என் மலர்

  தொழில்நுட்பம்

  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி
  X

  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #ipadpro2018  ஐபேட் ப்ரோ 2018 இந்திய வெளியீட்டு தேதி ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு டேப்லெட் மாடல்களும் இந்தியாவில் நவம்பர் 16ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இதன் முன்பதிவு இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளது. 

  2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12.9-இன்ச் மாடல்கள் அக்டோபர் 31ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும் இரண்டு ஐபேட் மாடல்களின் துவக்க விலையை ஆப்பிள் அறிவித்தது.

  இந்தியாவில் 2018 ஐபேட் ப்ரோ 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 11-இன்ச் மாடல் இந்திய விலை ரூ.71,900ல் துவங்குகிறது. 12.9-இன்ச் மாடலின் இந்திய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இரண்டாம் தலைமுறை ஆப்பிள் பென்சில் விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்மார்ட் ஃபோலியோ கேஸ் 11-இன்ச் மற்றும் 12-இன்ச் மாடல்கள் முறையே ரூ.7,500 மற்றும் ரூ.9,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ விலை முறையே ரூ.15,900 மற்றும் ரூ.17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  ஐபேட் ப்ரோ 2018 சிறப்பம்சங்கள்:

  - 11.0 இன்ச் மற்றும் 12.9 இன்ச் எல்.சி.டி. ப்ரோமோஷன் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
  - ஆப்பிள் ஏ12X பயோனிக் 7என்.எம். பிராசஸர்
  - 64 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1000 ஜி.பி. மெமரி
  - 12 எம்.பி. பிரைமரி கேமரா, ட்ரூ டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
  - மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி
  - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
  - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
  - 10 மணி நேர பேட்டரி பேக்கப்
  Next Story
  ×