search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Apple Pencil"

    • ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும்.
    • புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் சப்போர்ட் செய்கிறது.

    ஐபேட் பயனர்களுக்கு அதிக விருப்பங்களை வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய மற்றும் சற்றே குறைந்த விலை ஆப்பிள் பென்சில் (யு.எஸ்.பி. சி) மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்டைலஸ்-இல் பிக்சல் பெர்ஃபெக்ட் அக்யூரசி, லோ லேடன்சி மற்றும் டில்ட் சென்சிடிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய ஆப்பிள் பென்சில் மாடலில் மிக மெல்லிய வடிவமைப்பு, மேட் ஃபினிஷ் மற்றும் மேக்னடிக் ஃபிளாட் சைட் உள்ளது. இதை கொண்டு பென்சிலை ஐபேட்-இன் பக்கவாட்டில் கச்சிதமாக வைத்துக் கொள்ள முடியும். இதில் உள்ள யு.எஸ்.பி. சி போர்ட் ஐபேட் உடன் இணைந்து கொண்டு யு.எஸ்.பி. சி கேபிள் மூலம் சார்ஜ் ஆகும்.

     

    பேட்டரியை சேமிக்கும் நோக்கில், இதனை ஐபேட் உடன் இணைத்ததும் ஆப்பிள் பென்சில் ஸ்லீப் நிலைக்கு சென்றுவிடும். இந்த மாடலில் பிரெஷர் சென்சிடிவிட்டி அம்சம் வழங்கப்படவில்லை. புதிய ஆப்பிள் பென்சில் ஐபேட் ஓ.எஸ். அம்சங்கள் அனைத்திற்கும் முழுமையாக சப்போர்ட் செய்கிறது. இந்த மாடல் யு.எஸ்.பி. சி போர்ட் கொண்ட ஐபேட் மாடல்கள் அனைத்திலும் பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ஆப்பிள் பென்சில் யு.எஸ்.பி. சி மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அடுத்த மாத துவக்கத்தில் துவங்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் இந்த மாடலை ரூ. 6 ஆயிரத்து 900 விலையிலேயே வாங்கிட முடியும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் ஆப்பிள் பென்சில் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய 10.5 இன்ச் ஐபேட் ஏர் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இரு சாதனங்களிலும் ஆப்பிளின் சக்திவாய்ந்த ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் மினி ஆப்பிள் பென்சில் வசதியுடன் மேம்பட்ட அதிநவீன ரெட்டினா டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ட்ரூ டோன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இரு சாதனங்களும் 8 எம்.பி. பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

    முன்பக்கம் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியுடன் கிடைக்கும் புதிய ஐபேட் மினி கொண்டு எந்நேரமும் ஸ்கெட்ச் அல்லது குறிப்பு எடுக்கலாம்.



    ஆப்பிள் ஐபேட் ஏர் 10.5 இன்ச் (2019) / ஆப்பிள் ஐபேட் மினி (2019) சிறப்பம்சங்கள்

    - ஐபேட் ஏர் - 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஐபேட் மினி - 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஏ12 பயோனிக் 7 என்.எம். பிராசஸர், எம்12 மோஷன் கோ பிராசஸர்
    - 64 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஐ.ஓ.எஸ். 12
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
    - 7 எம்.பி. ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி எல்.டி.இ. (வேரியன்ட்), வைபை, ப்ளூடூத் 5.0
    - டச் ஐ.டி.
    - ஐபேட் ஏர் 30.2 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
    - ஐபேட் மினி 19.1 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி சாதனங்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஐபேட் மினி வைபை மாடல் விலை ரூ.34,900, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.45,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐபேட் ஏர் 10.5 இன்ச் வைபை மாடல் விலை ரூ.44,900 என்றும் வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆப்பிள் பென்சில் சாதனம் ரூ.8,500 விலையில் கிடைக்கிறது. 10.5 இன்ச் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ.3500 விலையில் தனியே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் முதல் விநியோகம் துவங்குகிறது. இந்தியாவில் இரு சாதனங்களும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ×