என் மலர்

  அறிந்து கொள்ளுங்கள்

  ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களின் வெளியீட்டு விவரம்
  X

  ஆப்பிளின் மேம்படுத்தப்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களின் வெளியீட்டு விவரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது.
  • புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐபேட் ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அதன் ஐபேட் ப்ரோ வரிசையை புதுப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபேட் ப்ரோ செப்டம்பர் அல்லது அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஐபேட் ப்ரோ மாடல் வருகிற 2023-ம் ஆண்டு வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  புதிய ஐபேட் ப்ரோ மாடலில் M2 சிப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கேமரா அமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டு வரும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் M2 SoC ஆல் இயக்கப்படும் 14.1-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் ஒரு மாடலை உருவாக்குவதாக வதந்தி பரவியது. அது இந்த ஐபேட் ப்ரோ மாடலாகத் தான் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


  ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய M2 SoC அதன் முந்தைய சிலிகான் அமைப்பான M1 ஐ விட 18 சதவிகிதம் மேம்படுத்தப்பட்ட CPU செயல்திறன் மற்றும் 35 சதவிகித GPU செயல்திறனை வழங்குகிறது, மேலும் 10-கோர் செயலிகளுடன் ஒப்பிடும்போது 1.9 மடங்கு வேகமாகவும் (CPU) 2.3 மடங்கு வேகமாகவும் (GPU) உள்ளது.

  Next Story
  ×