என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம்.
இன்ஸ்டாகிராம் செயலி உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் மக்களை வெகுவாக ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன.
இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்கள் விரும்பும் வகையில் புது புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டபோது இருந்து, பிறகு நீக்கப்பட்ட அம்சம் ஒன்று தற்போது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஹோம்ஃபீடை (Home Feed) பயனர்கள் இனி தாங்கள் விரும்பும் வகையில் மாற்றிகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம்ஃபீடில் Following, Favourites என்ற இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும். பயனர்கள் ஃபாலோயிங் என்ற ஹோம்ஃபீடை தேர்ந்தெடுத்தால், அவர்கள் பின் தொடரும் அனைத்து கணக்குகளில் இருந்தும், அவர்கள் அதிகம் பார்க்கும் தகவல்களின் அடிப்படையில் பரிந்துரைகளும் பதிவுகளாக ஹோம் ஃபீடில் காட்டப்படும்.

இதுவே பயனர்கள் ஃபேவரைட்ஸ் என்ற ஹோம்ஃபீட்டை தேர்ந்தெடுத்தால், தங்களுக்கு பிடித்த கணக்குகளில் இருந்து வரும் பதிவுகளை மட்டும் பார்த்துகொள்ளலாம்.
இந்த ஃபேவரைட் ஆப்ஷனுக்கு சென்று பயனர்கள் தங்களுக்கு பிடித்த 50 கணக்குகளை தேர்ந்தெடுத்துகொள்ளலாம். அந்த 50 கணக்குகளில் பதிவிடப்படும் தகவல்கள் மட்டும் ஃபேவரைட் ஆப்ஷனில் காட்டப்படும்.
சுமார் 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படவில்லை.
கூகுள் பிளே ஸ்டோரில் ஆயிரத்திற்கும் அதிகமான செயலிகள் பயன்பாட்டுக்கு கிடைக்கின்றன. இதில் பெரும்பான்மையான செயலிகள் இலவசமாக கிடைப்பதால் நாமும் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். ஆனால் இத்தகைய செயலிகளால் நமது பாதுகாப்பு பறிபோகும் அபாயம் உள்ளது.
குறிப்பாக ப்ரேடோ என்ற நிறுவனம் craftsart cartoon photo tools என்ற செயலி குறித்து எச்சரித்துள்ளது. நமது புகைப்படத்தை கார்டூனாக மற்றித்தரும் இந்த செயலியை நாம் பயன்படுத்த பேஸ்புக் கணக்கு மூலம் லாகின் செய்ய வேண்டும்.
ஆனால் அந்த செயலி நமது கணக்கை ஃபேஸ்புக்கிற்குள் லாக் இன் செய்யாமல் அந்த தகவல்களை மற்றொரு சர்வருக்கு அனுப்பி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல நாம் கார்டூனாக மாற்றுவதற்கு அப்லோட் செய்யும் புகைப்படங்களும் திருடப்படும் என கூறப்படுகிறது.
தற்போது 1 லட்சம் பேர் வரை டவுன்லோட் செய்துள்ள இந்த செயலி குறித்து புகார் அளிக்கப்பட்டாலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
வாட்ஸ்ஆப் இன்று உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியாக இருக்கிறது.
இந்த செயலியில் வாய்ஸ் கால், வீடியோ கால், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ்ஆப்பில் மெசேஜ்ஜுக்கு பதில் சொல்லாமல் ரியாக்ட் செய்யும் அம்சமும் இடம்பெற்றுள்ளது.
இதன்படி நமக்கு வந்திருக்கும் மெசேஜ்ஜை அழுத்தி பிடித்தால் ஃபேஸ்புக்கில் இருப்பது போலவே 6 எமோஜிக்கள் காட்டப்படும். இதில் நமக்கு எது தேவையோ அதை கிளிக் செய்து ரியாக்ட் செய்யலாம். தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கவுள்ளது.
இந்த மெசேஜ் ரியாக்ட் அம்சத்தை டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப் வெப்பிற்கும் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் கேம்பாஸ் சந்தாவில் கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 8 மாத சந்தா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வீடியோ கேம் விளையாடுபவர்கள் கணினி அல்லது எக்ஸ்பாக்ஸ் சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்கு என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கேம் பாஸ் சந்தா சேவை மற்றும் எக்ஸ்பாக்ஸ் கோல்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சேவைகளுக்கு விலை குறைப்பை மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.
இதன்படி 1 மாதத்திற்கான கேம் பாஸ் சந்தா ரூ.699-ல் இருந்து ரூ.499-ஆக குறைக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கான சந்தா ரூ.2,099-ல் இருந்து ரூ.1,499-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.4,199-ல் இருந்து ரூ.2,999-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.8,399-ல் இருந்து ரூ.5,999-ஆகவும், 24 மாதத்திற்கான சந்தா ரூ.16,799-ல் இருந்து ரூ.11,999-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பிசி கேம் பாஸ் 1 மாதத்திற்கான சந்தா ரூ.489-ல் இருந்து ரூ.349-ஆகவும், 3 மாதத்திற்கான சந்தா ரூ.1,467-ல் இருந்து ரூ.1,049-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.2,934-ல் இருந்து ரூ.2,099-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.5,858-ல் இருந்து ரூ.4,199-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக எக்ஸ்பாக்ஸ் லைவ் கோல்ட் சந்தா சேவை 1 மாதத்திற்கு ரூ.489-ல் இருந்து ரூ.349-ஆகவும், 6 மாதத்திற்கான சந்தா ரூ.1,049-ல் இருந்து ரூ.749-ஆகவும், 12 மாதத்திற்கான சந்தா ரூ.2,799-ல் இருந்து ரூ.1,999-ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் கேம்பாஸ் சந்தாவில் கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 8 மாத சந்தா இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது என்றும், ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
ஜொமேட்டோ நிறுவனம் 10 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதிகம் உணவு டெலிவரி செய்யப்படும் இடங்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மக்கள் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் என திட்டமிடுவதில்லை, திடீரென ஆர்டர் செய்கிறார்கள். அவர்கள் காத்திருக்கவும் விரும்பவில்லை. அதனால் 10 நிமிடங்களில் அவர்கள் விரும்பிய உணவை டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்படவுள்ளது.
உணவு அதிகம் டெலிவரி செய்யப்படும் இடங்களில் எந்தெந்த உணவுகள் அதிகம் ஆர்டர் செய்யப்படுகின்றன, எந்த உணவகங்களில் அதிகம் ஆர்டர் செய்கிறார்கள், எந்த வாடிக்கையாளர்கள் அதிகமாக அர்டர் செய்கிறார்கள் என்பது போன்ற தரவுகளின் அடிப்படையில் இந்த 10 நிமிட டெலிவரி சேவை தொடங்கப்படும்.
அதேசமயம் உணவு டெலிவரியை விரைவு படுத்த வேண்டும் என பணியாட்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படாது, ஒருவேளை தாமதமாக டெலிவரி செய்தால் அவர்களது சம்பளம் பிடிக்கப்படாது.
இவ்வாறு தீபிந்தர் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது வெப் ஸ்ட்ரீமிங் சேவையான ஆப்பிள் டிவியை உலகம் முழுவதும் அளித்து வருகிறது. பயனர்கள் ஆப்பிள் டிவியில் தங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள், வெப் சீரிஸ்களை கண்டு களிக்கலாம். ஆப்பிள் சாதனங்கள், ஆண்ட்ராய்டு சாதனங்கள், அமேசான் சாதனங்கள் உள்ளிட்டவற்றில் இந்த ஆப்பிள் டிவி சேவையை பயனர்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் டிவி சேவையை ஆண்ட்ராய்டு டிவி பயனர்களுக்கு நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் கூகுள் டிவி க்ரோம்கேஸ்ட் ஸ்ட்ரீமிங் சாதனங்கள் ஆகியவற்றில் ஆப்பிள் டிவி சேவை வழங்கப்படாது என்றும், சேவையை பயன்படுத்த விரும்புவோர் ஐபோன், ஐபேட் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்களை கொண்டு பயன்படுத்தலாம் எனவும் செய்தி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆப்பிள், கூகுள் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுவதால் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் அப்டேட் ஆவதை போல வைரஸ்களை போனில் நிறுவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிளேஸ்டோரில் அதிக அளவில் ட்ரோஜன் மற்றும் மால்வேர் பாதிப்புக்கு உள்ளான செயலிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக கிரிப்டோகரன்சி வேலட்டுகள், மேனேஜ்மெண்ட் செயலிகள், இன்வெஸ்ட்மெண்ட் க்ளோன் செயலிகள், போட்டோ எடிட்டர்கள் ஆகிய செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பாதிக்கப்பட்ட செயலிகளை கூகுள் கண்டுபிடித்து நீக்கினாலும் சில செயலிகள் தொடர்ந்து நீடிக்கிறது
இந்த செயலிகள் பயனர்களுக்கு தெரியாமல் கட்டண சந்தாவிற்கும், முறைகேடான இணையதளங்களை இயக்கவும் அனுமதி வழங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் வாட்ஸ்ஆப் செயலிகளின் மாறுபட்ட போலி வடிவங்களான ஜிபிவாட்ஸ்ஆப், ஓபி வாட்ஸ்ஆப், வாட்ஸ்ஆப் பிளஸ் ஆகிய செயலிகளால் பயனர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் அப்டேட் ஆவதை போல வைரஸ்களை போனில் நிறுவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகள் நேற்று மதியம் முடங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள் திடீரென நேற்று மத்தியத்திற்கு மேல் சிக்கலை சந்தித்தது. ஆப்பிளின் ஆப் ஸ்டோர், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக் உள்ளிட்ட சேவைகள் இயங்காமல் சில பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது ஆப்பிள் சேவை மீண்டும் சிக்கல் இல்லாமல் பயன்பாட்டுக்கு வந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சேவை முடக்கம் டி.என்.எஸ் எனப்படும் சர்வர் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்டது என்றும், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு ஆப்பிள் சேவைகள் வந்துவிட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.
ஜியோவின் 5 ரீசார்ஜ் திட்டங்களில் இலவச டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது.
அனைவரும் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரை இலவசமாக காண உதவும் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படும். மேலும் 200 ஜிபி வரை டேட்டாவை ரோல் ஓவர் செய்துகொள்ளலாம். டேட்டா தீர்ந்துவிட்டால் ரூ.10-க்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தி அமேசான், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களுக்கான சந்தா இலவசமாக வழங்கப்படும்.
ஜியோவின் ரூ.3119 ரீசார்ஜ் திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா+ கூடுதல் 10 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவும் உண்டு.
ஜியோவின் ரூ.1499 திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படும். இதிலும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் பிரீமியம் சந்தா 1 வருடத்திற்கு இலவசம்.
ரூ.4199 திட்டத்தில் தினம் 3 ஜிபி டேட்டா 365 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கான டிஸ்ன்பி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவும் இலவசம்.
ரூ.601-க்கு தினம் 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். இத்துடன் 1 வருடத்திற்கு டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தா இலவசம்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஓடிடி சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 40 முதல் 50 ஓடிடி தளங்கள் வரை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஒடிடி தளங்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு இந்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.
இதன்படி ஓடிடியில் வரும் வீடியோக்கள் வயதின் அடிப்படையில் 5 வகைகளாக பிரிக்கப்படவுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களுக்கு U சான்றிதழும், 7 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க்கூடிய வீடியோக்களுக்கு U/A 7+, 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 13+, 16 வயதுடையவர்களுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 16+ மற்றும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு A சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும் என கூறப்பட்டுளது.
இதில் U/A 13+ வீடியோக்களுக்கு பெற்றோர் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அனுமதியுடன் மட்டுமே வீடியோ ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தனது கணவரின் உயிரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியதாக ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக்கிற்கு பெண் ஒருவர் கடிதம் எழுதிய நிலையில், அவருக்கு பதில் அளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் இன்று உலகம் முழுவதும் பெரும் அளவில் பயன்பட்டு வருகிறது. குறிப்பாக ஆரோக்கிய வாழ்க்கைமுறையை மேற்கொள்பவர்களுக்கு ஆப்பிள் வாட்சின் பல அம்சங்கள் உதவியாக இருக்கிறது.
இந்நிலையில் ஆப்பிள் வாட்ச் ஹரியானாவில் மருத்துவர் ஒருவருடைய உயிரையே காப்பாற்றியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் பல் மருத்துவராக பணியாற்றி வரும் நிதிஷ் சோப்ரா ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6-ஐ கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிதிஷ் சோப்ராவின் மனைவி ஆப்பிள் வாட்சை கொண்டு ஈ.சி.ஜி பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் இதைய துடிப்பில் சில தடுமாற்றங்கள் இருப்பதை அறிந்த அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அவருக்கு பரிசோதனை செய்ததில் இதையத்தில் 99.9 அடைப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சோப்ரா காப்பாற்றப்பட்டார்.
இதையடுத்து சோப்ராவின் மனைவி ஆப்பிள் தலைமை செயலதிகாரி டிம் குக்கிற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதற்கு பதில் அளித்த டிக் குக், “நீங்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடியதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆரோக்கியமாக இருங்கள். நன்றி” என பதிலளித்துள்ளார்.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு, கூகுள் செயலியில் கடைசி 15 நிமிட தேடுதல் ஹிஸ்டரியை நீக்கும் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்களுக்கு கூடுதல் தனியுரிமை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் விளக்கம் அளித்துள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு பயனர்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள கூகுள் அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். பின் அதில் புரோஃபைல் படத்தை க்ளிக் செய்து ‘Delete last 15 Min’ என்ற ஆப்ஷனை பயன்படுத்தி கடைசி 15 நிமிட ஹிஸ்ட்ரியை டெலிட் செய்யலாம்.






