என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

ஓ.டி.டி
ஓடிடி பார்வையாளர்களுக்கு இனி கட்டுப்பாடு- இந்திய அரசு அதிரடி
இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இன்று ஓடிடி சேவை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 40 முதல் 50 ஓடிடி தளங்கள் வரை இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஒடிடி தளங்கள் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு இந்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன.
இதன்படி ஓடிடியில் வரும் வீடியோக்கள் வயதின் அடிப்படையில் 5 வகைகளாக பிரிக்கப்படவுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் உள்ள வீடியோக்களுக்கு U சான்றிதழும், 7 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்க்கூடிய வீடியோக்களுக்கு U/A 7+, 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 13+, 16 வயதுடையவர்களுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு U/A 16+ மற்றும் வயது வந்தவர்கள் பார்க்கக்கூடிய வீடியோக்களுக்கு A சான்றிதழ்கள் வழங்கபட வேண்டும் என கூறப்பட்டுளது.
இதில் U/A 13+ வீடியோக்களுக்கு பெற்றோர் பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அனுமதியுடன் மட்டுமே வீடியோ ஒளிபரப்பப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஓடிடி தளங்களுக்கான கட்டுப்பாடு இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்படவுள்ளது. இதையடுத்து இந்தியாவின் இந்த நடவடிக்கையை பிறநாடுகளும் கவனித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story






