என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பச் செய்திகள்

X
ரியல்மி போன்
வெறும் 5 நிமிடத்தில் 50 சதவீத சார்ஜ்- ரியல்மி அறிமுகம் செய்யவுள்ள 150W சார்ஜிங் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்
By
மாலை மலர்1 March 2022 5:09 AM GMT (Updated: 1 March 2022 5:09 AM GMT)

ரியல்மியின் இந்த தொழில்நுட்பம் ஜியோமி அறிமுகம் செய்துள்ள 120W ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் 150W UltraDart சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 5 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவீதத்திற்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். இந்த தொழில்நுட்பத்தை ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனுடன் சந்தைக்கு கொண்டுவரவுள்ளது.
இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் தெர்மல் வெப்பத்தை 43 டிகிரி செல்சியஸுக்கு கீழாக வைத்துகொள்ளவும், 1000 சார்ஜ் சைக்கிள்களுக்கு பிறகும் பேட்டரி கெப்பாசிட்டியை 80 சதவீதத்தில் வைத்திருக்கவும் உதவும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

ரியல்மியில் அல்ட்ரா சார்ஜிங் கட்டமைப்பு ஸ்மார்ட் சாதனங்களில் 100-200W சார்ஜிங்ஜை சப்போர்ட் செய்யும் முதல் கட்டமைப்பு என கூறப்பட்டுள்ளது. அதேபோன்று சார்ஜ் ஏறும்போது சாதனங்களின் ஹார்ட்வேரை சரியான வெப்பத்தில் வைத்திருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் லித்தியம் பேட்டரிகளில் சரியாக வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் குறித்த முழு விவரங்களும் ரியல்மி ஜி.டி நியோ 3 ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரியல்மியை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமும் 150W சார்ஜிங் சப்போர்ட் போன்களை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் ஜியோமி அறிமுகம் செய்துள்ள 120W ஜியோமி 11i ஹைப்பர்சார்ஜ் 5ஜிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
Next Story
×