search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iPad Mini"

    • ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புது சாதனங்கள் பற்றிய தகவல் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.
    • அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிள் புது சாதனங்களை அறிமுகம் செய்யும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    பிரபல ஆப்பிள் நிறுவன வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்டு இருக்கும் புது தகவல்களின் படி, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புது ஐபேட் மினி மாடலை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த மாடலின் உற்பத்தி அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்றும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார்.

    அடுத்த ஐபேட் மினி மாடலின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக புது பிராசஸர் அல்லது சிப் இருக்கும் என்றும் கியோ தெரிவித்துள்ளார். புது சிப் மூலம் அடுத்த தலைமுறை ஐபேட் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. ஏப்ரல் மாத வாக்கில் கியோ வெளியிட்டு இருந்த தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் 2024 வாக்கில் வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.

    பின் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய சாதனம் ஐபேட் அல்லது ஐபோனாக இருக்கும் என்றும் இது 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார். ஆப்பிள் நிறுவனத்தின் சிறிய டேப்லெட்-க்கு மாற்றாக மடிக்கக்கூடிய சாதனம் அறிமுகம் செய்யப்படாது. மாறாக மடிக்கக்கூடிய ஐபேட் மினி விலை உயர்ந்த சாதனமாக அறிமுகமாகும் என மிங் சி கியோ தெரிவித்துள்ளார்.

    ரிடிசைன் செய்யப்பட்ட ஐபேட் மினி 6 மாடல் 2023 ஆண்டு இறுதியிலோ அல்லது 2024 ஆண்டு வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபேட் மினி 6 மாடலில் 8.3 இன்ச் லிக்விட் கூல்டு ரெட்டினா டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஐபேட் மினி விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் 8.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புது ஐபேட் மினி மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. வெளியீட்டை தொடர்ந்து ஐபேட் மினி மாடலில் ஜெல்லி ஸ்கிராலிங் எனும் பிரச்சினை ஏற்பட்டது.

    எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் இதுபோன்ற பிரச்சினை சாதாரண ஒன்று தான் என ஆப்பிள் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், ஜெல்லி ஸ்கிராலிங் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆப்பிள் ஐபேட் மினி 6 மாடலின் புது வேரியண்ட் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     ஐபேட் மினி

    அதன்படி புதிய ஐபேட் மினி 120 ஹெர்ட்ஸ் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே டிஸ்ப்ளேவினை ஆப்பிள் 2017 முதல் வெளியாகி வரும் ஐபேட் ப்ரோ மாடல்களில் வழங்கி வருகிறது. சமீபத்திய ஐபோன் 13 ப்ரோ மாடலிலும் இதே டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபேட் ஏர், ஐபேட் மினி சாதனங்கள் ஆப்பிள் பென்சில் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #Apple



    ஆப்பிள் நிறுவனம் புதிய 10.5 இன்ச் ஐபேட் ஏர் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இரு சாதனங்களிலும் ஆப்பிளின் சக்திவாய்ந்த ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஐபேட் மினி ஆப்பிள் பென்சில் வசதியுடன் மேம்பட்ட அதிநவீன ரெட்டினா டிஸ்ப்ளே பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவில் ட்ரூ டோன் தொழில்நுட்பம் மற்றும் வைடு கலர் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இரு சாதனங்களும் 8 எம்.பி. பிரைமரி கேமரா, குறைந்த வெளிச்சத்திலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்கும் வசதியுடன் கிடைக்கிறது.

    முன்பக்கம் 7 எம்.பி. கேமரா வழங்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியுடன் கிடைக்கும் புதிய ஐபேட் மினி கொண்டு எந்நேரமும் ஸ்கெட்ச் அல்லது குறிப்பு எடுக்கலாம்.



    ஆப்பிள் ஐபேட் ஏர் 10.5 இன்ச் (2019) / ஆப்பிள் ஐபேட் மினி (2019) சிறப்பம்சங்கள்

    - ஐபேட் ஏர் - 10.5 இன்ச் 2224x1668 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஐபேட் மினி - 7.9 இன்ச் 2048x1536 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஏ12 பயோனிக் 7 என்.எம். பிராசஸர், எம்12 மோஷன் கோ பிராசஸர்
    - 64 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
    - ஐ.ஓ.எஸ். 12
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.4, 5P லென்ஸ், ஹைப்ரிட் ஐ.ஆர். ஃபில்ட்டர்
    - 7 எம்.பி. ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்
    - டூயல் மைக்ரோபோன்
    - 4ஜி எல்.டி.இ. (வேரியன்ட்), வைபை, ப்ளூடூத் 5.0
    - டச் ஐ.டி.
    - ஐபேட் ஏர் 30.2 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி
    - ஐபேட் மினி 19.1 வாட் லித்தியம் பாலிமர் பேட்டரி

    புதிய ஐபேட் ஏர் மற்றும் ஐபேட் மினி சாதனங்கள் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. ஐபேட் மினி வைபை மாடல் விலை ரூ.34,900, வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.45,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஐபேட் ஏர் 10.5 இன்ச் வைபை மாடல் விலை ரூ.44,900 என்றும் வைபை மற்றும் செல்லுலார் மாடல் விலை ரூ.55,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் ஆப்பிள் பென்சில் சாதனம் ரூ.8,500 விலையில் கிடைக்கிறது. 10.5 இன்ச் ஐபேட் ஏர் மாடலுக்கான ஸ்மார்ட் கீபோர்டு ரூ.3500 விலையில் தனியே விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய ஐபேட் மாடல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பதிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் முதல் விநியோகம் துவங்குகிறது. இந்தியாவில் இரு சாதனங்களும் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadmini5 #Apple



    ஆப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.

    ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கென அதிகளவு ஐபேட் மினி சாதனங்களின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுதிறது.



    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தனது சிறிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்த தகவல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஐபேட் மினி, குறைந்த விலை டிஸ்ப்ளே பேனலுடன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.
     
    ஆறாம் தலைமுறை 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக ஆப்பிள் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடலை அறிமுகம் செய்யலாம். இந்த ஐபேட் மாடலில் 10-இன்ச் டிஸ்ப்ளே மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இரு விலை குறைந்த ஐபேட் மாடல்களை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.

    அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் கொரியாவில் தயாரிக்கப்படும் எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை புதிய சாதனங்களில் வழங்கலாம் என கூறப்படுகிறது.
    ×