை மூலம் ஸ்மார்ட்போன்கள் வாங்குபவர்களுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படும். மேலும் ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் கிரெடிட் கார்ட் மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் கார்ட்ஸ் ஆகியவற்றுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இத்துடன் நோ-காஸ்ட் இ.எம்.ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் ஆகியவையும் உண்டு.

    இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்கள் ரூ.7,499-க்கும், போக்கோ சி31 போன் ரூ.7,999-க்கும், ரியல்மி C21Y ரூ.7,749-க்கும், விற்கப்படவுள்ளது. அதேபோன்று ஐபோன் 12 மினி ஸ்மார்ட்போன் ரூ.40,999-க்க்கும், ஐபோன் எஸ்.இ ரூ.28,999-க்கும், ஐபோன் 12 ரூ.53,999-க்கும் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
    மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த ஸ்மார்ட் டிவி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்மார்ட்போன்கள் விற்பனை மூலம் இந்திய சந்தையில் நுழைந்த ரியல்மி நிறுவனம் தற்போது டிவிக்கள், இயர்பட்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட சாதனங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த டிவி ப்ளூடூத் வாய்ஸ் ரிமோட்டுடன் வரும் என கூறப்படுகிறது.

    இதுதவிர வாய்ஸ் கண்ட்ரோல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆகிய அம்சங்கள் இருக்கும். கூகுள் குரோம்கேஸ்ட், கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவையும் இந்த டிவியில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

    பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப இந்த லேப்டாப்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

    சாம்சங் கேலக்ஸி புக்2 ப்ரோவில் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு லேப்டாப்களும் AMOLED FHD டிஸ்பிளே 1920×1080 பிக்ஸல் ரெஷலியூஷனுடன் வருகிறது. இந்த கேலக்ஸி புக்2 சீரிஸில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது. 

    13-3 இன்ச் வேரியண்ட் லேப்டாப் இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸில் வருகிறது. 15.6 இன்ச் வேரியன்ட் இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ மற்றும் இன்டல் ஆர்க் கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்கள் 8 ஜிபி, 16 ஜிபி மற்றும் 32 ஜிபி LPDDR5 ரேம் வேரியண்டுகளில் 1 டிபி ஸ்டோரேஜ்ஜுடன் வருகின்றன. மேலும் இதில் FHD 1080p வெப் கேமரா, டூயல் அரே மைக் தரப்பட்டுள்ளது. 13.3 இன்ச் வேரியண்ட் 63Wh பேட்டரியுடனும், 15.6 இன்ச் வேரியண்ட் 68Wh பேட்டரியுடனும் வழங்குகிறது.

    மேலும் இந்த லேப்டாப்பில் பேக்லிக்ட் கீபோர்ட், பிங்கர்பிரிண்ட் பவர் கீ, டோல்மி அட்மோஸ், வைஃபை 6இ, 802.11 ax, 5.1 வெர்ஷன் ப்ளூடூத் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.79,500-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    கேலக்ஸி புக்2 ப்ரோ 360 லேப்டாப் 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் வேரியண்டுகளில் வருகிறது. இந்த இரு வேரியண்டுகளும் 16:9  ரேட்ஷியோவுடன் FHD Super AMOLED டிஸ்பிளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920x1080 ரெஷலியூஷனுடன் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 12வது ஜெனரேஷன் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ7 மற்றும் ஐ5 கான்பிகரேஷனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 32 ஜிபி வரையிலான LPDDR5 ரேம், 1 டிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ், இன்டல் ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப் 1080 பிக்சல்ஸ் ஃபுல் ஹச்.டி டிஸ்பிளே, டூயல் அரே மைக் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த லேப்டாப்பின் விலை இந்திய மதிப்பில் ரூ.94,640-ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி புக்2 ப்ரோ 360

    சாம்சங் கேலக்ஸி புக்2 லேப்டாப்பில் 15.6-inch FHD+ OLED டிஸ்பிளே,  1,920×1080 பிக்ஸல் ரெஷலியூஷன் வழங்கப்பட்டிருக்கிறது. 12-வது ஜென் இன்டல் கோர் பிராசஸர்கள் ஐ3, ஐ5, ஐ7 பிராசஸர்கள், 16ஜி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ்ஜில் வருகிறது. இதில் 61.Wh பேட்டரி, 65W சர்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

    சாம்சங் கேலக்ஸி புக்2 360 லேப்டாப்பில் 13-inch FHD+ OLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 1,920x1080 சப்போர்ட்டுடன் வருகிறது. இந்த லேப்டாப்பும் 12-வது ஜென் ஐ7 மற்றும் கோர் ஐ5 கான்பிகரேஷனில் 16 ஜிபி வரையிலான LPDDR5 ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜில் வருகிறது.

    இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.67,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி புக்2 பிசினஸ் லேப்டாப் FHD anti-glare டிஸ்பிளேவுடன் வருகிறது. Intel vPro-உடன் 12th-gen Intel Core i5 அல்லது i7 பிராசஸர்கள், 12-வது ஜென் இன்டல் கோர் ஐ3 அல்லது ஐ5 அல்லது ஐ7 பிராசஸர்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்த லேப்டாப் இன்டல் UHD கிராபிக்ஸ் அல்லது இன்டல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் அல்லது NVIDIA GeForce MX570 A கிராபிக்ஸுடன், 64 ஜிபி ரேம் வரையிலான 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேசுடன் வருகிறது. 

    இந்த லேப்டாப்பில் FHD 1080p IR வெப்கேமுடன் வருகிறது.
    இந்த விலை குறைப்பு மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.
    பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி பி.எஸ்.என்.எல்லின் ‘செல்ஃப் கேர்’ செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 4 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

    இந்த தள்ளுபடி மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

    இதுமட்டுமின்றி இந்த தள்ளுபடி ரூ.201 அல்லது அதற்கும் மேல் கட்டணம் உள்ள ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். செல்ஃப் கேர் செயலியை பயன்படுத்தினால் மட்டுமே இந்த தள்ளுபடி வழங்கப்படும். 

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பிற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்தால் தள்ளுபடி கிடையாது எனவும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.
    இந்த சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன.
    கூகுள் நிறுவனம் தனது “கூகுள் பிளே பாஸ்” சந்தா சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவை தற்போது இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தா சேவையில் மாதம் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் மொபைல் கேம்களை விளம்பரம் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் பயன்படுத்திகொள்ளலாம். 

    பொதுவாக கேம் அல்லது செயலியில் சில அம்சங்களை பயன்படுத்துவதற்கு நாம் தனியாக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். அதேபோல சில செயலிகளையே பணம் கொடுத்து வாங்க வேண்டியது இருக்கும். இந்த சந்தா சேவையில் அந்த கட்டணத்தில் இருந்து விலக்கு பெறலாம். 

    இந்த வாரத்தில் இருந்து இந்த சேவை இந்தியாவில் கிடைக்கும் என்றும், தற்போது கூகுள் பிளே பாஸ் சேவையில் முதற்கட்டமாக சுமார் 1000 செயலிகள் மற்றும் கேம்கள் இடம்பெற்றுள்ளன என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 41 பிரிவுகளில் 59 நாடுகளில் இருந்து வெளியாகும் செயலிகள் மற்றும் கேம்கள் இந்த சேவையில் தரப்பட்டுள்ளன.

    இந்த பிளே பாஸில் இந்திய தயாரிப்புகளான ஜங்கிள் அட்வெஞ்சர்ஸ், வேர்ல்ட் கிரிக்கெட் பேட்டில் 2 உள்ளிட்ட 15 செயலிகள், கேம்களும் தரப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் மேலும் தயாரிப்புகளை இணைப்பதற்கு கூகுள் பணியாற்றி வருவதாகவும், மாதம் மாதம் கேம்கள் மற்றும் செயலிகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளது.

    கூகுள் பிளே பாஸ்

    இந்தியாவில் இந்த சேவைக்கு 1 மாதத்திற்கு ட்ரையல் வடிவில் கிடைக்கும். அதன் பிறகு மாதம் ரூ.99 அல்லது வருடத்திற்கு ரூ.889 என்ற கட்டணங்களில் இந்த சேவை வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இந்த சேவையை ப்ரீபெய்ட் ஒரு மாத சந்தாவாக ரூ.109-க்கும் பெறலாம். இந்த சேவையை ஒரே கணக்கில் 5 பேர் வரை பயன்படுத்திகொள்ளலாம்.

    இந்த சேவை ஆண்ட்ராய்டு 4.4 அல்லது அதற்கும் மேலான வெர்ஷன் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும் என்றும், 16.6.25 வெர்ஷன் கூகுள் பிளே செயலியும் இதற்கு தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரஷ்யாவில் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்து ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.  ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

    இந்நிலையில் ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் வழிதடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்துகொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

    உக்ரைன் அரசிடம் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷிய தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஓரளவு உதவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    ரூ.15,000 முதல் ரூ.2000 வரை உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது.
    அமேசான் நிறுவனத்தின் ‘ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேல்’ சிறப்பு விற்பனை பிப்.26 முதல் பிப்.28 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் விற்பனையில் ரூ.15,000 விலை முதல் ரூ.20,000 வரை மதிப்பில் உள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ரூ.15,999-ல் இருந்து ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு கிடைக்கிறது.

    விவோ நிறுவனத்தின்  விவோ Y33T ஸ்மார்ட்போன் ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.18,990-க்கு கிடைக்கிறது. ஒப்போவின் ஏ74 5ஜி, 6ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.4000 குறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு கிடைக்கிறது.

    விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள்

    ரியல்மியின் நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.11,499-க்கு கிடைக்கிறது. ரெட்மி நோட் 10T 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.2,500 குறைக்கப்பட்டு ரூ.14,499-க்கு கிடைக்கிறது. ஒப்போ ஏ15எஸ் ஸ்மார்ட்போன் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,990-க்கும், ரெட்மி 9 ஆக்டிவ் ரூ.1,492 விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கும் கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கும், ஒப்போ ஏ31 ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.15,990-க்கும், ஒப்போ ஏ55 ரூ.3,500 குறைந்து ரூ.15,490-க்கும், ரியல்மி நார்சோ 30 5ஜி ரூ.1000 குறைந்து ரூ.16,999-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ரெட்மியின் நோட் 11T 5ஜி ரூ.3,500 குறைந்து ரூ.17,499-க்கும், டெக்னோ கெமான் 17 ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.13,999-க்கும் கிடைக்கிறது.
    ×