search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    ஐபோன் எஸ்.இ 2022 மாதிரி புகைப்படம்
    X
    ஐபோன் எஸ்.இ 2022 மாதிரி புகைப்படம்

    எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் அறிமுகமாகும் புதிய ஆப்பிள் ஐபோன்?

    இந்த ஐபோன் எஸ்.இ 2022 ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஐபோன் எஸ்.இ 2022-ஐ வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஐபோனின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

    இதன்படி இந்த போனின் விலை அமெரிக்காவில் 300 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.22,500-ஆக வருகிறது.

    இந்நிலையில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் அதன் விலை ரூ.25,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஐபோன் எஸ்இ 2022 A15 Bionic SoC பிராசஸரை கொண்டுள்ளது. இதே பிராசஸர் தான் ஐபோன் 13 சீரிஸிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த போன் ஐபோன் 8 சீரிஸின் வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×