என் மலர்tooltip icon

    உலகம்

    சத்யா நாதெல்லா
    X
    சத்யா நாதெல்லா

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் காலமானார்

    மைக்ரோசாஃப்ட் உருவாக்கிய பல தயாரிப்புகளுக்கான எண்ணம் தனது மகனின் நிலையை பார்த்தே தோன்றியது என சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லா உயிரிழந்தார்.

    26 வயதாகும் ஜெயின் நாதெல்லா பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அந்நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள், தொழில்நுட்ப தயாரிப்புகளில் ஈடுபட தொடங்கியது. 

    மகன் மற்றும் மனைவியுடன் சத்யா நாதெல்லா

    இதுகுறித்து, தனது மகனின் நிலையை பார்த்து தான் அவரை போன்று உள்ள நபர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தனக்கு தோன்றியதாக நாதெல்லா தெரிவித்தார்.
    Next Story
    ×