என் மலர்

  நீங்கள் தேடியது "iPad Pro"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட சில ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது. #ipadpro2018  ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் இந்திய ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில விற்பனையாளர்களிடம் ஆஃப்லைன் விற்பனை நடைபெற்று வருகிறது. 

  எனினும், நவம்பர் 23ம் தேதி முதல் பெரும்பாலான விற்பனை மையங்களில் புது ஐபேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அடுத்த வாரம் முதல் பிளிப்கார்ட், அமேசான் துவங்கி பல்வேறு விற்பனையகங்களில் புது ஐபேட் ப்ரோ மாடல்கள் கிடைக்கும்.

  புது 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வின் போது புதிய ஐபேட் ப்ரோ மாடல்களின் இந்திய வெளியீடு குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.   2018 ஐபேட் ப்ரோ இந்திய விலை மற்றும் சலுகைகள்:

  ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி வேரின்ட்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 11 இன்ச் ஐபேட் ப்ரோ மாடல் விலை ரூ.71,900 முதல் துவங்குகிறது. இதேபோன்று 12.9 இன்ச் மாடல் விலை ரூ.89,900 முதல் துவங்குகிறது.

  இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என்றும் 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் விலை முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  2018 ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

  புதிய 2018 ஐபேட் ப்ரோ 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே பேனல்களை கொண்டுள்ளது. புது ஐபேட் ப்ரோ 5.9 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. 2018 ஐபேட் ப்ரோ மாடல்களில் முதல் முறையாக நியூரல் என்ஜின் கொண்ட A12X பயோனிக் சிப்செட் மற்றும் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.

  இதனுடன் ட்ரூ டெப்த் கேமரா மூலம் இயங்கும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் மாடல்களை போன்றே புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் போர்டிரெயிட் மற்றும் லேன்ட்ஸ்கேப் மோட்களில் வேலை செய்கிறது. மேலும் புது ஐபேட் ப்ரோ மாடல்களில் ஐபோன் X போன்ற ஜெஸ்ட்யூர் நேவிகேஷன் கொண்டுள்ளது.

  மேலும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்ட முதல் ஐ.ஓ.எஸ். சாதனமாக புது ஐபேட் ப்ரோ மாடல்கள் இருக்கின்றன. இவை சார்ஜிங், தகவல் பரிமாற்றம் மற்றும் கனெக்டிவிட்டி வசதிகளை வழங்குகிறது. புது ஐபேட் ப்ரோ மாடல்களில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் நீக்கப்பட்டுள்ளது. 

  புது ஐபேட் மாடல்களில் 12 எம்.பி. பிரைமரி கேமரா சென்சார், ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் மற்றும் 4K வீடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி 10 மணி நேர பேக்கப் வழங்குவதோடு, 18 வாட் பவர் அடாப்டர் ஒன்றும் வழங்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #ipadpro2018  ஐபேட் ப்ரோ 2018 இந்திய வெளியீட்டு தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு டேப்லெட் மாடல்களும் இந்தியாவில் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இதன் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. 

  2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் இரண்டு ஐபேட் மாடல்களின் துவக்க விலையை ஆப்பிள் அறிவித்தது.

  இந்தியாவில் 2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11-இன்ச் மாடல் இந்திய விலை ரூ.71,900ல் துவங்குகிறது. 12.9-இன்ச் மாடலின் இந்திய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்:

  - 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
  - ஆப்பிள் ஏ12X பயோனிக் 7என்.எம். பிராசஸர்
  - 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
  - மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி
  - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
  - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2018 ஐபேட் ப்ரோ சாதனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #iPad2018  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படவில்லை, ஐபோன் X மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை போன்ற ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் அதிகம் மேம்பட்ட நிலையில், புதிய டேப்லெட்டில் ஆப்பிள் வழங்கியுள்ளது.

  புதிய ஐபேட் ப்ரோ மாடல் 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. புதிய ஐபேட் ப்ரோ ஏ12X 7என்.எம். பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஏ12X பிராசஸரில் 8-கோர் சி.பி.யு., சிங்கிள் கோர் செயல்திறன் கொண்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 35 சதவிகிதம் வேகமாகவும், 90 சதவிகிதம் வேகமாகவும் இருக்கிறது.

  புதிய ஏ12X பயோனிக் சிப்செட்டில் இருமடங்கு கிராஃபிக்ஸ் செயல்திறன் மற்றும் ஒரு நாள் முழுக்க பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, யு.எஸ்.பி. டைப்-சி வழங்கப்பட்டுள்ளது.   ஐபேட் ப்ரோ சிறப்பம்சங்கள்:

  - 10.5 இன்ச், 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
  - ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம்
  - ஜெஸ்ட்யூர் இன்டர்ஃபேஸ்
  - ஏ12X பயோனிக் பிராசஸர், நியூரல் என்ஜின்
  - ட்ரூ டெப்த் கேமரா
  - குரூப் ஃபேஸ் டைம்
  - 12 எம்.பி. கேமரா, மேம்படுத்தப்பட்ட ட்ரூ டோன் ஃபிளாஷ்
  - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
  - 1000 ஜி.பி. மெமரி
  - யு.எஸ்.பி. டைப்-சி
  - புதிய ஆப்பிள் பென்சில்

  புதிய ஐபேட் ப்ரோ மாடலுடன் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் பென்சில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பென்சில் ஐபேட் உடன் இணைந்து கொள்ள காந்த சக்தியும், தானாக சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளது. 

  புதிய ஐபேட் ப்ரோ 10.5 இன்ச் விலை 649 டாலர்கள், 11.0 இன்ச் விலை 799 டாலர்களும், 12.9 இன்ச் விலை 999 டாலர்கள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு இன்று துவங்கி இருக்கும் நிலையில், நவம்பர் 7ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் ப்ரோ மாடல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #ipadpro


  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று புதிய ஐபோன்களுடன், புதிய ஆப்பிள் வாட்ச், விலை குறைந்த மேக்புக் ஏர் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் விரைவில் வெளியாக இருக்கும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சற்றே சிறியதாகவும், ஸ்மார்ட் கனெக்டர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, ஹெட்போன் ஜாக் இல்லாமல் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

  மேலும் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் 10.5 இன்ச் டிஸ்ப்ளே, அளவுகளில் 247.5மில்லிமீட்டர் உயரம், 178.7மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6மில்லிமீட்டர் தடிமனாக இருக்கிறது. இது தற்போதைய மாடலில் இருப்பதை விட சிறியதாகும். 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மாடலை பொருத்த வரை 280மில்லிமீட்டர் உயரம், 215மில்லிமீட்டர் அகலம் மற்றும் 6.4 மில்லிமீட்டர் தடிமனாக இருக்கும் என கூறப்படுகிறது. 

  புதிய வடிவமைப்புகளின் படி ஐபேட் மெல்லிய பெசல்களுடன் பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இதில் ஹோம் பட்டன் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய சாதனத்தில் ட்ரூடெப்த் கேமரா சிஸ்டம் மூலம் ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படலாம். இதேபோன்று புதிய ஐபேட் மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படாது என கூறப்படுகிறது.  ஐபோன்களில் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் நீக்கப்பட்டு பெரிய பேட்டரி, டாப்டிக் இன்ஜின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, எனினும் இதேபோன்று ஐபேட் மாடலில் ட்ரூ டெப்த் கேமரா சிஸ்டம் வழங்க இடவசதியில்லாத நிலை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஐபேட் ப்ரோ மாடலில் டைமன்ட் கட் முன்புறம் மற்றும் பின்பக்கம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதேபோன்று புதிய ஐபேட் மாடல்களில் ஸ்மார்ட் கனெக்டர் பக்கவாட்டில் இருந்து லைட்னிங் போர்ட் அருகே கீ்ழ்பக்கமாக மாற்றப்படுகிறது. இதனால் சற்றே செங்குத்தான கீபோர்டு இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் ஃபேஸ் ஐடி அம்சம் தான் என்றும், இது செங்குத்தான நிலையில் மட்டுமே வேலை செய்யும், எனினும் ஐபேட் ப்ரோ மாடல்களில் ஃபேஸ் ஐடி கிடைமட்டமாக வேலை செய்யும் படி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான அம்சம் ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. #ipadpro #Apple
  ×