என் மலர்
நீங்கள் தேடியது "Consumer Commission"
- வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
- வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் CCPA உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரப்பிடோ (Rapido) நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 கேஷ்பேக்" மற்றும் ""Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
ராப்பிடோ காயின்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், குறிப்பிட்ட பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் அதன் மதிப்பு குறைகிறது.
இந்த விளம்பரங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதனால், ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை ரப்பிடோ நிறுவனம் 1,200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார்களைப் பெற்றுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் கேஷ்பேக் பலன்களை வழங்குவதாகக் கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக அந்நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), ரப்பிடோ (Rapido) நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அபராதத்துடன் சேர்த்து, தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.
- மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு அழுக்கான கறை படிந்த இருக்கையை வழங்கியதற்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பாகுவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் போது அழுக்கு மற்றும் கறை படிந்த இருக்கை வழங்கப்பட்டதாகக் கூறி பிங்கி என்ற பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரை டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்வு ஆணையம் விசாரித்தது.
இந்நிலையில், குறைபாடுள்ள சேவையால் பயணிக்கு ஏற்பட்ட சிரமம் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.1.5 லட்சம் வழங்க விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்குச் செலவாக ரூ.25,000 செலுத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார்
- இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்
குன்னூர்
நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரின் குடும்பத்திற்கு ரூ.2¾ லட்சம் இழப்பீடு வழங்க கோரி குன்னூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த உபதலை காந்திநகரை சேர்ந்தவர் சபாபதி. மத்திய அரசு அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி விமலா. கடந்த 19-10-2020 அன்று உடல் நலக்குறைவு காரணமாக குன்னூரில் உள்ள நன்கம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த அவர் குணமடைந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறி வந்து உள்ளது. ஆனால் 24-10-2020 அன்று நோயாளி நினைவிழந்து விட்டார். அவரை உடனடியாக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று நன்கம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறி உள்ளனர். இந்தநிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விமலா 2-11-2020 அன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த சபாபதி இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறையிட்டார். அதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து சபாபதி ஊட்டி நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார. அதில் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் யாரும் இல்லாமல் இது போன்ற தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அனுமதித்து, நோய் மிக தீவிரம் அடைந்த நிலையில் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வைப்பது, பணம் பறிப்பதற்காக செய்யப்படும் மோசடி ஆகும். முதலுதவி மட்டும் வழங்கி விட்டு கோவை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் நோயாளி உயிர் பிழைத்திருக்கலாம். மருத்துவமனையின் அலட்சியமே எனது மனைவியின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் பி.ஆல்துரை வழக்கில் வாதாடினார். மருத்துவமனை சார்பில், நோயாளியின் தினசரி மருத்துவ குறிப்பு, தீவிர சிகிச்சை பிரிவில் செய்யப்பட்ட பதிவுகள் என எந்த ஒரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க இயலவில்லை. எனவே, சிகிச்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்து இருக்கிறது என்று கூறி, நோயாளியிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் சித்ரா உத்தரவிட்டு உள்ளார்.
- நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
- சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பவன்குமார் கிரியப்பனவர் மேற்பார்வையில் திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே துணை மாநில வரி அலுவலர் திருமால் செல்வன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர்.
சோதனையில் காரில் ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 இருந்தது. அதற்கு முறையான ஆவணம் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் பணத்தை பறிமுதல் செய்து உதவி ஆணையாளர் (தேர்தல் கணக்கு) தங்க வேல்ராஜனிடம் ஒப்படைத்தனர். அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.






