search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPad Air"

    • புது ஐபேட்கள் இருவித அளவுகளில் கிடைக்கும்.
    • இதுவே வெளியீட்டை தாமதப்படுத்தி இருக்கிறது.

    ஆப்பிள் நிருவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், புது ஐபேட் மாடல்களின் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஆப்பிள் டேப்லெட் மாடல்கள் மே மாத வாக்கில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில், "ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களை மே மாத துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது."

    "புது ஐபேட் ப்ரோ மாடல்களில் OLED டிஸ்ப்ளே தொழில்நுட்பம், மேஜிக் கீபோர்டு, புதிய M3 சிப்செட்கள் வழங்கப்படலாம். புதிய ஐபேட் ஏர் மாடல்கள் 11.9 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐபேட் மாடல்களின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். புது ஐபேட் ப்ரோ மாடல்களில் உள்ள OLED டிஸ்ப்ளேவை அசெம்பில் செய்ய சிக்கலான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதே, வெளியீட்டை தாமதப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 10 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தது. இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில் டெவலப்பர்கள் ஆப்பிள் குழுவினரை நேரில் சந்தித்து உரையாட சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் ஆப்பிள் பென்சில் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய 10.5 இன்ச் ஐபேட் ஏர் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இரு சாதனங்களிலும் ஆப்பிளின் சக்திவாய்ந்த ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் மினி ஆப்பிள் பென்சில் வசதியுடன் மேம்பட்ட அதிநவீன ரெட்டினா டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ட்ரூ டோன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இரு சாதனங்களும் 8 எம்.பி. பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

    முன்பக்கம் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியுடன் கிடைக்கும் புதிய ஐபேட் மினி கொண்டு எந்நேரமும் ஸ்கெட்ச் அல்லது குறிப்பு எடுக்கலாம்.



    ஆப்பிள் ஐபேட் ஏர் 10.5 இன்ச் (2019) / ஆப்பிள் ஐபேட் மினி (2019) சிறப்பம்சங்கள்

    - ஐபேட் ஏர் - 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஐபேட் மினி - 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஏ12 பயோனிக் 7 என்.எம். பிராசஸர், எம்12 மோஷன் கோ பிராசஸர்
    - 64 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஐ.ஓ.எஸ். 12
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
    - 7 எம்.பி. ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி எல்.டி.இ. (வேரியன்ட்), வைபை, ப்ளூடூத் 5.0
    - டச் ஐ.டி.
    - ஐபேட் ஏர் 30.2 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
    - ஐபேட் மினி 19.1 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி சாதனங்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஐபேட் மினி வைபை மாடல் விலை ரூ.34,900, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.45,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐபேட் ஏர் 10.5 இன்ச் வைபை மாடல் விலை ரூ.44,900 என்றும் வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆப்பிள் பென்சில் சாதனம் ரூ.8,500 விலையில் கிடைக்கிறது. 10.5 இன்ச் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ.3500 விலையில் தனியே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் முதல் விநியோகம் துவங்குகிறது. இந்தியாவில் இரு சாதனங்களும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ×