என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    இன்று மதியம் 12 மணி அளவில் நடிகர் மிலிந்த் சோமன் இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளார்.
    ஆசுஸ் நிறுவனம் தனது 'ஆசுஸ் 8z' ஸ்மார்ட்போன இன்று இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. 

    ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 5.9 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC தரப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, பின்பக்கத்தில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் என 2 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. 

    ஆசுஸ் 8z

    இது தவிர 4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறுகின்றன. 

    8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,000-ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று மதியம் 12 மணி அளவில் நடிகர் மிலிந்த் சோமன் இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளார். இதன் அறிமுகம் நிகழ்ச்சியை ஆசுஸ் யூடியூப் சேனலில் காணலாம்.
    இந்த பிக்சல் 7 சீரிஸ் அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் நிறுவனம் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிக்சல் 6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகாத நிலையில் 7 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

    பிக்சல் 7 சீரிஸில் பிக்சல் 7, பிக்சல் 7ஏ, பிக்சல் 7 ப்ரோ என 3 ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது.

    இந்த புதிய போன்களில் புதிய டென்சார் சிப்பில் இயக்கும் என்றும், 512 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் பிக்சல் 7 போன் பிக்சல் 6-ஐ விட குறைந்த அளவில் இருக்கும். கூகுள் பிக்சல் 7 ப்ரோவை பொறுத்தவரை 6.7 அல்லது 6.8 இன்ச் டிஸ்பிளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் இடம்பெறவுள்ளது.

    இந்த பிக்சல் 7 சீரிஸை அக்டோபரில் அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
    வெறும் ஆடியோ வடிவத்தில் மட்டுமே உரையாடல்களை நிகழ்த்தும் வகையில் இருந்த கிளப் ஹவுசில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகமாகிய கிளப்ஹவுஸ் செயலி முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கிறது. மக்கள் ஆடியோ வடிவில் உரையாடுவதற்கு இந்த செயலி பெரிதும் உதவுகிறது. 

    வெற்று அரட்டைகளுக்கு மட்டுமில்லாமல் சினிமா, இசை, அரசியல் என்று பல்வேறு பிரிவுகளில் முக்கியமான உரையாடல்கள் கிளப் ஹவுசில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் இந்த செயலி தற்போது புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ‘இன் ரூம் சாட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தில் பயனர்கள் குறுந்தகவல்கள் அனுப்பி ‘டெக்ஸ்ட்’ வடிவத்திலும் பேசிக்கொள்ளலாம். 

    கிளப் ஹவுஸ் சாட்

    யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது தங்களது எண்ணங்களை மெசேஜ்ஜில் அனுப்பியும் உரையாடலாம். இதே வகையில் எமோஜிக்களையும் அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய அம்சத்தில் உரையாடல்களை பற்றிய கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தனியாக தரப்பட்டிருக்கும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த ஐபோன் எஸ்.இ 2022 ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் எஸ்.இ 2022-ஐ வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஐபோனின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    இதன்படி இந்த போனின் விலை அமெரிக்காவில் 300 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.22,500-ஆக வருகிறது.

    இந்நிலையில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விலை ரூ.25,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஐபோன் எஸ்இ 2022 A15 Bionic SoC பிராசஸரை கொண்டுள்ளது. இதே பிராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போன் ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    சாம்சங்கின் இந்த சேவைக்காகவே அதன் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளன.
    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு தொடர்ந்து மென்பொருள் அப்டேட் கொடுப்பதில் பிற நிறுவனங்களுக்கு முன்னோடியாக உள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்ஸல் 6 போன்களுக்கு அடுத்த மாதத்திற்கான செக்யூரிட்டி ஆப்டேட் அனுப்புவதற்கு முன்னரே, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போன்களுக்கு மார்ச் மாதத்திற்கான செக்யூரிட்டி அப்டேட்டை இந்த மாதம் முடிவதற்கு முன்னரே அனுப்பிவிட்டது.

    தற்போது சாம்சங் நிறுவனம் மட்டுமே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களில் 4 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கு 3 வருடங்களுக்கு ஓ.எஸ் அப்டேட்டை வழங்குகிறது.

    பிற நிறுவனங்கள் 2 வருட ஓ.எஸ் அப்டேட் மட்டுமே வழங்குகின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் பயனர்களுக்கு 6 வருட மென்பொருள் அப்டேட்டை வழங்கி வந்தாலும், ஆண்ட்ராய்டு போன்களில் சாம்சங் மட்டுமே அதிகபட்ச மென்பொருள் அப்டேட்டை வழங்கி வருகிறது.

    சாம்சங் எஸ்22 சீரிஸ்

    தற்போது சாம்சங்கின் 4 வருட ஓ.எஸ் அப்டேட் திட்டம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ், கேலக்ஸி Z ஃபோல்ட் 3, கேலக்ஸி Z Flip 3 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த திட்டம் பிற போன்களுக்கும் நீடிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங்கின் இந்த திட்டத்திற்காகவே இந்தியாவில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனுக்கு 70,000 முன்பதிவுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எஸ்22 சீரிஸ் போன்கள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அமையவுள்ளன.
    தற்போது பீட்டா வெர்ஷனில் தரப்பட்டுள்ள இந்த அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் தரப்படும்.
    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. பயனர்கள் எளிய வகையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் அம்சம் இதில் இடம்பெற்றிருப்பதால் அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. 

    முதலில் குறுஞ்செய்தி வசதியுடன் தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் பின்னாளில் வாய்ஸ் மெசேஜ், ஆடியோ கால்கள், வீடியோ கால்கள், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

    இந்நிலையில் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் 5 புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பில் வரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    செர்ச் மெசேஜ் ஷார்ட்கட்:  இந்த அம்சத்தில் ஒரு நபரிடம் பேசிய உரையாடலில் இருந்தும் குறிப்பிட்ட மெசேஜ்ஜை எளிதாக தேடி எடுக்க முடியும். ஏற்கனவே இந்த அம்சம் இடம்பெற்றிருந்தாலும். தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவில் தரப்படவுள்ளது. இன்று முதல் சில பீட்டா டெஸ்டர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

    செர்ச் மெசேஜ் ஷார்ட்கட் அம்சம்

    மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ்: வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ்களுக்கு ரியாக்‌ஷன்ஸ் அனுப்பும் அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ளது போல இருக்கும் இந்த அம்சத்தில் 6 எமோஜ்ஜிக்களை ரியாக்‌ஷனாக அனுப்ப முடியும். இதே அம்சம் டெஸ்க்டாப் வாட்ஸ்அப்பிலும் வரவுள்ளது.

    கேமரா மீடியா பார்: ஒரு நபருக்கு எளிய முறையில் வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்காக இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எமோஜி ஷார்ட்கட்ஸ்: எமோஜிக்களை விரைவாக பயன்படுத்தும் வகையில் இந்த அம்சம் வரவுள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் சில குறிப்பிட்ட வார்த்தைகளை டைப் செய்வது மூலம் எமோஜிக்கள் காட்டப்படும். அதை கிளிக் செய்து விரைவாக அனுப்பலாம்.

    புதிய வாய்ஸ் கால் யூ.ஐ:  தற்போதுள்ள வாய்ஸ் காலின் தோற்றம் மாற்றப்படவுள்ளது. வீடியோ கால்களுக்கு வருவது போன்ற ஒரு யூசர் இன்டர்ஃபேஸை வாட்ஸ் அப் நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதேபோன்று குரூப் காலில் யார் பேசுகிறார்களோ அவர்களது புகைப்படத்தில் வேவ் போன்ற தோற்றம் வரும்.

    இந்த புதிய அம்சங்கள் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் தரப்படவுள்ளது.
    அமேசானின் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையில் இந்த குறைந்த விலைக்கு சாம்சங் 32 இன்ச் டிவியை வாங்கலாம்.
    அமேசான் நிறுவனம் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையை பிப்ரவரி 28-ம் தேதி வரை நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் டிவிக்களை தள்ளுபடியுடன் வாங்க முடியும். இதில் சாம்சங் டிவிக்கான சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சிரீஸ் ஹெச்.டி ரெடி எல்.இ.டி ஸ்மார்ட் UA32T4340AKXXL டிவியை தள்ளுபடி விலையில் ரூ.8,700-க்கு வாங்கலாம். 

    இதன் உண்மையான விலை ரூ.19,900 ஆகும். அமேசானின் ஃபேப் டிவி ஃபெஸ்ட் தள்ளுபடியில் இந்த ஸ்மார்ட் டிவி 15% தள்ளுபடியில் ரூ.16,999-க்கு வாங்கலாம். இந்த டிவியை எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ.1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதன்மூலம் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.15,499-க்கு வாங்க முடியும்.

    அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்டில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் அழங்கப்படுகிறது. இதன்படி சாம்சங் 32 இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சீரிஸ் டிவிக்கு ரூ.6,799 வரை எக்ஸ்சேஞ்ச் வழங்கப்படுகிறது. இந்த சலுகையையும் பயன்படுத்தினால் ரூ.8,700-க்கு இந்த டிவியை வாங்கிவிடலாம்.

    சாம்சங் 32 இன்ச் டிவி

    இந்த சாம்சங் 80 செமீ (32 இன்ச்) வொண்டர்டெயின்மெண்ட் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி 32 இன்ச்சில் எல்இடி டிஸ்ப்ளே, எச்டி ரெடி டிஜிட்டல் வீடியோ ஃபார்மேட், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,366 x 768 பிக்சல்கள் ரெசல்யூஷன் ஆகியவை தரப்பட்டுள்ளன. 

    இந்த டிவி Tizen ஓஎஸ்ஸில் இயங்குகிறது. இதில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப், 20W ஆடியோ, 2 HDMI போர்ட்கள், ஒரு USB போர்ட் மற்றும் WiFi போன்ற பயன்பாடுகளுக்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

    இந்த டிவிக்கு ஒரு வருடம் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.
    இந்த லேப்டாப்களில் 12 ஜெனரேஷன் இன்டல் பிராசஸர்கள் இடம்பெற்றுள்ளன.
    ஏசர் நிறுவனம் ஸ்விஃப்ட் 5 மற்றும் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த லேப்டாப்களை குறித்து இப்போது பார்க்கலாம்.

    ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் 14-inch WQXGA (2,560x1,600 pixels) டச் ஸ்கிரீன் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ 16:10 ஆகும். இதன் ஸ்கிரீன் டூ பாடி ரேட்ஷியோ 92.22-ஆக உள்ளது. இதன் டிஸ்பிளே ஆன்டி மைக்ரோபியல் கார்னிங் கொண்ட கொரில்லா கிளாஸுடன், தேய்மானம் மற்றும் பாதுகாப்புக்கு ஐயானிக் சில்வர் உட் செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப்பில் 12 கோர் இன்டல் கோர் சிபியூ இடம்பெற்றுள்ளது. இன்டெல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16 ஜிபி அளவில் டூயல் சேனல் LPDDR5 ரேம் வழங்கப்பட்டுள்ளது. 2 டிபி PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் தரப்பட்டுள்ளது.

    இதன் டச்பேட் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள ஓஷன்கிளாஸ் என அழைக்கப்படுகிறது. மேலும் இது மல்டி ஃபிங்கர் மூமன்ட்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் கைரேகை சென்சார் பவர் பட்டன், வாய்ஸ் காம்பெட்டபிலிட்டி கொண்ட கோர்டனா ஆகியவை தரப்பட்டுள்ளன.

    இதில் தரப்பட்டுள்ள ஏசரின் டெம்பரல் நாய்ஸ் ரிடக்‌ஷன் கொண்ட ஃபுல் ஹெச்.டி MIPI வெப்கேம் குறைந்த வெளிச்சத்திலும் அதிக தரம் வாய்ந்த வீடியோக்களை எடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஏ.ஐ நாய்ஸ் ரெடக்‌ஷன் டெக்னாலஜி இரைச்சல் இல்லாமல் உரையாடுவதற்கு உதவுகிறது. இதன் பேக் லிட் கீபோர்ட் சாதாரண கீபோர்ட்டை விட 8-10% வெப்பத்தை வெளியிடும். இந்த லேப்டாப்பில் உள்ள ட்வின்ஏர் டூயல் ஃபேன் சிஸ்டர் மற்றும் டி6 வெப்ப பைப்புகள் காற்றோட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

    இந்த லேப்டாப்பில் 10 மணி நேரம் வரை பேட்டரி லைஃப் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 4 மணி நிற்கும் திறனை கொண்டுள்ளது. வைஃபை 6இ, தன்டர்போல்ட் 4 இணைப்பு, ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட், 3.2 ஜென் 1 யூஎஸ்பிக்கள் அகியவை கொண்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,51,800-க்கும், சீனாவில் ரூ.1,19,000-க்கும், இந்தியாவில் ரூ.1,12,700-க்கும் கிடைக்கும். இதன் இந்திய வெளியீட்டு தேதி தெரிவிக்கப்படவில்லை.

    ஏசர் ஸ்விஃப்ட் 5

    ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்பில் 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி அல்லது  QHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 16:9 ரேட்ஷியோவில் வழங்கப்ப்பட்டுள்ளது.

    இந்த லேப்டாப் 12 ஜெனரேஜன் இண்டல் கோர் பிராசஸரை கொண்டுள்ளது. 2 டிபி வரையிலான எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜையும் தருகிறது.

    இந்த லேப்டாப்பில் ட்வின் ஏர் டூயல் ஃபேன் கூலிங் சிஸ்டம் பிற லேப்டாப்களை விட 65.8% திறனை வழங்குகிறது. இந்த லேப்டாப்பில் பிற அம்சங்கள் அனைத்தும் ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் இடம்பெற்றவை தான் இதிலும் தரப்பட்டுள்ளன.

    இந்த லேப்டாப் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் ரூ.1,01,200-க்கும், சீனாவில் ரூ.65,500-க்கும், வட அமெரிக்காவில் ரூ.64,000-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்த போனில் புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

    இந்த போனில் Unisoc T606 octa-core chipset வழங்கப்பட்டுள்ளது. மேலும்  6.5-inch HD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யு.ஐ.கோர் 3.1 ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. கேமராவை பொறுத்தவரை இரண்டு பின்பக்க கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    40 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் டெப்த் சென்சார் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் 5 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமராவுடன், புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு ஏற்றவாறு எடிட் செய்ய பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி ஏ03

    இதில் உள்ள ஸ்மார்ட் செல்ஃபி ஆங்கிள் கேமரா செல்ஃபிக்கள் எடுக்கும்போது தானாக வைட் ஆங்கிளுக்கு மாறும் தன்மையை கொண்டுள்ளது.

    இந்த போனில் 5000mAh பேட்டரி தரப்பட்டுள்ளது.

    இந்த போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி வேரியண்டின் விலை ரூ.10,499-ஆகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்த அம்சம் டேட்டா அதிகம் செலவாவதை தடுக்கவும், இணைய பக்கங்கள் வேகமாக செயல்படவும் உதவியது.
    கூகுள் நிறுவனம், கடந்த 2014-ம் ஆண்டு முதல் மொபைல் பயனர்களுக்கு டேட்டாவை சேமிக்கும் வகையில் குரோம் செயலியில் ‘லைட் மோட்’ என்ற சேவையை வழங்கி வந்தது. இந்த சேவை, இணைய பக்கங்களை கம்ப்ரஸ் செய்து வேகமாக செயல்பட உதவியது. மேலும் தேவையில்லாத இடங்களில் டேட்டாவை குறைத்து அதிகம் செலவாகாமல் தடுத்தது.

    2015-ம் ஆண்டு இந்த லைட் சேவையில் டேட்டாவை குறைப்பதற்கு புகைப்படங்களை பிளாக் செய்யும் அம்சத்தையும் கூகுள் கொண்டு வந்தது. இதுவும் பயனர்களுக்கு பெரிதும் உதவியது. இந்நிலையில் தற்போது இந்த லைட் மோட் அம்சத்தை நீக்கப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    குரோம் லைட் மோட்

    இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது:-

    முன்பு டேட்டாக்கள் குறைந்த அளவிலேயே தொலைத்தொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்டு வந்தன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்காக லைட் மோட் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது பல்வேறு நாடுகளிலும் குறைந்த விலையில் டேட்டாக்கள் கிடைக்கின்றன. 

    மேலும் அனைத்து நிறுவனங்களும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகின்றன. இதனால் டேட்டாவை சேமிப்பதற்கான தேவை இல்லாததால் லைட் மோட் அம்சத்தை நீக்க முடிவு செய்துள்ளோம்.

    லைட்மோட் நீக்கப்பட்டாலும் போதுமான டேட்டாவில் வேகமாக இணையதளங்களை பயன்படுத்துவதற்கு குரோம் செயலி உதவும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.
    மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்களை பதவிறக்கம் செய்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுகிறது.
    சமூக வலைதளங்களில் பயனர்களின் தகவல்களை திருடும் புதிய மால்வேர் ஒன்று மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    எலக்ட்ரான் பாட் என்று அழைக்கப்படும் இந்த மால்வேர் பயனர்களின் ஃபேஸ்புக், கூகுள், சவுண்ட்கிளவுட் மற்றும் யூடியூப் கணக்குகளில் இருந்து அவர்களுடைய தரவுகளை திருடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த கணக்குகளின் கட்டுப்பாடுகளையும் எடுத்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான செக்பாயிண்ட் ரிசர்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மைக்ரோசாஃப்டின் அதிகாரப்பூர்வ ஸ்டோர் தளத்தில் இருந்து பரவி வரும் இந்த மால்வேர் 5000-க்கும் மேற்பட்ட கணினிகளை தாக்கியுள்ளது. இந்த மால்வேர், பயனர்களின் சமூக வலைதள கணக்குகளை கட்டுப்பாட்டில் எடுத்து, அந்த கணக்குகள் மூலம் பிறர் பக்கங்களை லைக் செய்தல், கமெண்ட் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை செய்கிறது.

    இந்த மால்வேர் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து புரோகிராம்கள், கேம்ஸ்களை தரவிறக்கம் செய்வது மூலம் பரவுகிறது. இதனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயன்படுத்தும் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

    மைக்ரோசாஃப்ட் ஸ்டோர்

    உங்கள் கணினியை ஏற்கனவே இந்த மால்வேர் பாதித்திருந்தால் இவ்வாறு செய்ய வேண்டும்:-

    மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்த மென்பொருளை அன் இன்ஸ்டால் செய்யவும்.

    பிறகு உங்கள் கணினியில் C:\Users\AppData\Local\Packages> சென்று அங்குள்ள மேல்வேர் பேக்கேஜ் ஃபோல்டரை டெலிட் செய்யவும்.

    அதன்பின் கணினியில் C:\Users\AppData\Microsoft\Windows\Start Menu\Programs\Startup சென்று,  Skype.lnk அல்லது WindowsSecurityUpdate.lnkin என்ற ஃபைலை கண்டுபிடித்து டெலிட் செய்யவும்.

    இதன்மூலம் உங்கள் கணினியை மால்வேர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
    கடந்த வாரம் இந்த போன்கள் குறித்த டீசர் வெளியான நிலையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஜியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ+ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசர் வெளியிட்டது.

    இந்நிலையில் தற்போது இந்த இருபோன்களும் மார்ச் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்த போன்களில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 108 மெகாபிக்ஸல் மெயின் கேமரா ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரெட்மி நோட் ப்ரோ+ 5ஜி

    மேலே கூறிய அம்சங்கள் ரெட்மி நோட் 11 ப்ரோ குளோபல் மாடலில் இடம்பெற்றிருந்தன. இதனால் அந்த போனில் உள்ள அம்சங்கள் சிறிய வேறுபாடுகளுடன் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி நோட் 11 ப்ரோ, நோட் 11 ப்ரோ+ 5ஜி-ல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×