என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ரஷியா அனைத்து வகை தொழில்நுட்ப விஷயங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ரஷியா -உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் 24 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. ரஷியாவின் படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் ரஷியாவில் தங்களது சேவையை நிறுத்திகொண்டன.
ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தின. இதனால் ஆத்திரமடைந்த ரஷியா ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தடை செய்தது.
பின் கடந்த மார்ச் 14-ம் தேதி இன்ஸ்டாகிராம் செயலியையும் ரஷியா முடக்கியது. இந்த நடவடிக்கையால் ரஷியாவில் இருந்த 8 கோடிக்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விபிஎன் உள்ளிட்ட சேவைகள் மூலம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்த தொடங்கினர்.
இதையடுத்து ரஷியா, இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ரோஸ்கிராம் செயலியின் வடிவமைப்பு பணி நடைபெற்று வருவதாகவும், மார்ச் 28-ம் தேதி முதல் இந்த செயலி பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் இந்த ரோஸ்கிராம் செயலியில் இருக்கும். ரோஸ்கிராம் மூலம் பயனர்கள் வருவாயும் ஈட்ட முடியும் என ரஷியா தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து வகை தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களையும் உள்நாட்டிலேயே தயாரிக்க ரஷியா முடிவெடுத்துள்ளது.
ஆப்பிள் சாதனங்களின் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளுக்கு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டது.
இந்த அப்டேட்டில் புதிய சிரி வாய்ஸ்கள், முகக்கவசம் அணிந்தபடியே ஐபோன்கள், ஐபேட்களை அன்லாக் செய்யும் அம்சம் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் ஆப்பிள் சாதனங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளையும் ஆப்பிள் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் இணைய பாதுகாப்பு பிரிவான ஐ.சி.இ.ஆர்.டி அனைத்து ஆப்பிள் பயனர்களையும் தங்கள் சாதனங்களை அப்டேட் செய்யக்கூறி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பு பிரச்சனைகள் இருக்கின்றன. இதன்மூலம் ஹாக்கர்கள் ஆப்பிள் சாதனங்களுக்குள் நுழைந்து சில முக்கிய தகவல்களை எடுத்துவிட முடியும். இவற்றை சரி செய்ய ஆப்பிள் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டுக்கு உடனே மாற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஆப்பிள் சாதனங்களில் எந்தெந்த செயலிகள் பாதுகாப்பு பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளது என்ற பட்டியலையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
14.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐஓஎஸ் ஐபேட் ஓஎஸ்
8.5 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் வாட்ச் ஓஎஸ்
15.4 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி
12.12.13 விண்டோஸ் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் ஐடியூன்ஸ்
12.3 மோண்டெரே வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்
11.6.5 பிக் சர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் மேக் ஓஎஸ்
ஆப்பிள் மேக் ஓஎஸ் கேட்டலினா
7.9 சாஃப்ட்வேர் வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் டிவி
10.4.6 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் கேரேஜ்பேண்ட்
10.7.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் லாஜிக் ப்ரோ எக்ஸ்
13.3 வெர்ஷனுக்கு முந்தைய ஆப்பிள் Xcode
ஆப்பிள் மென்பொருள் பிரச்சனைகளை சரி செய்ய பயனர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி.ஐ லைட் என்ற அம்சத்தை என்.பி.சி.ஐ அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட் அம்சத்தின் மூலம் சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யூ.பி.ஐ சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் யூ.பி.ஐ லைட் தேர்வையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த யூ.பி.ஐ லைட்டில் ஆன்லைன் வாலட் தரப்படும். பயனர்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட்டில் பணத்தை வைத்துகொண்டு சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்யலாம். ரூ.200 முதல் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளை இதில் செய்ய முடியும்.
தற்போது யூபிஐ சேவையை இணையம் இல்லாமலே செய்யும் வசதி அறிமுகமாகியுள்ள நிலையில், யூ.பி.ஐ லைட் சேவையை இணையத்தில் மட்டுமே செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மைக்ரோசாஃப்டால் வழங்கப்பட்டு வரும் இந்த சேவை வரும் ஜுன் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், விண்டோஸ் பயனர்களை இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இண்டர்நெட் எக்ஸ்பிளோரர் 11 சேவையை முழுதாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது விண்டோஸ் பயனர்கள் யாரும் எக்ஸ்பிளோரர் பிரவுசரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்பிளோரருக்கு வழங்கப்பட்டு வந்த சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அதன்பின் விண்டோஸ் பிரவுசராக மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இருக்கும். எக்ஸ்பிளோரர் பயன்படுத்துபவர்களுக்கு தானாகவே மைக்ரோசாஃப்ட் எட்ஜுக்கு ரீடைரெக்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
நவீன தேவைகளுக்கு ஏற்ப ஒரே ஒரு பிரவுசரிலேயே அனைத்து அம்சங்களையும் கொண்டு வர மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளதால் எக்ஸ்பிளோரருக்கு பதில், எட்ஜை பிரதான பிரவுசராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த மாதமே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனர்களை ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வலியுறுத்தி கடந்த மாதம் மெயில் அனுப்பியது. அவ்வாறு செய்யவில்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று முதல் இந்த முடக்கம் அமலுக்கு வந்ததாக பல ஃபேஸ்புக் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஹேக்கர்களால் ஃபேஸ்புக் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் உடனே செட்டிங்ஸுக்கு சென்று தங்களுடைய ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு செயலியின் உதவியில்லாமல் நமக்கு பிடித்த புகைப்படங்களை வாட்ஸ்ஆப் மூலமாகவே ஸ்டிக்கராக மாற்றலாம்.
வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஸ்டிக்கர் அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அனைவருக்கும் பிடித்துபோய் ஸ்டிக்கரை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இதை தொடர்ந்து 3-வது வகை செயலிகள் பயனர்களுக்கு பிடிக்கும் வகையில் திரைப்பட வசனங்கள், கதாப்பாத்திரங்கள் ஆகியவற்றை வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்களாக வெளியிட்டன. இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது வேறு செயலிகளில் உதவி இல்லாமல் வாட்ஸ்ஆப்பிலேயே நமக்கு பிடித்த புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக அனுப்பும் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தை வாட்ஸ்ஆப் வெப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை பயன்படுத்த வாட்ஸ்ஆப் வெப்பை திறந்து ஏதாவது ஒரு சாட் விண்டோவிற்குள் செல்லவும்.
பிறகு அதில் உள்ள Attachment ஐகானை கிளிக் செய்து ஸ்டிக்கர் என்பதை செலக்ட் செய்யவும்.

இப்போது ஃபைல் எக்ஸ்பிளோரரில் சென்று உங்களுக்கு பிடித்த போட்டோவை செலக்ட் செய்து ஓபன் தரவும்.
இவற்றை அனுப்பினால் ஸ்டிக்கர் வகையில் செல்லும். இந்த ஸ்டிக்கரை ரைட் கிளிக் அல்லது நீண்ட நேரம் பிரஸ் செய்து சேவ் செய்து வைத்துகொள்ளலாம்.
இந்த அம்சத்தில் புகைப்படத்தின் பேக்கிரவுண்டை நீக்கும் வசதி இடம்பெறவில்லை. நீங்கள் பேங்கிரவுண்ட் நீக்கப்பட்ட புகைப்படங்களை அனுப்பினால் வாட்ஸ்ஆப்பில் தரப்படும் ஸ்டிக்கர்கள் போலவே இருக்கும்.
ஜியோவின் இந்த புதிய திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
ஜியோ நிறுவனம் இரண்டு புதிய வொர்க் ஃபிரம் ஹோம் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள்
ரூ. 2,879 மற்றும் ரூ. 2,999 விலையில் கிடைக்கின்றன.
இதன்படி ஜியோவின் ரூ.2879 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 730ஜிபி ஆகும். தினசரி எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.
மற்றொரு திட்டமான ரூ.2999-ல் தினம் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் அழைப்புகள், தினம் 100 எஸ்.எம்.எஸ்கள் 365 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா அளவு 912.5 ஜிபி ஆகும். எஃப்.யூ.பி முடிந்தவுடன் டேட்டா வேகம் 64 Kbps-ஆக குறையும்.
ஜியோவின் இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்தால் ரூ.200 ஜியோமார்ட் மகா கேஷ்பேக்கும் வழங்கப்படுகிறது.
மெட்டாவெர்ஸ் சாதனங்களை உருவாக்குவதற்கு பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கடந்த ஆண்டு மெட்டாவெர்ஸ் மெய்நிகர் உலகத்தை உருவாக்கி வருவதாக அறிவித்தார்.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் துணையை கொண்டு உருவாகி வரும் இந்த மெட்டாவெர்ஸ் உலகத்தில் நாம் விளையாடலாம், நண்பர்களுடன் கூடி அரட்டையடிக்கலாம், பாடம் கற்கலாம், நிலம் வாங்கலாம் மற்றும் விரும்பும் விஷயங்களை செய்யலாம். இணைய உலகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக மெட்டாவெர்ஸ் அமையப்போவதாக பலரும் கருதுகின்றனர். இதையடுத்து பெரும் நிறுவனங்கள் பலவும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தை சார்ந்த சாதனங்கள், சேவைகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமான சாம்சங், இனி மெட்டாவெர்ஸில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து சாம்சங் கூறியதாவது:-
எதிர்காலம் மெட்டாவெர்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் சார்ந்து தான் இருக்கும். இதனால் மெட்டாவெர்ஸ் சாதனங்களையும், தீர்வுகளையும் உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்த இருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதுவேண்டுமானலும், எங்குவேண்டுமானலும் இருந்து மெட்டாவெர்ஸை அனுபவிப்பதற்கான வகையில் உதவுவோம்.
இனி சாம்சங் நிறுவனம் மெட்டாவர்ஸை சப்போர்ட் செய்யக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்யும். என்னவகையான சாதனங்கள் என்பதை இப்போது கூற முடியாது. இதற்காக பெரிய அளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம்.
இவ்வாறு சாம்சங் அறிவித்துள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் கடைசி ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் பிரீவ்வை வெளியிட்டுள்ளது. இதில் ஏராளமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை இப்போது பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டில் உள்ள ‘டு நாட் டிஸ்டர்ப் மோட்’ பிரையாரிட்டி மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தரப்பட்டுள்ள நோட்டிஃபிகேஷன் பர்மிஷன் எந்தெந்த செயலியின் நோட்டிபிகேஷனகள் வர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது.
குயிக் செட்டிங்க்ஸில் புதிய பிரைவசி ஷார்ட்கட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேமரா, மைக்ரோபோன், லோகேஷன் ஆகியவற்றின் பிரைவசியை எளிதாக மாற்றிகொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 13-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய மீடியா பிளேயர், அவுட்புட் பிக்கர் சிறப்பான டிசைனில் வந்துள்ளன. இதன் யூ.ஐ மூலம் எளிதாக இசை மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை கட்டுப்படுத்த முடியும்.

ஆண்ட்ராய்டு 12எல்-ல் நீகப்பட்ட டச் இண்டிகேட்டர்கள் ஆண்ட்ராய்டு 13-ல் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யும்போதே டச்சை எனாபிள் செய்ய முடியும்.
கூகுள் டிஸ்பிளே மற்றும் ஃபாண்ட் சைஸ் ஆப்ஷன் இரண்டையும் ஒரே மெனுவின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நாம் சாதனத்தின் டிஸ்பிளே சைஸை மாற்றிக்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 12எல்-ல் இருந்த ஸ்பிலிட் ஸ்க்ரீன் அம்சம் ஆண்ட்ராய்டு 13-க்கும் தரப்பட்டுள்ளது.
இந்த ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட் பிக்சல் 4 மற்றும் பிற பிக்ஸல் போன்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
காயின்ஸ்விட்ச், யுக் மெட்டாவெர்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்த வருடத்திற்கான ஹோலி பண்டிகையை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்துள்ளன.
மெட்டாவெர்ஸ் என்ற மெய்நிகர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட உருவாக்கப்பட்டுள்ள உலகில் நாம் விரும்பியதை செய்யலாம்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு பண்டிகையை மெட்டாவெர்ஸில் கொண்டாட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது ஹோலி பண்டிகையையும் மெட்டாவெர்ஸில் கொண்டாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காயின்ஸ்விட்ச், யுக் மெட்டாவெர்ஸ் என்ற நிறுவனங்கள் இணைந்து இந்த வருடத்திற்கான ஹோலி பண்டிகையை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்துள்ளன.
இணையவாசிகள் மெட்டாவெர்ஸில் இணைந்து ஹோலி பண்டிகையை தங்களது குடும்பத்தினரை சந்தித்து கொண்டாடலாம். ஹோலி பண்டிகையை முன்னிட்டு இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவை மெட்டாவெர்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மெட்டாவெர்ஸில் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் Yug Metaverse என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்ய வேண்டும். பின் அந்த செயலியில் அக்கவுண்ட் தொடங்கி நமது அவதாரை உருவாக்கிகொள்ள வேண்டும்.
பின் அந்த செயலியில் ஹோலி என்ற வென்யூவை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடலாம்.
சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான வணிக பரிவர்த்தனைகள் யூபிஐ மூலமாகத்தான் நடைபெறுகிறது. யூபிஐ பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு நமக்கு எளிதாக இருக்கிறதோ, அதேசமயம் மோசடி நடைபெறுவதற்கும் வழிவகுக்கிறது.
யூபிஐ பரிவரத்தனை குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துவிடுகின்றனர். இந்நிலையில் சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்க நாம் நினைவில் வைத்துகொள்ள வேண்டிய 5 விஷயங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ளது.
1) யூபிஐ பின் பணம் அனுப்புவதற்கு மட்டுமே கேட்கப்படும். பணம் பெறுவதற்கு யாராவது பின் நம்பர்கள் கேட்டால் தர வேண்டாம்.
2) பணம் அனுப்பும் முன் போன் நம்பர், பெயர், யூபிஐ ஐடி ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே பணம் அனுப்பவும்.
3) யூ.பி.ஐ பின்னை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம்.
4) தெரியாத நபர்களிடம், கடைகளுக்கு சென்று பணம் அனுப்புவதற்கு யூ.பி.ஐ ஐடியை தர வேண்டாம். யூ.பி.ஐ மூலம் பணம் அனுப்ப தெரியாதவர்கள் வங்கி மூலம் பணம் அனுப்புவதே நல்லது.
5) யூ.பி.ஐ குறித்த சந்தேகங்கள், பிரச்சனைகளுக்கு வங்கி அல்லது யூபிஐ சேவையை வழங்கும் நிறுவனத்தை மட்டும் தொடர்புகொள்ளவும்.
இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது.
இந்தியாவில் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த துறையில் பேடிஎம்,போன்பே, கூகுள் பே, அமேசான் பே என பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது டாடா குழுமமும் இந்த துறையில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது. டாடா குழுமத்தின் யூ.பி.ஐ செயலிக்கு ‘டாடா நியு’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சேவைக்காக டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் வணிக பிரிவான டாடா டிஜிட்டல், ஐசிஐசி வங்கியுடன் இணைந்து செயல்படவுள்ளது. டாடாவின் இந்த நியு சேவை, பிற யூபிஐ செயலிகளை விட அதிவேகமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த டாடா நியு யூபிஐ செயலி அடுத்த மாதம் ஐபிஎல் தொடரின் போது அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு யூபிஐ செயலிகளும் கேஷ்பேக், கூப்பன்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகின்றன. இதே வகையில் டாடா நியு செயலியிலும் பல வகையான சலுகைகள், கேஷ்பேக்குகள் வழங்கப்படவுள்ளன.
இதைத்தவிர டாடா டிஜிட்டலின் பிற செயலிகளான பிக்பாஸ்கெட், 1 எம்.ஜி, குரோமா, டாடா கிளிக், ஃபிளைட் புக்கிங் சேவை ஆகியவற்றையும் இந்த நியு செயலியிலேயே பயன்படுத்த முடியும்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






