என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஷ்பேக்"

    • வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
    • வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் CCPA உத்தரவிட்டுள்ளது.

    நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரப்பிடோ (Rapido) நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 கேஷ்பேக்" மற்றும் ""Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.

    ராப்பிடோ காயின்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், குறிப்பிட்ட பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் அதன் மதிப்பு குறைகிறது.

    இந்த விளம்பரங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதனால், ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை ரப்பிடோ நிறுவனம் 1,200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார்களைப் பெற்றுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.

    இந்நிலையில் கேஷ்பேக் பலன்களை வழங்குவதாகக் கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக அந்நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), ரப்பிடோ (Rapido) நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

    அபராதத்துடன் சேர்த்து, தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஐடியா செல்லுலார் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் குறிப்பிட்ட தொகை கேஷ்பேக் வடிவில் திரும்ப வழங்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐடியா செல்லுலார் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ்களுக்கு கேஷ்பேக் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையை கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும். இந்த சலுகையை பெற அனைத்து ரீசார்ஜ்களும் மை ஐடியா செயலி அல்லது ஐடியா வலைத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இத்துடன் ஐடியா அறிவித்திருக்கும் மற்றொரு திட்டத்தில் அன்லிமிட்டெட் ரீசார்ஜ் செய்யும் போது பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் கேஷ்பேக், கார்கள், பைக்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வென்றிட முடியும். ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ள ஐடியா அறிவித்திருக்கும் புதிய வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.

    ஜூன் 5 முதல் ஆகஸ்டு 15-ம் தேதி வரை ஐடியா செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த கூப்பனை ரூ.199 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    ரூ.199 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், ரோமிங், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஐடியா பிரீபெயிட் ரூ.398 சலுகையில் முந்தைய ரூ.199 சலுகையில் வழங்கப்பட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. எனினும் ரூ.398 சலுகையில் 70 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.199 சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது.

    சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் இதே போன்ற சலுகையை அறிவித்தது. இதில் ரூ.399 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 கேஷ்பேக் வழங்கப்பட்டது.
    ×