என் மலர்
இந்தியா

50 ரூபாய்க்கு ஆசை காட்டி வாடிக்கையாளர்களை கவர்ந்த Rapido.. ரூ.10,00,000 அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்
- வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
- வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் CCPA உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரு நகரங்களில் ரப்பிடோ (Rapido) நிறுவனம் பைக் டாக்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் "5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ. 50 கேஷ்பேக்" மற்றும் ""Guaranteed ஆட்டோ" போன்ற வாசகங்களைக் கொண்டு வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
வாக்குறுதியளிக்கப்பட்ட ரூ. 50 பணம் ரொக்கமாக வழங்கப்படாமல், "ராப்பிடோ காயின்களாக" கொடுக்கப்படுகிறது.
ராப்பிடோ காயின்கள் ஏழு நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், குறிப்பிட்ட பைக் சவாரிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதால் அதன் மதிப்பு குறைகிறது.
இந்த விளம்பரங்கள் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதனால், ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை ரப்பிடோ நிறுவனம் 1,200-க்கும் மேற்பட்ட நுகர்வோர் புகார்களைப் பெற்றுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட புகார்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் கேஷ்பேக் பலன்களை வழங்குவதாகக் கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக அந்நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), ரப்பிடோ (Rapido) நிறுவனத்திற்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அபராதத்துடன் சேர்த்து, தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்தவும், பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியளிக்கப்பட்ட ரூ. 50-ஐ முழுமையாகத் திருப்பித் தரவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






