முற்றிலும் புதிய ஐபேட் ஏர் - முதல் முறையாக இரு அளவுகளில் அறிமுகம் செய்த ஆப்பிள்

ஐபேட் ஏர் மாடல் இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. ஐபேட் ஏர் அதிகபட்சம் 1 டி.பி. மெமரி கொண்டுள்ளது.
முற்றிலும் புதிய ஐபேட் ஏர் - முதல் முறையாக இரு அளவுகளில் அறிமுகம் செய்த ஆப்பிள்
Published on

ஆப்பிள் நிறுவனம் தனது லெட் லூஸ் (Let Loose) நிகழ்ச்சியில் முற்றிலும் புதிய ஐபேட் ஏர் மாடல்களை அறிமுகம் செய்தது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக ஐபேட் ஏர் மாடல் 11 இன்ச் மற்றும் 13 இன்ச் என இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐபேட் ஏர் மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் M2 சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த பிராசஸர் ஏ.ஐ. சார்ந்த அம்சங்களை இயக்குவதற்கு ஏற்ற திறன் கொண்டிருக்கிறது. புதிய ஐபேட் ஏர் மாடல் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் சப்போர்ட் உடன் கிடைக்கிறது.

நான்கு வித நிறங்களில் கிடைக்கும் புதிய ஐபேட் ஏர் மாடல் குறைந்தபட்சம் 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கின்றன. புதிய ஐபேட் ஏர் மாடல்கள் ஐந்துவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 12MP கேமரா, டச் ஐ.டி., வைபை 6E போன்ற வசதிகள் உள்ளன. 

X

Maalai Malar
www.maalaimalar.com