search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    108 எம்பி கேமரா போன்
    X
    108 எம்பி கேமரா போன்

    192 எம்பி கேமராவுடன் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள்

    ஸ்மார்ட்போன் சந்தையில் 192 எம்பி பிரைமரி கேமரா கொண்ட மாடல்கள் விரைவில் பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.



    ஸ்மார்ட்போன்களில் ஃபிளாக்ஷிப் மற்றும் மிட் ரேன்ஜ் பிரிவு கேமரா மெகாபிக்சல்களை வழங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் கேமராக்கள் 13 முதல் 21 எம்பி வரையிலான சென்சார்களுடன் அறிமுகம் செய்யும் வழக்கம் நீடித்தது.

    எனினும் சமீபத்திய ஆண்டுகளில் இந்த வழக்கம் மாறி 48 எம்பி, 64 எம்பி மற்றும் 108 எம்பி வரையிலான சென்சார்கள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் தற்சமயம் 192 எம்பி சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய 192 எம்பி சென்சார் ஸ்மார்ட்போனின் விவரங்கள் சீன வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய சென்சார் பற்றிய விவரங்கள் அடுத்த மாத வாக்கில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் SM7250 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்

    இது மிட் ரேன்ஜ் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் ஆகும். அந்த வகையில் அதிக கேமரா ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் 192 எம்பி கேமரா சென்சாரை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது. எனினும், அதிக மெகாபிக்சல் இருப்பினும் இதில் ஹெச்டிஆர் மற்றும் பொதுவான மல்டி ஃபிரேம் பிராசஸிங் போன்ற அம்சங்கள் வழங்கப்படாது. இதனால் 192 எம்பி ஷாட் கேமரா செயலியில் பிரத்யேக மோட் போன்று வழங்கப்படும்.
    Next Story
    ×