என் மலர்tooltip icon

    கணினி

    ஐஒஎஸ் மெயில் செயலியில் பயனர் விவரங்களை பல ஆண்டுகளாக கசியவிட்ட பிழையை விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.



    உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ஐபோன் பயனர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள மெயில் செயலியில் கண்டறியப்பட்டு இருக்கும் பிழையை ஏற்படுத்த ஹேக்கர்கள் ஆறு சைபர்செக்யூரிட்டி சோதனைகளை முறியடித்து இருப்பதாக ஆய்வு நிறுவன அதிகாரி தெரிவித்து இருக்கிறார்.

    மெயில் செயலி

    மெயில் செயலியில் உள்ள பிழை ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பாதித்து இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு தயார்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் இதற்கான அப்டேட் உலகளவில் வெளியிடப்படும் என ஆப்பிள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    சமீபத்திய ஐஒஎஸ் இயங்குதளம் கொண்டிருந்த ஐபோன்களில் இருந்தும் ஹேக்கர்கள் தகவல்களை திருட இந்த பிழை வழி வகுத்து இருக்கிறது. இந்த பிழை மெயில் செயலியை இயக்கி வந்த அனைத்து விவரங்களையும் ஹேக்கர்களுக்கு வழங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்க செய்யும் புதிய அப்டேட் வெளியிடப்படுகிறது.



    உலகின் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. குறுந்தகவல் செயலியாக மட்டுமின்றி க்ரூப் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி வருகிறது. 

    இதுவரை வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ள அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்ற நிலை நிலவியது. தற்சமயம் இந்த எண்ணிக்கையை வாட்ஸ்அப் அதிகப்படுத்தி இருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் க்ரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கும் நிலையில் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தில் மாற்றம் செய்ய இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்

    வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேரை பங்கேற்க செய்யும் அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப்  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இதற்கான ஸ்டேபில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

    பயனர்கள் க்ரூப் கால் செய்ய வாட்ஸ்அப் க்ரூப் சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் வாட்ஸ்அப் க்ரூப் கால் அம்சத்தை இயக்கி விடும். இதுதவிர, பயனர்கள் கால்ஸ் டேப் சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து க்ரூப் கால் செய்யலாம்.
    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக கேம் ஸ்டிரீமிங் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ட்விட்ச் மற்றும் யூடியூப் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக அமைகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கென பிரத்யேக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த செயலி கேம் ஸ்டிரீமிங் சேவைகளான ட்விட்ச் மற்றும் யூடியூப் போன்றவற்றுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 

    இந்த செயலி கொண்டு தளத்தில் உள்ள ஸ்டிரீமர்களின் ஆர்வத்தை தூண்டுவதோடு கேம் ஸ்டிரீமிங் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். ஃபேஸ்புக்கின் புதிய செயலி: வாட்ச், பிளே மற்றும் கனெக்ட் என மூன்று சேவைகளை வழங்குகிறது. வாட்ச் அம்சத்தில் ஸ்டிரீம்களை பார்த்து, புதிய ஸ்டிரீமர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

    பிளே சேவை கொண்டு கேம்களை முழுமையாக டவுன்லோடு செய்யாமலேயே அதை பற்றி அறிந்து கொண்டு, அதனை உடனடியாக விளையாட தொடரலாம். கனெக்ட் சேவையை கொண்டு கேமிங் குழுக்களுடன் இணைந்து கொள்ள முடியும். 

    ஃபேஸ்புக் கேமிங்

    ஃபேஸ்புக்கின் கேமிங் சார்ந்த தரவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை ட்விட்ச் மற்றும் யூடியூப் போன்றவற்றை விட மிகவும் குறைவு ஆகும். கடந்த சில ஆண்டுகளில் இரு சேவைகளும் கணிசமான அளவு வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. மேலும் 2018 - 2019 காலக்கட்டத்தில் வீடியோக்கள் பார்க்கப்பட்ட நிமிடங்கள் 210 மடங்கு அதிகரித்து இருக்கிறது. 

    கேம் ஸ்டிரீமிங்கை எளிமையாக்க விரைவில் கோ லைவ் எனும் அம்சத்தை ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இதை கொண்டு பயனக்கள் விரும்பும் கேம் ஸ்டிரீம்களை அந்தந்த சாதனங்களில் இருந்தே அப்லோடு செய்யலாம். இந்த சேவையில் வருவாய் ஈட்டுவதற்கான வழிமுறைகளையும் ஃபேஸ்புக் ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது.

    தற்சமயம் ஃபேஸ்புக் கேமிங் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் இதற்கான ஐஒஎஸ் பதிப்பு வெளியிடப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய ஏர்பாட்ஸ், மேம்பட்ட மேக்புக் ப்ரோ, ஐபேட் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் புதய சாதனங்கள் பற்றிய தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ், புதிய ஐபேட் ஏர், 12 இன்ச் மேக்புக் மற்றும் ஆப்பிள் கேம் கண்ட்ரோலர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தற்சமயம் தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடலை மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யும் என கூறப்பட்டது. எனினும், ஆப்பிள் நடத்த இருந்த மார்ச் மாத நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ் மாடல் தோற்றத்தில் ஏர்பாட்ஸ் ப்ரோ போன்று காட்சியளிக்கும் என்றும் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் லோகோ

    இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஓவர் இயர் ஹெட்போன் மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த ஹெட்போன் ஏர்பாட்ஸ் எக்ஸ் என அழைக்கப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் ஆப்பிள் புதிய மேக்புக் ப்ரோ மாடலை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஐபேட் ஏர் மாடலும் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அன்டர்-ஸ்கிரீன் டச் ஐடி சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது மினி எல்இடி டிஸ்ப்ளேவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை ஐபேட், சிறிய ஹோம்பாட், ஆப்பிள் கேம் கண்ட்ரோலர், ஐபோன் 12 உள்ளிட்டவற்றையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. 
    ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளங்களில் பயனர்கள் மற்றவர்களுக்கு அக்கறையை வெளிப்படுத்த புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.



    ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக கேர் ரியாக்ஷன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா காலத்தில் மக்கள் தங்களது அக்கறையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முடியும். இதே ரியாக்ஷன் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரியாக்ஷன் அடுத்த வாரம் முதல் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதை வெளியிடும் பணிகள் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் தளத்தில் ஏற்கனவே ஆறு ரியாக்ஷன்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய கேர் ரியாக்ஷன் ஏழாவதாக அமைந்துள்ளது. 

    புதிய கேர் ரியாக்ஷன் வெளியிடப்பட்டு இருப்பதை ஃபேஸ்புக் நிறுவன அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்து இருக்கிறார். புதிய ரியாக்ஷன் ஃபேஸ்புக் பதிவு, புகைப்படம், வீடியோ மற்றும் கமென்ட் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த முடியும்.  

    ஃபேஸ்புக் கேர் ரியாக்ஷன்

    இந்த சமயத்தில் இது தேவையற்றது என தெரியும், எனினும் பயனர்கள் தங்களது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை நினைத்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்ட இது உதவியாக இருக்கும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் தொழில்நுட்ப தகவல் தொடர்பு மேலாளர் அலெக்சான்ட்ரூ வொய்கா தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

    புதிய கேர்  ரியாக்ஷன் முகம் ஒன்றை இதயத்தை கட்டுத்தழுவது போன்று அனிமேட் ஆகிறது. 

    மெசஞ்சர் செயலியில் இந்த ரியாக்ஷன் வழங்கப்படுகிறது. முதலில் சாட் பாக்ஸ் இல் ஹார்ட் ரியாக்ஷனை பதிவிட்டுபின் கீழ்புறமாக அழுத்தி பிடித்தால் புதிய ரியாக்ஷனை பார்க்க முடியும். பின் இரு ரியாக்ஷன்களில் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
    ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கென புதிய செயலியை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து வீசாட் போன்ற செயலியை (சூப்பர்-ஆப்) உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் புதிய செயலிக்கான நிதி, தொழில்நுட்ப வசதி மற்றும் இதர பணிகளை கவனிக்க இருக்கின்றன. 

    முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இதுகுறித்த பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஃபேஸ்புக்

    புதிய சூப்பர்-ஆப் செயலியை கொண்டு பயனர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைக்கும் நோக்கில் உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. சீனாவில் வீசாட் செயலி குறுந்தகவல் மட்டுமின்றி உணவு ஆர்டர் செய்வது, கால் டாக்சி, விமான சீட்டு மற்றும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை புதிய செயலி கொண்டு ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர் மூலம் மளிகை பொருட்களையும் விற்பனை செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த செயலியை கொண்டு ஜியோமனி மூலம் பண பரிமாற்றம் மற்றும், பேமன்ட் சேவையை பயன்படுத்தலாம் என தெரிகிறது.
    ரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட் டிவி விவரங்கள் ப்ளூடூத் வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.



    ஸ்மார்ட்போன் சந்தையை தொடர்ந்து ஃபிட்னஸ் சந்தையில் களமிறங்கிய ரியல்மி பிராண்டு, தற்சமயம் டிவி சந்தையிலும் களமிறங்க இருக்கிறது. அந்த வகையில் ரியல்மி பிராண்டின் இரண்டு புதிய எல்இடி டிவி மாடல்கள் ப்ளூடூத் எஸ்ஐஜி வலைதளத்தில் லீக் ஆகியிருக்கிறது.

    சில தினங்களுக்கு முன் ரியல்மி ஸ்மார்ட் டிவி ரிமோட் கண்ட்ரோல் ப்ளூடூத் சான்று பெற்றதாக தகவல் வெளியானது. ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி பிராண்டு தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருந்தார். கடந்த மாதம் ரியல்மி பிராண்டு தனது முதல் ஃபிட்னஸ் பேண்ட் சாதனத்தை அறிமுகம் செய்திருந்தது.  

    தற்சமயம் ப்ளூடூத் எஸ்ஐஜி தளத்தில் வெளிாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி பிராண்டு தனது ஸ்மார்ட் டிவிக்களை 43 இன்ச் மற்றும் 32 இன்ச் என இரண்டு அளவுகளில் வெளியிடும் என தெரியவந்துள்ளது. மேலும் இரு டிவி மாடல்களிலும் ப்ளூடூத் 5 வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    ரியல்மி டிவி

    முன்னதாக ரியல்மி 43 இன்ச் எல்இடி டிவி மாடல் இந்திய தரத்தை உறுதிப்படுத்தும் வலைதளத்தின் மூலம் வெளியாகி இருந்தது. இரு மாடல்கள் தவிர ரியல்மி பிராண்டு 55 இன்ச் அளவிலும் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

    முன்னதாக 2020 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ரியல்மி டிவி சீரிஸ் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. பின் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக இது தள்ளிவைக்கப்பட்டது.

    ரியல்மி டிவி சீரிஸ் சிறப்பம்சங்கள் அறியப்படவில்லை என்றாலும், இவற்றில் அல்ட்ரா ஹெச்டி மாடல்கள் ஹெச்டிஆர் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.  இத்துடன் இவை கஸ்டரம் யூசர் இன்டர்பேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
    கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்த ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன.



    ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசாங்கங்கள் மற்றும் ஆரோக்கிய நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருக்கின்றன. இரு நிறுவனங்களும் சேர்ந்து ஏபிஐக்களை வெளியிட்டு சிஸ்டம் தக தொழில்நுட்பத்தை கொண்டு காண்டாக்ட் டிரேசிங் செய்ய இருக்கின்றன.

    ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் மே மாத வாக்கில் ஏபிஐ-க்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஏபிஐ-க்கள் பொது சுகாதார அதிகாரிகள் பயன்படுத்தும் செயலிகள் இயக்கப்படும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ செயலிகள் அந்தந்த ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும்.

    வரும் மாதங்களில் இரு நிறுவனங்களும் இணைந்து ப்ளூடூத் சார்ந்து இயங்கும் விரிவான காண்டாக்ட் டிரேசிங் பிளாட்ஃபார்மை உருவாக்கும் பணிகளில் ஈடபட இருக்கின்றன. இரு நிறுவனங்கள் கூட்டணியின் ஒருகட்டமாக ஆப்பிள் மற்றும் கூகுள் தொழில்நுட்ப திட்ட வரைவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றன.
    சாம்சங் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு வழங்க பிரத்யேகமாக எக்சைனோஸ் பிராசஸரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனம் சொந்தமாக எக்சைனோஸ் பிராசஸர்களை கடந்த சில ஆண்டுகளாக தனது சாதனங்களில் பயன்படுத்தி வருகிறது. தற்சமயம் சாம்சங் நிறுவனம் ஏஎம்டி கிராஃபிக்ஸ் கொண்ட புதிய எக்சைனோஸ் பிராசஸரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. இது GPU செயல்திறனை வெகுவாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீப காலங்களில் சாம்சங் தவிர மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் எக்சைனோஸ் பிராசஸர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்காக புதிய சிப்செட்  ஒன்றை பிரத்யேகமாக  உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

    சாம்சங் எக்சைனோஸ்

    சாம்சங் உருவாக்கும் புதிய எக்சைனோஸ் பிராசஸர் 2X ARM கார்டெக்ஸ் A78 கோர்கள் + 2X ARM கார்டெக்ஸ் A76 கோர்கள் + 4X ARM கார்டெக்ஸ் A55 கோர்கள் அடங்கிய ஆக்டா கோர் சிபியு 5 நானோமீட்டர் எல்பிஇ வழிமுறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் மாலி MP20 Borr GPU மற்றும் கூகுள் என்பியு, விஷூவல் கோர் ஐஎஸ்பி பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. 

    பிரத்யேக பிராசஸரை உருவாக்க சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 30 பேர் அடங்கிய குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த குழு புதிய சிப்செட் வடிவமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்த குழு ஃபேஸ்புக்கின் விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சாதனங்களுக்கான சிப்செட்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குழு எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    சாம்சங் உருவாக்கும் பிரத்யேக சிப்செட் இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது எதிர்கால பிக்சல் ஸ்மார்ட்போன்கள், குரோம்புக் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இதுபற்றிய விவரங்கள் வரும் மாதங்களில் வெளியாகலாம்.
    வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கும் புதிய சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனம்  #RechargeforGood எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ரீசார்ஜ் செய்ய தெரியாத அல்லது இணைய வசதி இல்லாத குடும்பத்தார், நண்பர் அல்லது எவருக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்யலாம். 

    இவ்வாறு ரீசார்ஜ் செய்வோருக்கு வோடபோன் ஐடியா சார்பில் ரீசார்ஜ் தொகையில் 6 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. கேஷ்பேக் சலுகை மைவோடபோன் செயலி அல்லது மைஐடியா செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரீசார்ஜ்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. 

    வோடபோன் ஐடியா

    இந்த சலுகையை பெற வாடிக்கையாளர்கள்:

    - மைவோடபோன் அல்லது மைஐடியா செயலியில் லாக் இன் செய்து ஏதேனும் தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்

    - ரீசார்ஜ் செய்யப்பட்ட தொகைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்த வாடிக்கையாளர் கணக்கில் கேஷ்பேக் தொகை கூப்பன் வடிவில் சேர்க்கப்படும்

    - இந்த கூப்பன்களை வாடிக்கையாளர் மேற்கொள்ளும் அடுத்தடுத்த ரீசார்ஜ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வோடபோன் ஐடியா அறிவித்து இருக்கும் #RechargeforGood திட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    ஆப்பிள் நிறுவனத்தின் ஓவர் இயர் ஹெட்போன் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் இது ஏர்பாட்ஸ் எக்ஸ் என அழைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.



    ஆப்பிள் நிறுவனம் புதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இது ஏர்பாட்ஸ் எக்ஸ் என அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் பட்ஜெட் ரக மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர ஆப்பிள் நிறுவனம் புதிய ஓவர் இயர் ஹெட்போன்களையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய ஏர்பாட்ஸ் எக்ஸ் இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஓவர் இயர் ஹெட்போனும் இந்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. 

    ஆப்பிள் ஓவர் இயர் ஹெட்போன்கள் B515மற்றும் ஏர்பாட்ஸ் எக்ஸ் B517 எனும் குறியீட்டு பெயர்களில் உருவாகி வருகிறது. இவற்றில் ஒரு மாடல் 2020 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஹெட்போன்களின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    ஆப்பிள்

    ஹெட்போன்கள் தவிர ஆப்பிள் நிறுவனம் விரைவில் ஐபோன் எஸ்இ 2020 மாடலை அறிமுகம் செய்யலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஐபோன் எஸ்இ 2020 விநியோகம் மே 1 ஆம் தேதி முதல் துவங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம்.  

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் பார்க்க ஐபோன் 7 அல்லது ஐபோன் 8 சீரிஸ் போன்று காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. சிறப்பம்சங்களை பொருத்தவரை 4.7 இன்ச் எல்.சி.டி. பேனல், டச் ஐடி ஹோம் பட்டன், ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    புகைப்படங்களை எடுக்க ஒற்றை பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் டச் ஐடி பட்டன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்னதாக 2016 மார்ச் மாதத்தில் ஐபோன் 5எஸ் மாடலில் புதிய அம்சங்களை சேர்த்து ஐபோன் எஸ்இ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    ஸ்மார்ட்போன் சந்தையில் 192 எம்பி பிரைமரி கேமரா கொண்ட மாடல்கள் விரைவில் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.



    ஸ்மார்ட்போன்களில் ஃபிளாக்ஷிப் மற்றும் மிட் ரேன்ஜ் பிரிவு கேமரா மெகாபிக்சல்களை வழங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் கேமராக்கள் 13 முதல் 21 எம்பி வரையிலான சென்சார்களுடன் அறிமுகம் செய்யும் வழக்கம் நீடித்தது.

    எனினும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த வழக்கம் மாறி 48 எம்பி, 64 எம்பி மற்றும் 108 எம்பி வரையிலான சென்சார்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் 192 எம்பி சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய 192 எம்பி சென்சார் ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சென்சார் பற்றிய விவரங்கள் அடுத்த மாத வாக்கில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் SM7250 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்

    இது மிட் ரேன்ஜ் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் ஆகும். அந்த வகையில் அதிக கேமரா ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் 192 எம்பி கேமரா சென்சாரை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. எனினும், அதிக மெகாபிக்சல் இருப்பினும் இதில் ஹெச்டிஆர் மற்றும் பொதுவான மல்டி ஃபிரேம் பிராசஸிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படாது. இதனால் 192 எம்பி ஷாட் கேமரா செயலியில் பிரத்யேக மோட் போன்று வழங்கப்படும்.
    ×